பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

மதி... சொல்ல வந்த விஷயத்தை அழகாவே சொல்லி இருக்கீங்க. நீங்களும் சரி கட்சியா? இன்னும் நல்லதா போச்சு. :) தவறு'னு சொன்ன கட்சி கூட போட்டி போட நிறைய பேர் வந்துட்டீங்க. வாழ்த்துக்கள். தொடருங்க உங்க வாதத்தை. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க கவிசிவா.... மாமி'கு பதில் குடுத்துட்டீங்களா??? சூப்பர். இப்போ மாமி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எரிக்... வருக வருக. (பெயர் இது தானா'னு தெரியல. தப்ப இருந்தா மன்னியுங்க) நீங்களும் தப்புன்னு வாதாட போறீங்களா?? //பல குடும்பங்களில் திருமணத்துக்கு பின் பிரெச்சனி வருவது மகனை சார்ந்து இருப்பதால் தான்// - உண்மை தான். எதிர் கட்சி என்ன சொல்ல போறாங்களோ???

லக்ஷ்மி.... வந்துட்டு காணாம போயிருக்கீங்க.பதிவு போடமலே.... என்னாச்சு?? வாங்க அவசியம்.... உங்க வாதத்தை கேட்க ஆசையா இங்க நிறைய பேர் இருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கே வழக்கமாக பட்டிமன்றம் வரும் தோழிகள்???

தேன்மொழி முதல் நாள் வந்தீங்க... அப்பறம் வரல. வாங்க சீக்கிரம்.

மனோகரி மேடம், மனோமேடம், தேவா மேடம், செல்வி, கவி, உமா, இளவரசி, வின்னி, மாலி, இமா, இலா மற்றும் அனைத்து தோழிகளும் வாங்க......

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா!
மூன்று நாட்களாய் எனக்கு தலைவலி, காய்ச்சல். அதனால்தான் பட்டிமன்றத்தில் கலந்துக்க முடியலை.
என் சார்பாய் எல்லாமே ஜெயந்தி மாமி சொல்லிட்டாங்க.
என்னால் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியலை. அதனால் நாளை வருகிறேன்.
சில வரிகளை சொல்லிவிட்டு போகிறேன்.

சிறிய வருமானத்திலேயே, சிக்கனமாய் இருந்து தங்களுடைய எதிர்காலத்துக்குன்னு சேமிக்க எல்லாராலும் முடியும்.
ஆனாலும் அதுவே தன் குழந்தைகளுக்கு ஏதாவது அவசிய/அத்தியாவசியத்தேவை என்று வரும்போது அந்த தொகையினை முழுமனதோடு எடுத்து தருபவர்கள்தான் பெற்றோர்.
தங்களை வயதான காலத்தில் குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற சுயநலத்தில்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் என்ற கருத்தினை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பெற்றோர்களின் எதிர்பார்ப்பு ஆசையினால்/பாசத்தினால் அமைந்ததே தவிர சுயநலத்தினால் அமைவது அல்ல!
தயவுசெய்து அந்த எதிர்பார்ப்பினை கொச்சைப்படுத்தாதீர்கள்!

அவ்வபோது வந்து முடிந்த கருத்துக்களை சொல்லிவிட்டு செல்கிரேன்.(இப்பொவும் அதேதான்.நேரமின்மை!என் பையன் 2 வயதாஹும் வரை, இதே கதை தான் சொல்வேன்னு நினைக்கரென்.ஹி!ஹி!
நான் சாய்கீதா அணியில் தான் வாதாடப்போகிரேன்
ok.நாம், நம் குழந்தைகளுக்கு, சாப்பாடு ஊட்டி, டயபர் மாத்தி, எல்லாம் சிரித்த முகத்துடன் தான், நம் குழன்தைகல்க்கு செய்கிரோம்.எதையும் எதிர்பார்த்து, சுயநலத்துடன் எதுவும் செய்வது இல்லை, அதே போல் தான் எல்லா பெற்றோரும்.அப்படியே எதிர்பார்த்தாலும், அது சுயநலத்தால் அல்ல, பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் போல் தான்.எனவே, பெற்றோற்கள் பிள்ளைகளை சார்ந்து (அதாவது, பிள்ளைகளின் கடமை, பெற்றோர்களைப்பார்த்துக் கொள்வது)இருப்பதில் தவறே இல்லை, என்பது என் கருத்து

நடுவர் அவர்களே, இதோ வலுவான அணிக்கு ஓட்டு போட வந்து இருக்கிறேன்:) எனது கருத்து பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது தவறு!! தவறு!!

எப்படி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது நமது கடமையோ, அதே போல் நம்முடைய எதிர்காலத்திற்கும் சேர்த்து வைத்துக் கொள்வதும் நமது கடமையே.

ஒன்னும் இல்லை 'என் பிறந்த நாளுக்கு இது வேண்டும்’ என்று பேரப் பிள்ளைகள் கேட்கும் போது என்ன கதை சொல்லி சமாளிப்போம்? அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுக்கும்போது அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் எவ்வளவு மன நிறைவாக இருக்கும்.

நாம் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினோம் சரிதான். அவர்களுக்கு கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தை என்று அவர்கள் தேவைகளுக்கே சரியாக இருக்கும். இதில் நாம் வேறு நடுவில் போய் என் கடமை முடிந்து விட்டது, இனி உன் கடமை எங்களையும் வைத்து காப்பாற்று என்று சொல்வது போல் இருக்கு.

அந்த காலத்தைப் போல் இப்போது நாம் விவரம் தெரியாதவர்கள் இல்லை. சேமிக்கவும் எத்தனையோ வழி முறைகள் இருக்கு. ஆகவே நாளை தேவைக்கும் சேமித்து பிள்ளைகளை தொந்தரவு செய்யாமல் இருப்போம்.

நடுவரே மீதி வாதத்தை என்னுடைய அணித் தோழிகள் பார்த்து கொள்வார்கள். நான் மீண்டும் வருவது சந்தேகம் என நினைக்கிறேன். நன்றி.

எதிரணித்தோழிகளின் வாதம் உண்மையிலேயே மனதை வலிக்கச்செய்கிறது!
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை என்றால், வயதான காலத்தில் அவர்களின் பொருளாதாரத்தேவைகளை பூர்த்தி செய்வது பிள்ளைகளின் கடமை அல்லவா?

ஏதோ ஓரளவிற்கு வருமானம் உள்ளவர்களுக்கு பரவாயில்லை.
மிகவும் ஏழ்மையான ஒருவர் தன் மகனை சமுதாயத்தில் உயர்வான நிலைக்கு கொண்டுசெல்ல, தன் தேவைகளை, ஆசைகளை அழித்து, தன் சொத்தை வித்து வருமானங்களை,சேமிப்பை கரைத்து படிக்கவைத்துவிட்டு, தன் எதிர்காலத்துக்கு தனியாக சேமிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்போது, அவரை நடுத்தெருவுக்கோ, கட்டணமில்லாத முதியோர் இல்லத்துக்கோ அனுப்பிவிடலாமா என்று சொல்லுங்கள் தோழிகளே!

தன்னால், தன் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத்துணையிடம் போராடுவதனை பார்க்க தாங்காமல், தாங்களாகவே அனாதை இல்லத்துக்கோ,முதியோர் இல்லத்துக்கோ போய்விட்டவர்கள் என் உறவினர்களில், நண்பர் குடும்பங்களில் நான் பார்த்திருக்கேன்.
அந்த மகனை அவர்கள் வளர்த்து ஆளாக்க,சமுதாயத்தில் கௌரவமான நிலையில் உட்கார வைக்க, பெற்றோர் செய்த தியாகங்களும், கரையவிட்ட சேமிப்புகளும் கொஞ்சநஞ்சம் அல்ல.

அதனையெல்லாம் அவர்கள் முதுமைக்கால சேமிப்பாக்கியிருந்தால், இன்னைக்கு அவர்களின் வாழ்க்கை ராஜவாழ்க்கையாய் இருந்திருக்கும்!
அனாதைகளைப்போல் முதியோர் இல்லத்துக்கு போகும் நிலையோ , இல்லை பெற்ற பிள்ளைகளிடமே பிச்சைக்காரர்களைப்போல் கையேந்தும் நிலையோ யாருக்கும் வராது.
இளம் வயதில் நாம்

கேட்டபோதெல்லாமும்/கேட்காமலெயும் நம் தேவையினை, முகம் கோணாமல் பூர்த்தி செய்த பெற்றோருக்கு, நம்மால் முடிந்தவரை செய்வதுதான் மனிதாபிமானம்.

" உழவன் கணக்கு பார்த்தால்
உழக்குகூட மிஞ்சாது" நு

சொல்வாங்க,
அதுபோல் பெற்றவர்கள் கணக்கு பார்த்திருந்தால் , நமக்கெல்லாம் நல்ல வாழ்க்கை ஏதுங்க????

எதிரணியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு யாருமே பெற்றோரின் பாசத்தை கொச்சைப் படுத்தவில்லை. சுயநலத்தோடு இருக்கிறார்கள் என்றும் சொல்லவில்லை. தங்கல் எதிர்காலம் குறித்த சிறிது சுயநலம் இருப்பதில் தவறில்லை என்றுதான் வாதிடுகிறோம்.
பெற்றோர் பிள்ளைகளை பணத்திற்காக சார்ந்திருப்பது தவறு என்று சொல்வதால் நாங்கள் யாரும் மனசாட்சி இல்லாத பிள்ளைகள் இல்லை. ஆனால் என்றுமே எங்கள் பெற்றோர் யாரையும் எதிர்பார்க்காமல் தலை நிமிர்ந்து வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். பாசத்தை அள்ளி அள்ளி கொடுக்கவும் வாங்கவும் மட்டுமே விரும்புகிறோம். அதில்தான் மகிழ்ச்சி.

பெற்றோர் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்திருப்பது தவறு என்று சொல்வதற்கு அர்த்தம் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் பெற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பதில்லை. ஒரே வீட்டில் பிள்ளைகளோடு இருந்தாலும் தங்கள் சிறு சிறு தேவைகளுக்கு கூட பிள்ளைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.

தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம். ஓய்வு பெற்ற பெற்றோர். மனைவி தங்கள் மகனிடம் மாதந்தோறும் சிறிது பணம் கேட்போம் என்கிறார். ஆனால் தந்தை தான் யாரிடமும் கையேந்த விரும்பவில்லை என்று மறுத்து தன் ஓய்வுக்காக அவர் சேர்ந்திருந்த திட்டத்தை பற்றி சொல்கிறார். எல்லா பெரியவர்களும் இப்படி இருப்பதைத்தான் விரும்புகின்றனர். ஆனால் பலர் அதற்கான அடித்தளத்தை இளமையிலேயே போட மறந்து விட்டு பிற்காலத்தில் தானும் மனம் வருந்தி வேதனிக்கின்றனர். பிள்ளைகள் பணம் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்வதில் சங்கடப்படுகின்றனர். இந்த நிலை வேண்டாமென்றுதான் எதிர்காலத்திற்கு சேமியுங்கள் என்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///பிள்ளைகள் பணம் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொள்வதில் சங்கடப்படுகின்றனர்///

அப்படி ஒரு சங்கடம் அவர்களுக்கு ஏற்படாமல், நம்மிடம் உரிமையோடு கேட்டுப்பெறும் அளவிற்கு நாம்தான் அவர்களை நடத்தவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.
நம் உயிரும், உடலும் அவர்கள் கொடுத்தது போல, நாம் வாழும் வாழ்வும் , ஈட்டும் வருவாயும் அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்டது.
நம் இளமைக்காலத்தில் அவர்களை பொருளாதார ரீதியில் சார்ந்திருந்தபோது, நாம் சங்கடப்படவில்லையே, அதனை தன்மானப்பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லையே, மாறாக உரிமையோடு அல்லவா கேட்டுப்பெற்றோம்.
இதனையெல்லாம் எடுத்துக்கூறி அவர்கள் தேவைகளை நிறைவேற்றவேண்டும்.
கேட்டுப்பெறுவதிலோ/மகனிடம் கேட்பது தன்மானபிரச்னை என்று நினைத்தாலோ அது கண்டிப்பாக பிள்ளைகளின் தவறுதான்னு நான் சொல்வேன்.
அந்த உரிமையினை பிள்ளைகள்/மருமகள்கள் கௌரவமாக எடுத்துக்கொள்ளமாட்டார்களோ, என்ற பயத்தினால் வருவதுதானே தன்மானபிரச்னை!

நானும்கூட, தங்களுக்கு என்று சேமித்துகொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பதனை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அப்படி முடியாமல் போனவர்கள்/முடியாமல் போகிறவர்கள் என்ன பண்ணலாம்?????
அதற்கு என்ன காரணமாகவும் இருக்கலாம். அவர்களுகென்று சேர்த்துவைத்த தொகை பிள்ளைகளின் தேவைகளுக்கோ/அவர்களுக்கே முடியாமல் வந்து தொகை கரைந்துவிட்டது.
காலன் வந்து அழைக்கும்வரை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும், அப்போது அவர்களின் நிலை என்ன????
பொருளாதார ரீதியில் பிள்ளைகளை நம்பி வாழ்வது தவறு என்றுதான் சொல்வீர்களா????

மேலும் சில பதிவுகள்