பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

நான் காணாம போனதும் ஒரே ஒரு பட்டிமன்றம் தான் நடந்தது... அத்தோடு பட்டிமன்றம் காணாமல் போனது. அதான் புது தோழிகள் பலர் வருகையோடு பட்டிமன்றமும் புது பொலிவோடு நடக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் துவக்கி இருக்கேன். வழக்கமாக பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளும் தோழிகள் மற்றும் புது வரவுகள் கை கொடுத்து வெற்றி பெற செய்யும்படி கேட்டுகொள்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துட்டேன்...
நல்ல தலைப்பு...
என்னைப் பொறுத்தவரை "பெற்றோர் பிள்ளைகளை சார்ந்து இருப்பது தவறு" என்று தோன்றுகிறது.
இளமையில் எல்லாவற்றையும் குழந்தைகளுக்காக செலவழிக்காமல் தங்களுக்கும் என்று ஒரு சேமிப்பை வைத்து கொண்டால் பெற்றோர் குழந்தைகள் உறவு சிதையாமல் இருக்கும்...
மீண்டும் வருவேன்...

வனிதா சாரி சாரி... நடுவர் அவர்களே என் இனிய பட்டிமன்றம் மீண்டும் தொடங்கி விட்டீர்களா?! விட்டுடுவேனா என்ன?! எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவ்வப்போது வந்து கண்டிப்பா கலந்துக்குவேன்.

நான் இம்முறை தேன்மொழியின் அணிதான். தலைப்பில் ஒரு சந்தேகம். சார்ந்து இருப்பது என்று சொல்வது பொருளதார சார்தலைத் தானே சொல்கிறது?!

வாதத்தோடு பின்னர் வருகிறேன். இப்போது கடமை அழைக்கிறது. பை பை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம்,குழந்தைகள் யாழினி,சிவகுமரன் நலமா?பட்டிமன்றம் ஆரம்பித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.நான் சேரப்போகும் அணி பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது தவறு எனபதில் தான்,இதனைப்பற்றி பின்னர் பேசுவோம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹய் வனிதா!
பழையபடி பட்டிமன்றம் களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு உடல்நிலை சற்று சரியில்லாத காரணத்தால் என்னால் உடனடியாக பங்கேற்க முடியலை.
இருந்தாலும் நடுநடுவில் வந்து கலந்துக்க விரும்பறேன்.
நான்," பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பதில் "தவறே இல்லை" என்ற அணியில் வாதாட இருக்கிறேன்.

குழந்தைகள் எதிர்கால நலன் ஒன்றினையே குறிக்கோளாக இருக்கும் பெற்றோர்கள், தங்கள் நலனை மறந்து, பிள்ளைகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.
சுயநலமாக முதலில் "தங்களுக்கு என்று" பணத்தினை வேண்டுமானால் சேமித்து வைக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைகளுக்காக சந்தோஷமாக விரயம் செய்த இளமையை, உடல்சக்தியை எந்த வங்கியில் சேமித்து வைக்க முடியும்?

எந்த பெற்றோர் தங்கள் இளமைக்காலத்தில், தங்கள் சேமிப்பினை மறந்து, தங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்து குழந்தைகள் ஒன்றே அவர்கள் " சேமிப்பு, சொத்து" என்று வாழ்கிறார்களோ, அவர்கள் பொருளாதார ரீதியாகவோ/முதுமை காரணமாகவோ முதுமைக்காலத்தில் தங்கள் குழந்தைகளை சார்ந்து வாழ நினைப்பதில் தவறே இல்லை!

இனிய புத்தாண்டில் ஒரு அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்

இந்த தலைப்பை கொடுத்த சரோஜினிக்கு வாழ்த்துக்கள்.

பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதரரீதியாக பிள்ளைகளை முற்றிலுமாய் சார்ந்திருப்பது தவறுதான்
என்பது என் கருத்து.

முழுமையாய் இந்த பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளும் சூழ்நிலை இல்லை....முடிந்தவரை ஒரு சில பதிவுகளை போட முயற்சிக்கிறேன்.....

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆஹா பட்டிமன்றம் சூடு பிடிக்கிறதே..... ;)

தேன்மொழி.... வருக வருக. வந்து துவக்கி வெச்சுட்டீங்க. சீக்கிரம் வாதத்தோட வாங்க. மிக்க நன்றி.

கவிசிவா.... நீங்க இல்லாத பட்டிமன்றமா என்று கேட்கும் அளவு உங்க ஆதரவு பட்டிமன்றத்துக்கு இருக்கு.... ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மிக்க நன்றி.

வாங்க ஆசியா வாங்க. ரொம்ப நாளைக்கு பின் நான் இழை துவங்கி நீங்க பதிவு போடுறீங்க. அதுவே பெரிய சந்தோஷம் எனக்கு. மிக்க நன்றி. நானும் குழந்தைகளும் நலம். வாதத்தோடு வந்து கலக்குங்க.

வாங்க சாய் கீதா.... உடம்புக்கு என்ன ஆச்சு? நல்லா பாத்துக்கங்க. நீங்க மட்டும் தான் "சரி"ன்ற அணியில் இப்போதைக்கு இருக்கீங்க. பார்ப்போம் உங்களுக்கு கை கொடுக்க யார் வருகிறார்கள் என்று. மிக்க நன்றி.

ஆஹா இளவரசி நீங்க பங்கு பெற வேணும் அவசியம். உங்க கவிதை நடையோடு கூடிய வாதத்தை படிக்க நான் மட்டுமல்ல நம்ம தோழிகள் அனைவரும் விரும்புவாங்க. கண்டிப்பா வாங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிகளே,
பெற்றோர் "பொருளாதாரத்தில் " பிள்ளைகளை சார்ந்து இருப்பது தவறு என்பதை விட 'நல்லதில்லை' என்பது என் கருத்து. பெற்றோர் குழந்தைகளுக்கு சம்பாதித்து சேர்க்கும் போதே தங்களுக்கு ஒரு சிறு பகுதியையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே தன் சொந்த பணத்தை எடுத்து செலவு பண்ணும் போது உறுத்தல் இருக்காது. இன்னொருவரை சார்த்து இருக்கும் போது 'தாழ்வு மனப்பான்மை' அதிகம் வந்துவிடும். அதனால் பிள்ளைகள் எவ்வளவு செய்தாலும் நம்மை நம் பிள்ளை ஒழுங்காக கவனிக்களையோனு தோணும்.
சில/பல பிள்ளைகளுக்கு வாய்க்கும் துணை(ஆண்/பெண்) தன் மாமியார் வீட்டுக்கு செய்ய மனம் வருவது இல்லை( இது சரியா தவறானு வேற பட்டிமன்றத்துல பார்க்கலாம்). பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யணும்னு நினைத்தாலும் இருதலை கொள்ளியாய் முழிக்க நேரிடும். பிள்ளைகளுக்கு எப்படி கல்வி அண்ட் செல்வம் தருவது தம் கடமை என்று பெற்றோர் நினைக்கிறார்களோ அதைபோல பிரச்சனை இல்லாத திருமண வாழ்கையை தருவதும் ஒரு கடமை. அதனால் பிள்ளைகளின் இல்லறவாழ்க்கை இனிக்க பெற்றோர்கள் தனக்கு தானே கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துக்கொண்டு தானும் தன் பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் ''பொருளாதாரத்தில் மட்டும்" சார்ந்து இல்லாமல் இருப்பது நல்லது.
நான் முன்ன இருந்த நாட்ல பெற்றோர் அல்லது பிள்ளைகள் யாராக இருந்தாலும் ஒருவர் இன்னொருவரை எதிர் பாக்கமாட்டாங்க. குழந்தைகள் ஸ்கூல் போரவரைதான் அப்பா, அம்மா கிட்ட பணம் வாங்குவாங்க. அப்புறம் பார்ட் டைம் வேலை செய்து அல்லது schlorship ல தான் படிப்பாங்க. கல்யாண செலவு கூட அவங்களே தான் செய்துக்கணும். உங்க வீட்ல செய்ய மாட்டாங்களான்னு கேட்டா, அது எனக்கு அசிங்கம்னு சொல்வாங்க. இது ஒருவிதத்துல அவங்களோட தன்னபிக்கையை வளக்குதுன்னு சொல்வேன்.
இப்படி தன் வாழ்க்கைக்கு வேண்டியதை தானே செலவு செய்ய கற்றுக்கொண்டால், அதே பிள்ளை பெற்றோர் ஆனவுடன் தன் பிள்ளையை சாரும் நினைப்பும், நிலையும் வராது.
அதற்காக, பிள்ளைகள் கஷ்டபட்டால் பெற்றோர் செய்ய கூடாதுன்னும் பெற்றோர் கஷ்டபட்டால் பிள்ளைகள் செய்ய கூடாதுன்னும் சொல்லவில்லை. முடியாத சூழ்நிலையில் செய்யலாம்.
சோ, பெற்றோர் "பொருளாதாரத்தில் " பிள்ளைகளை சார்ந்து இருப்பது 'நல்லதில்லை' என்று முடிக்கிறேன்.
நான் சொல்ல வந்ததை கரெக்டா சொல்லி இருக்கேனா ,இல்லை உளறி இருக்கேனானு தெரியல. பஸ்ட் டைம் இவ்ளோ பெருசா எழுதறேன். புரிஞ்சதாணு தெரியல.

ரத்னா வாதத்தை ஆரம்பிச்சுட்டீங்களா வாழ்த்துக்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை பொருளாதார ரீதியில் சார்ந்து இருப்பது தவறு என்பதை விட அறியாமை என்பதே என் வாதம். வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது ஏமாற்றங்களே மிஞ்சும். ஏமாற்றங்கள் அதிகமானால் மனவேதனைதான் மிஞ்சும். இதுதான் பிள்ளைகளை சார்ந்திருக்கும் பெற்றோரின் நிலையும். சம்பாதிக்கும் காலத்தில் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காகவே செலவு செய்வார்கள் நாளை அவன் நம்மை காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு! அதுவே முதல் தவறு. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான்.

எல்லாவற்றையும் அவனுக்காகத்தானே செலவு செய்தேன் என்பார்கள். பெற்றோர்கள் வயதான காலத்தில் தனக்கு என்று சிறு சேமிப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கூட ஒருவகையில் அந்தப்பிள்ளையின் மகிழ்ச்சியான வாழ்வுக்குத்தான் என்பதை பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர்.

ரத்னா சொன்னது போல் பணத்திற்கு இன்னொருவரை சார்ந்திருக்கும் போது அது பெற்ற பிள்ளையே என்றாலும் கூட ஒருவித தாழ்வுமனப்பான்மை வந்து விடும். அதை மறைக்க தொட்டதெற்கெல்லாம் கோபப்படுவார்கள். அப்பா அம்மா உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது இனிப்பு பலகாரங்கள் சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் கூட அதை தப்பாகவே எடுத்துக் கொண்டு சண்டை போடுவார்கள் அல்லது அழுவார்கள்.

வயதானவர்களை மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதற்கு தனித் திறமை வேண்டும். அவர்கள் சிறு குழந்தைகள் போன்ற மனநிலையில் இருப்பார்கள். பிடிவாதமும் கோபமும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அவர்கள் பொருளாதாரத்திலும் பிள்ளைகளை சார்ந்து இருக்க வேண்டியவர்களாக இருந்தால் அவர்களும் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். பிள்ளைகளுக்கும் மனகஷ்டம்.

ஒரு சின்ன விஷயம். பேரப்பிளைகள் தாத்தா பாட்டியிடம் ஏதேனும் விளையாட்டுப் பொருள் வேண்டும் என்று கேட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் யாரையும் சாராதவர்களாக இருந்தால் தன் பணத்தில் சந்தோஷமாக வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் பணத்திற்கு பிள்ளைகளை சார்ந்திருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும். பிள்ளைகள் சிறுவயதில் ஏதேனும் பொருள் கேட்டால் சுலபமாக மறுத்து விடுவார்கள். ஆனால் பேரப்பிள்ளகள் கேட்டால் எப்படியும் அதை வாங்கிக் கொடுக்க துடிப்பார்கள். அது இயற்கை. ஆனால் அவர்களால் அது முடியாது என்னும் போது ஆற்றாமையும் இயலாமையும் ஏற்படுகிறது. அதுவே கோபமான வார்த்தைகளாக வெளிப்படுகிறது. பின்னர் குடும்பத்தில் பிரச்சினைதான்.

பிள்ளைகள் பணத்தேவைக்காக எளிதில் பெற்றோரை அணுகி விட முடியும். ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பணம் கேட்க மிகவும் தயங்குவார்கள். இதுவும் கூட இயற்கைதான். அதனால்தான் பிற்காலத்திற்காக இப்போதே சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

இன்று பிற்காலத்திற்காக சேர்ப்பதற்கு எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன. அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப ஏதேனும் திட்டத்தில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கிக் கொள்ளலாம். நம்மில் பலருக்கு ரிட்டையர்மெண்டுக்கு பின் பென்ஷன் என்பது கிடைக்காது. அதற்காக ஏதேனும் நல்ல திட்டத்தில் சேர்ந்து பிற்காலத்தில் மாதாமாதம் ஒரு வருவாய்க்கு வழி ஏற்படுத்திக்கொள்ள இப்போதே முதலீடு செய்து கொள்ள வேண்டும்.

என் பாட்டி பொருளாதார ரீதியில் என் பெற்றோரை சார்ந்து இருந்தார். வயதான காலத்தில் எத்தனை சிரத்தையாக அவர்களை கவனித்துக் கொண்ட போதும் அவர்களை திருப்தி படுத்துவது என்பது சிரமமாகவே இருந்தது. அவர்களின் மனதுக்குள் நாம் குழந்தகளை கஷ்டப்படுத்துகிறோம் என்பதுதான் மிகப் பெரிய கவலையாக இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் எல்லோரையும் சிரமப் படுத்தியது. எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் மனதிற்கு சங்கடமாகவே இருந்தது.

இன்று என் பெற்றோர் பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்து வாழவில்லை. பேரப்பிள்ளைகள் என்ன கேட்டாலும் அடுத்த நிமிடம் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகம். நாங்களாகவே பணம் அனுப்பினால் கூட அதை எங்கள் பெயரிலேயே பணத்தை பேங்கில் டெப்பாசிட் செய்து விடுகிறார்கள் :-). உண்மையைச் சொன்னால் எங்களுக்காக இன்னும் கூட அவர்களது வருமானத்தில் இருந்து சேர்த்து வைக்கிறார்கள். ஆனால் அதையும் புத்திசாலித்தனமாக அவர்கள் பெயரில் டெப்பாசிட் செய்து நாமினியாக எங்கள் பெயரை போட்டிருக்கிறார்கள் :-). எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. கடைசிவரை தங்கள் செலவை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்னம்தான் காரணம்.நாங்களும் கூட பிற்காலத்தில் அப்படி இருக்கவே விரும்புகிறோம்

என் பாட்டியையும் என் பெற்றோர்களையும் ஒப்பிடும் போது என் பெற்றோர்களே அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். என் பெற்றோரையும் எங்களையும் ஒப்பிடும் போது எங்கள் பெற்றோர்களை விட நாங்கள்தான் சந்தோஷமாக இருக்கிறோம். காரணம் பெற்றோர்கள் எங்களுக்கு எந்த மனக்கவலையும் கொடுப்பதில்லை.

ஆகவே அனைவரின் சந்தோஷத்திற்கும் பெற்றோர்கள் பொருளாதார ரீதியில் பிள்ளைகளை சாராமல் இருப்பதே சிறந்தது என்று கூறி என் முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம்.
நானும் எழுதனும்னு நினைக்கிறேன்....ஆனால் எல்லாத்தையும் கவிசிவா எழுதிட்டாங்க....எனவே கவிசிவாவை வழிமொழிகிறேன்....

மேலும் சில பதிவுகள்