பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

ரத்னா... வாங்க வாங்க. நீங்க தான் முதல்ல வாதத்தோடு வந்திருக்கீங்க. நீங்க கடைசிய முதல் முறை'னு சொல்லாம இருந்திருந்தா யாருக்கும் நீங்க முதல் முறை பட்டிமன்றத்தில் கலந்துக்கறீங்கன்னு தெரிந்திருக்காது. அத்தனை தெளிவா அழகா உங்க வாதத்தை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா.... உங்களை நான் கேட்கவே வேண்டாம்..... பட்டிமன்றத்தில் நீங்க எப்பவுமே டாப் தான். நல்ல பாய்ன்ட்ஸ் எடுத்து குடுத்திருக்கீங்க. எதிர் அணியை காணோமே..... வந்து என்ன சொல்றாங்கன்னு பார்த்துடுவோம்.

தேன்மொழி வழி மொழிதலோடு விடலாமா??? இன்னும் பாய்ன்ட்ஸ் யோசிச்சுட்டு மீண்டும் வாங்க. நான் காத்திருக்கேன் உங்க வாதத்தை படிக்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1. மனிதன் ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரையாவது சார்ந்துதான் இருக்கிறான். அப்படி இருக்கும்போது பெற்றோர் வயதான காலத்தில் தன் பிள்ளைகளை சார்ந்து இருப்பதில் என்ன தவறு.
2. "பிள்ளையார் கோவிலை பெருக்கலாம், மெழுகலாம் ஆனா பூ பறிச்சா சாமி கண்ணைக் குத்தும்"என்பார்கள். அதுபோல்தான் இருக்கிறது உங்கள் வாதம். சரி செலவுக்கு மேல் வரவு இருப்பவர்கள் சேமித்து வைக்கலாம். அப்படி இல்லாதவர்கள் என்ன செய்வார்களாம்.
3. பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல் இருப்பதால்தான் நம் நாட்டுக்கே உரிய "கூட்டுக் குடும்பம்" என்பது சிதைந்து போய் விட்டது. தன்னிடம் பணம் இருப்பதால் தான் திருமணம் ஆன உடனே பெற்றோர் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்து விடுகின்றனர். பணம் இருந்தால் பேரன், பேத்தி கேட்டதை வாங்கிக் கொடுத்து விடுவார்களாம். பாட்டி, தாத்தா வாங்கிக்கொடுக்கும் பொம்மையை விட அவர்கள் சொல்லும் கதைகளுக்கும், செய்து கொடுக்கும் சாப்பாட்டுக்கும், அவர்கள் கைகளால் ஊட்டி விடுவதற்கும் ஈடு உண்டா? பேரக் குழந்தைகளைக்கேட்டால் தெரியும்.

முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது கவி.

//அவர்களின் மனதுக்குள் நாம் குழந்தகளை கஷ்டப்படுத்துகிறோம் என்பதுதான் மிகப் பெரிய கவலையாக இருந்தது. என்றாலும் மனதிற்கு சங்கடமாகவே இருந்தது.//

இதுதான் உறவு இழையை அறுகாமல் வைத்திருந்தது.

இன்று ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல் போனதால் இந்த இழை அறுந்துதான் போய் இருக்கிறது.

இப்பொதைக்கு ஆரம்பிச்சுட்டேன்.
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நானும் ஜயந்தி மாமி கட்சி தான் நம்ம பிள்ளைகலிடம் நாம் சார்ந்து இருப்பது தப்பா?இப்பொ இருக்கிர விலைவாசியில பிள்ளைகலை ப்டிக்கவைத்து வேலை,கல்யானம் செய்துவைக்கிரதெ பெரிய விசயம் நம்மலுக்குனு எஙக சேமித்துவைப்பது?/ இரன்டு பேர் வேலை செய்ரவங்கலுக்குபைனான்சியலி பிரச்சனை இருக்காது.ஒரு ஆள் VELAI SAYRAVANGALUKKU?நம்ம மாமியாருக்கு நாம .செய்திருந்தால் தான் நாம் நம் பிள்ளைகலிடம் எதிர்பார்க்கலாம்.இன்றூ நாம் நம்முடைய பெற்றேரை நல்ல முறையில் கவனித்து இருந்தால் நாளை பற்றி கவலை பட தேவைஇல்லை[என்னக்கு தெரிந்ததை சொல்லி இருக்கென் தவறா இருந்தால் அடுத்தமுறை திருத்திகொள்கிரேன்] நன்றீ

do fast mathi

ஜெயந்தி மாமி நான் எங்களுக்கும் சங்கடமாக இருந்தது என்று சொன்னது பாட்டி என் பெற்றோரை சார்ந்திருப்பதால் இல்லை. ஆனால் எங்கள் பாட்டி என் பெற்றோரை சங்கடப்படுத்துவதாக அவர்களாகவே நினைத்துக் கொண்டு வருந்தியதுதான் எங்களுக்கு சங்கடமாக இருந்தது. இதுவே அவர்களுக்கு என்று சிறிது வருமானம் இருந்திருந்தால் சங்கடப்படாமல் இருந்திருப்பார்களே என்றுதான் நாங்கள் எண்ணினோமே தவிர அவர்கள் எங்களோடே கடைசி வரைக்கும் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

பெற்றோர் தங்கள் சிறு சிறு தேவைகளுக்கு கூட பிள்ளைகளை சார்ந்திருக்கும் நிலைதான் தவறு என்கிறோமே தவிர பிள்ளைகள் அவர்களை கவனித்துக் கொள்ளாமல் இருப்பதையும் முற்றிலுமாக ஒதுக்கி விடுவதையும் எங்கள் அணி வலியுறுத்தவில்லை. மனித இனம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. உண்மைதான். ஆனால் அது பொருளாதார சார்தலைக் குறிக்கவில்லை. மாற்றாக மன மற்றும் உணர்வு ரீதியான சார்தலை மட்டுமே குறிக்கிறது.

என் பிள்ளையை முற்றிலும் சார்ந்திருப்பது என் உரிமை என்ற எண்ணம்தான் மருமகள் வரும்போது தன் உரிமையை பங்கு போட ஒருத்தி வந்து விட்டாள் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்குகிறது. அன்றாட தேவைகளுக்கே அல்லாடும் போது எங்கே எதிர்காலத்துக்கு சேமிப்பது என்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மனதும் முயற்சியும் மட்டுமே தேவை.

என் அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு தாய். அவருக்கு ஒரே ஒரு மகன். கணவர் இல்லை. 4 வீடுகளில் வேலை செய்துதான் தன் மகனைப் படிக்க வைத்தார். அவரும் பொறியியல் டிப்ளமா செய்து சென்னையில் வேலை செய்கிறார். இன்னமும் அந்த தாய் வீடுகளில் வேலை செய்துதான் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். மகன் தாயை தன்னோடு வந்து இருக்க கூப்பிட்ட போதும் மறுத்து விட்டார். தான் குடியிருக்க சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டார். தன் வயதான காலத்திற்கு என்று மாதந்தோறும் சிறு தொகையை சேர்த்து வருகிறார். மகன் மாதந்தோறும் அனுப்பும் பணத்தை தனியாக சேமிக்கிறார். நாளை அது தன் மகனுக்கு உதவும் என்று நினைக்கிறார். இவருடைய தாயும் இன்னமும் இருக்கிறார். அவரும் தன் தேவைகளுக்கு பிள்ளைகளை சார்ந்து இல்லை. பிள்ளைகளோடுதான் இருக்கிறார். தன் தேவைக்கு வேண்டியதை அவரே தேடிக் கொள்கிறார். அதில்தான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார். இதைத்தான் நாங்கள் மனம் இருந்தால் எந்நிலையிலும் எதிர்காலத்திற்காக சேமிப்பது சாத்தியமே என்கிறோம்.

வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகி எதிர்காலத்திற்கு சேர்த்துக் கொண்டால் எல்லோருக்கும் நல்லது. இல்லை இல்லை எல்லாவற்றையும் இன்றே பிள்ளைகளுக்காக செலவளித்து விட்டு நாளை எல்லாவற்றிற்கும் அவர்களை எதிர்பார்த்து வாழ்வதுதான் சிறந்தது என்று இன்று எண்ணினால் நாளை வேதனைப்படப் போவது பெற்றோர் பிள்ளைகள் இருவருமேதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்கல நான் வயதான காலத்ல்ல parentes பில்கலை சார்ந்து இருக்ககுடாது என்கிர அணீயசார்ந்து பசரான்.பிள்ளைகளை படிக்கவைபது நமது கடமை ,அவர்கலிர்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பதும் நமது கடமை. ஆனால் இதற்கு அவர்களிடம் ப்ரதிபலன் எதிர்பார்பது தவறு.அதிகமான குடும்பன்கலில் மகனின் திருமணதிற்கு பின் ப்ரைசனைகல் வருவது மகனை சர்ந்து இர்ருபதனல்தன்.அதாவது இளமைல் கொஞ்சம் சாமிதுவைது கொண்டால் நல்லது.வரும் மருமகளிற்கும் ஒரு நல்ல மதிப்பு வரும்,.மட்டுமில்லாமல் நமது thaவைகலிர்கு (paren,pathi)எதாவது விஷஷம் வரும்போதும் நம்மால் பெருமிததொடு பண்ணமுடியும்.nam எவரியும் சர்ந்துஇல்லை எனும் பொத நமகு தன்னம்பிகை வரும்.paathi nooikalai விரடிவிட முடியும்.அதவது(prasere).

அது என்னமோ காசு இருந்தா மட்டும் போதும்கிறமாதிரி பேசுரேஙகலே கவனிப்பு காசை பர்த்து மட்டுமாவரும்?? நம்ம மனம்சம்பந்தப்பட்டது இல்லயா நாம் குழந்தைகலிடம்நம்ம எதிர்பார்ப்பது தவறா? எஙக மாமியார் எஙகலிடம் பனம், ? வாங்குரதே இல்லை .எங்க பிரச்சனையே அதுதான்.நாம் ஆசையா செய்தாலும் கன்க்கு போட்டு பனம் தந்து விடுவார்கல்.அவஙக சுய மரியாதைக்கு தலைவனங்குகிரென்,ஆனா நம்ம பாசத்தை எப்பிடிகாமிக்குரது? இப்பவும் அவஙக வேலைய அவஙக தன் செய்ராஙக,நம்மலுக்கு பார்க்க கஸ்டமா இருக்கும்

do fast mathi

தோழி பணம் கொடுத்துதான் பெற்றோரிடம் நமக்குள்ள பாசத்தை காட்ட வேண்டும் என்பது இல்லை. அன்பான வார்த்தைகள், இதமான கவனிப்பு இதுதான் அவர்களுக்கு தேவை. அவர்களின் சுயமரியாதையை நாம் மதிப்பதே அவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை. நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது எப்படி இதையெல்லாம் செய்வது என்று கேட்காதீர்கள். அதற்குத்தான் தொலைப்பேசி இணையம் என பலவசதிகள் உள்ளன. தினம் ஒருமுறை தொடர்பு கொண்டு இதமாக பேசுங்கள். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். உங்கள் குழந்தைகளையும் தாத்தா பாட்டியிடம் பேசச் சொல்லுங்கள். அதை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள். நாம் பேசுவதை விட பேரக் குழந்தைகள் தங்களோடு பேசுவதை அதிகம் விரும்புவார்கள். பெற்றோரின் பிறந்தநாள் திருமணநாள் மற்றும் விஷேஷ நாட்களில் அவர்களிடம் வாழ்த்து பெறுங்கள். சின்ன சின்ன அவர்கள் விரும்பும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். முக்கியமாக வீட்டில் எடுக்கும் முக்கிய முடிவுகளை அவர்களை கலந்தாலோசியுங்கள். அவர்களை நாம் ஊதாசீனப்படுத்தவில்லை என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். இவற்றை எதுவும் செய்யாமல் பணம் கொடுப்பதோடு என் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கும் பிள்ளைகளால்தான் பெரியவர்களுக்கு வேதனை. உடனே இதைத்தான் நாங்கள் சார்ந்து வாழ்வதில் தவறில்லை என்று வாதாடுகிறோம் என்று எதிரணியினர் கொடி பிடிக்க வேண்டாம் :-). நாம் இங்கு பொருளாதார சார்தலை மட்டுமே தவறு என்று பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தோழி இங்கு "நீங்கள்" என்று குறிப்பிட்டு சொன்னது நாம் எல்லோரையும்தான். தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எங்கள் அணியினர் யாரும் பெற்றோரை கவனிக்கத்தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால் பெற்றோர்கள் பொருளாதார தேவைகளுக்காக பிள்ளைகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் கஷ்டங்களையும் மனக்கசப்புகளையும் தவிர்த்து சந்தோஷமாக வாழவே பெற்றோர் பணத்திற்காக பிள்ளைகளை சார்ந்து வாழ்வது தவறு என்கிறோம்.

நம் பட்டிமன்ற தொடர்பாகவே அவள் விகடனில் வந்த ஒரு கட்டுரையை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்

///// இளம் வயதில் வியர்வை சிந்தி உழைத்ததை எல்லாம் பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், உறவுகள், நோவுகள் என பலதும் சிதறடித்துவிட, வயோதிகத்தில் பொருளாதார பாதுகாப்பில்லாமல் அல்லல்படும் முதியவர்கள் இங்கு ஏராளம். ஆனால், அந்தச் செலவுகளையும் மீறி சிக்கனமாகச் சேர்த்து, இன்று சௌகரியமாக வாழும் வயோதிக தம்பதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் ஒரு தம்பதி... சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி - அனந்தபத்மநாபன்!

முகம் கொள்ளா புன்னகை பூத்துக் குலுங்க, வார்த்தைகளும் உற்சாகமாக உதிர்ந்தன. "நாப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன எந்தப் பின்புலமும் இல்லாம, இருநூத்தி அம்பது ரூபா சம்பளத்துல சென்னைக்கு வேலைக்கு வந்த நான், மூணு பொண்ணுங்களையும் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக்கொடுத்து, சொந்த வீடு கட்டி இப்போ நிறைவா செட்டிலாகியிருக்கேன்!"

- அனந்தபத்மநாபன் சொல்லப்போவது எளிமையான அவர்களின் வாழ்க்கையைப் பற்றிதான். ஆனால், அது நம் இளம் தலைமுறையினருக்கு திட்டமிடலும் சேமிப்பும் கைகோக்கும் வித்தையைச் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்!

"எனக்குச் சொந்த ஊர் வடஆற்காடு மாவட்டம். அக்கா, தம்பி, தங்கைங்கனு நடுத்தர குடும்பத்துல பிறந்தேன். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதும், ஒரு ரூபாகூட இல்லாம சென்னைக்கு வந்த நான் இந்த அளவுக்கு இருக்க, உழைப்பு ஒரு காரணமா இருந்தாலும், நான் சிந்தின வியர்வை துளியையெல்லாம் மாலையா கோத்து, குடும்பத்துல இன்னிக்கும் மகிழ்ச்சி குறையாம நடத்திட்டு வர்ற பெருமை இவளைத்தான் சேரும்" என்று மனைவியைக் கைகாட்டினார்.

"சிக்கனம்னா வாயை கட்டி வயித்தக்கட்டிதான் சேமிக்கணும்னு இல்லை. அநாவசிய செலவுகளைக் குறைச்சுக்கிட்டாலே போதும். எனக்கு 18 வயசுல கல்யாணம். சிக்கனத்துல அம்மாவையும், சேமிப்புல மாமியாரையும் வழிகாட்டியா எடுத்துக்கிட்டு, வாழ்க்கையைத் தொடங்கினேன். 'கொடுத்த காசெல்லாம் வீட்டுக்கு செலவழிஞ்சுடுச்சு'னு வீட்டு ஆம்பளைங்ககிட்ட பொய் சொல்லிட்டு, டப்பா, தூக்குக்குள்ள எல்லாம் பணத்தைப் போட்டு வைப்பாங்க அவங்க. நானும் அவங்களைப் போலவே டப்பா, தூக்குகளை நிறைக்க ஆரம்பிச்சேன். இன்னிக்கு நாங்க நல்லாயிருக்கோம்!" என்றவரின் பேச்சைத் தொடர்ந்த அனந்த பத்மநாபன்...

"நாப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன லிக்நைட் கார்பரேஷன்ல வேலை கிடைச்சது. ரெண்டு வருஷத்துல கல்யாணம். அப்ப எனக்கு 250 சம்பளம். ஆனா, வீட்டு வாடகையோ 130 ரூபாய். அடுத்தடுத்து மூணும் பொண்ணா பிறந்துட, எப்படி சமாளிக்கப்போறோம்னு கதிகலங்கிப் போவேன். நேரம் காலம் பார்க்காம உழைப்பேன். அதுல கிடைச்சதையெல்லாம் சிதறிடாம என் மனைவி சேமிச்சாங்க. அதுதான் இந்த வீட்டுக்கான விதை" என்று வியந்து சொன்னார்.

இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கொல்லைப்புறம் என்று அளவோடு அருமையாக இருக்கிறது வீடு.

"மாதாந்திர செலவு போக மாசம் ஒரு சிறிய தொகையை சிட் ஃபண்டுல சேமிக்க ஆரம்பிச்சேன். 1980-ல 'வில்லிவாக்கத்துல ஒரு இடம் இருக்கு. வாங்கறீங்களா?'னு என் அப்பா கேக்கவும், 'மூணு பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு நிலத்துலயா பணத்தை போடறது..?'னு ரொம்ப யோசிச்சார். நான்தான் 'செலவு வந்துட்டேதான் இருக்கும். அதுக்கு நடுவுலயும் சுதாரிச்சு ஏதாவது முதலீடு செஞ்சுடணும்'னு முடிவா சொன்னேன். அப்ப அவருக்கு வந்த போனஸ் தொகையோட, என்னோட சேமிப்பு பணத்தையும் போட்டு இந்த இடத்தை வெறும் 5,000 ரூபாய்க்கு வாங்கினோம்!" என்று ராஜலட்சுமி சொன்னதும்,

"ஆபீஸ்ல லோன் கிடைக்கவே, 81-ல இந்த வீட்டைக் கட்டி, குடி வந்துட்டோம். லோனுக்கான தவணை... சாப்பாடு, படிப்பு செலவுனு நெருக்கிப் பிடிச்சது. அதையும், இவதான் அழகா சமாளிச்சா!" என்ற கணவரின் புகழ்ச்சியில் முக மலர்ச்சியுடன் தான் 'சமாளித்த' ஃபார்முலாவைப் பேசினார்ராஜலட்சுமி.

"தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் வீட்டுல எல்லாருக்கும் புது டிரெஸ். பெரியவ போட்டுகிட்ட டிரெஸ்ஸயே அடுத்தடுத்து வரிசையா போட்டுப்பாங்க. அதனால, துணிமணிகளுக்கு அதிக செலவில்லை. பொண்ணுங்க கேக்கற பதார்த்தங்களை வீட்டுலேயே செஞ்சு கொடுத்திடுவேன். அதனால ஹோட்டல் செலவும் இல்ல. எங்க பொண்ணுங்களும் கஷ்டத்தை புரிஞ்சு நடந்துகிட்டது, எங்களை சோர்வில்லாம முன்னேற வச்சது. பாட புத்தகத்தைகூட பழசை வாங்கித் தந்தாலும், வருத்தப்படாம, மூணு பேருமே ரொம்ப நல்லா படிச்சாங்க. காலேஜ் சேர்க்கணும்னா அதிகம் செலவாகும்னு புரிஞ்சுகிட்டு கரஸ்பாண்டன்ஸ்ல டிகிரியும் முடிச்சாங்க" என்றவரைத் தொடர்ந்தார் அனந்தபத்மநாபன்.

"98-ல எங்களுக்கு பென்ஷன் இல்லைனு தீர்மானமா தெரிஞ்சதும், 2000-ல வி.ஆர்.எஸ். வாங்கிட்டு வந்துட்டேன். அதுல வந்த பணம், இவளோட சேமிப்புகளைப் போட்டு ஒவ்வொரு பொண்ணுக்கா கல்யாணத்தை முடிச்சோம். கையில கணிசமா ஒரு தொகை மிஞ்சினதும், மாடில ஒரு போர்ஷனைக் கட்டி வாடகைக்கு விட்டு, மீதத்தொகையை வங்கில போட்டு வெச்சிட்டோம். வாடகையும், வட்டியும் எங்களை நிம்மதியா வாழ வெச்சிட்டிருக்கு!" என்று உற்சாகமாகச் சொன்னார்.

நிறைவாக... "ஆடம்பர செலவுகளை குறைச்சு, சிக்கனமா இருந்து, சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருந்தவேண்டிய அவசியம் இருக்காது!" என்று தம்பதி சகிதமாக முடித்தார்கள்.

மூத்தோர் சொல் கேளீர்!////

எக்காலத்திலும் தன் கையே தனக்குதவி என்று இருப்பதுதான் சிறந்தது. தங்கள் தேவைகளை அவர்களே கவனித்துக் கொள்ளும்போது அவர்களிடத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அதுவே அவர்களை உற்சாகமாக செயல்பட வைக்கும். வீணான மனக்குழப்பங்கள் இல்லாமல் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். குழந்தைகளும் பெற்றோரின் மகிழ்ச்சி கண்டு சந்தோஷமடைவர்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயந்தி மாமி.... வாங்க வாங்க. நீங்களாம் பட்டிமன்றம் பக்கம் வந்தா தான் பட்டிமன்றம் சூடேருது. பாருங்க வந்ததும் கவிசிவா'வ கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டீங்க. ;) எதிர் அணி'யை காணோம்'னு நினைச்சுட்டு இருந்தேன் உங்களை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு. மிக்க நன்றி. தொடருங்க உங்க வாதத்தை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்