பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

நடுவருக்கு வணக்கம்..இரு அணித்தோழிகளுக்கும் வணக்கம்
எம்மணியில் அருமையாய் கருத்துகணைகளை வீசிகொண்டிருக்கும் கவிசிவாவுக்கு ..=D>..

//பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல் இருப்பதால்தான் நம் நாட்டுக்கே உரிய "கூட்டுக் குடும்பம்" என்பது சிதைந்து போய் விட்டது.//

நீங்கள் சொல்வதும் ஒருவகையில்சரிதான்….
ஒன்றுக்குமேல் ஆண்பிள்ளைகள் இருக்கும் கூட்டு குடும்பங்களில் ,..

பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல்,

ஒருவரை மட்டுமே சார்ந்து இருப்பதால்தான் சிக்கலும் சங்கடமும் வருகிறது…..

அது ஒருவரை மட்டும் சுமைதாங்கியாக மாற்றி மற்றவர்கள் உரிமை,பாசம் என்ற பெயரில் தனக்குரிய பொறுப்பை தட்டி கழிக்கும் வாய்ப்பையையும் உருவாக்குவதுடன்,

காலப்போக்கில் அது கூட்டு குடும்பத்தின் மொத்த செலவும்சுமைதாங்கியின் கடமை என்பதுபோல் ஆகிவிடும் சூழ்நிலை வருகிறது.

இதை படிக்கும் கூட்டு குடும்பங்களிலிருக்கும் ஒரு சில தோழிகள்…அப்படியெல்லாம் எதுவும் தங்களுக்கு சூழ்நிலை வரவில்லையென்றால் அது சந்தோசமான உண்மையென்றால் மகிழ்ச்சி.

ஆனால் பலருக்கும் அந்த மனசங்கடம் தரும் சூழல் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

மேலும் நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நிறைய பெற்றோர்கள் கடைசியில் கஞ்சி ஊற்ற ஒரு ஆண்பிள்ளையாவது வேண்டும்…கடைசிகாலத்தில் அவனை சார்ந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்து

அடுத்தடுத்து பெண்பிள்ளைகள் பிறந்து கடைசியாக ஆண்பிள்ளை பிறந்து அவனை ஒரளவிற்கு படிக்கவைத்து அவன் வேலைபார்க்க தொடங்கிவிட்டால் ,

அவர்களுக்கென்று எந்த சேமிப்பும் இல்லாமல் வாடகை வீட்டில் வாழும் சூழ்நிலையிலிருந்தால்

வீடு கட்டுவது தொடங்கி சகோதரிகள் திருமண செலவு,திருமணத்திற்கு பின் அவர்களின் அவ்வப்போது ஏற்படும் பணத்தேவைகள்,பெற்றோருக்கான சிறிய,பெரிய தேவைகள்,என எல்லாம் அவன்தான் பார்க்கவேண்டும்.

அந்த சூழ்நிலையில் அவனுக்கென்று திருமணம் செய்யும்போது,அவனுக்கான செலவுகள்
….எல்லாவற்றையும் அவன் சமாளிக்கும் சிரமம் யோசிக்க வேண்டிய விசயமில்லையா?

எல்லா பொறுப்புகளையும் அவன் தலையில் கட்டிவிட்டு அதிலென்ன தவறு என நினைக்கும் பெற்றோர்கள் ஒருவேளை

அவனால் சமாளிக்க முடியாவிட்டால் அப்போதுகூட உன்மனைவியின் வீட்டில் வாங்கி வர சொல் என தூபம் போடுவது நிறைய வீடுகளில் நடக்கிறதா?இல்லையா? என உங்களுக்கே தெரியும்.

உடனே எதிரணியில் இவையெல்லாம் விதிவிலக்குகள் என தப்பிக்க வேண்டாம்.. :-)

நான் கேட்கிறேன்..
பொருளாதரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை முற்றிலும் சார்ந்திருப்பது சரிதான் என நினைக்கும் ஒரு பெற்றோராவது ஆண்பிள்ளையை போல
பெண்பிள்ளையை வளர்க்கவும் சிரமங்களும் செலவுகளும் உண்டு என எண்ணி
தன் வீட்டு மருமகள் அவள் ஆண்வாரிசு இல்லாத வீட்டிலிருந்து
வந்திருந்தால் அவளும் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கும் பட்சத்தில் அவள் பெற்றோர்கள்
பொருளாதரரீதியாக அவளை சார்ந்து இருப்பது சரி என ஒத்து கொள்வார்களா?

நம் சமுதாயத்தில் பொதுவாக ஆண்வாரிசு இல்லாத பெற்றொர்களும் பெண்பிள்ளைகளை அவள் சம்பாதிக்கும் பட்சத்தில் கூட அவளை சார்ந்திருப்பதில்லை ,

அந்த சார்ந்திருப்பு தவறென்பது புரிந்து கொள்கிற பெற்றோர்கள்…அதுவே ஆண்பிள்ளையென்றால் அதிலென்ன தவறு அது அவன் கடமை என தர்க்கம் பண்ணுகிறார்கள்?

நாங்களும் பெற்றோர்களை நேசிக்கிறோம்..எப்போதாவது அவர்களுக்கு சேமிப்பை மீறிய செலவுகள் வரும்போது (மருத்துவசெலவு)அவர்கள் ஏற்றுகொள்ளாவிட்டாலும் நாமாகவே கொடுக்கவேண்டும் அதுதான் சரியென்று ஒப்பு கொள்கிறோம்.

நாம் இன்று ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து சிந்தித்து இன்றைக்கு முறையான சேமிப்பின்றி திட்டமிடாமல் வாழ்ந்து ஒரளவிற்கு வாழ்ந்து முடித்த கடைசி காலத்தில்அப்போதுதான் வாழ தொடங்கியிருக்கும் நம் பிள்ளைகளை கடமையென்ற பெயரில் ,சுமைதாங்கியாக்கி விட வேண்டாமென்றுதான் சொல்கிறோம்

நேரம் அனுமதித்தால் மறுபடியும் வருவேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

///எப்படி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது நமது கடமையோ, அதே போல் நம்முடைய எதிர்காலத்திற்கும் சேர்த்து வைத்துக் கொள்வதும் நமது கடமையே.///

///ஒன்னும் இல்லை 'என் பிறந்த நாளுக்கு இது வேண்டும்’ என்று பேரப் பிள்ளைகள் கேட்கும் போது என்ன கதை சொல்லி சமாளிப்போம்? அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுக்கும்போது அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் எவ்வளவு மன நிறைவாக இருக்கும்.///

ஆஹா!
இது ரொம்ப நல்லா இருக்குங்க! பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதும் பெற்றவர்கள் கடமை!
தங்களுக்கும் சேர்த்து வெச்சுக்கனும் அதுவும் கடமை. பத்தாததுக்கு தங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகள்/கொள்ளுப்பேரன்கள்/எள்ளுப்பேரன்கள்னு யார்கேட்டாலும் சந்தோஷமாய்

கொடுக்கனும்!
ஆனா, பதிலுக்கு பிள்ளைகள் மட்டும் தங்கள் சம்பாத்தியம் தங்களுக்கு, தங்கள் குடும்பம் குழந்தைகளுக்குன்னு சுயநலமாய் இருந்துப்பாங்க. இது என்னங்க நியாயம்????

பிள்ளைகள் குடும்பம்னு வந்தாலே அங்க பெற்றோர்கள் எப்பிடிங்க காணாமபோறாங்க.???
பிள்ளைகள் குடும்பத்தில்/வருமானத்தில் எப்படி பெற்றோர்களுக்கு இடம் இல்லியோ, அதேபோல் பெற்றவர்கள் குடும்பத்தில்/முதுமைக்கால சேமிப்பில் மட்டும் எப்படி பேரக்குழந்தைகள் இடம்பெறனும்னு எதிர்பார்க்கமுடியும்?????

நாமும், நம் குழந்தைகளும் நம் பெற்றவர்களிடம் இருந்து "பெறும்போது" கிடைக்கும் சந்தோஷத்தினை ஏற்றுக்கொள்ளும் மனம்,
பெற்றவர்கள், விதிவசத்தால் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படும்போது மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது???

தேட வைத்துவிட்டேன்...மன்னிக்கவும்...
எதிரணியினரே...
நாங்கள் பெற்றோர் சேமிக்க வேண்டும் என சொல்வது சுயநலத்துக்காக மட்டுமல்ல...
பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது என்றும் சொல்லவில்லை...
வாழும் நாள் வரைக்கும் முடிந்த வரை சுறுசுறுப்பாக இருந்து அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் சொல்கிறோம்...
பெற்றோர் பிள்ளைகளை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும்போது எதிர்பார்ப்புகள் வளரும்...எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது பிரச்னைகள் வரும்...எனவே பிரச்னைகளைத் தவிர்க்க நினைப்பவைகள் தங்கள் இளமையில் சேமிப்பது நலம்..
கீதா உங்களைத் தான் சேமிக்க சொல்கிறோம்...நமது முந்தைய தலை முறையினரை நமக்கு நல்மனம் இருக்கும் பட்சத்தில் கவனித்துக் கொள்ளலாம்...நாம் நமது அடுத்த சந்ததியை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது தவறே....சேமிக்கவா வழியில்லை என்கிறீர்கள்....தினம் இரண்டு காபி குடிப்பவர் ஒன்றாக குறைக்கலாம்...இப்படி நிறைய...இதற்கும் கீழாக இருப்பவர்கள் நான் பார்த்த வரையில் அனைவரும் கடைசி காலம் வரைக்கும் உழைக்கின்றனர்...மனமிருந்தால் மார்க்கமுண்டு...
மீண்டும் சந்திப்போம்....சிந்திப்போம்...

நடுவர் அவர்களே,

என் கருத்து 'பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது தவறு என்பதே.

என் சொந்த அனுபவமே, என் (அம்மாவின் அப்பா) தாத்தா 60 வயத்திற்கு மேல், அவர்களுக்கு இரண்டு மகள்,ஒரு மகன் .இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்து பின் மகனுக்கும் திருமணம் முடித்தும் அவர்கள் உழைத்து கொண்டு தான் இருந்தார்கள். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் என் பெற்றோரை விட என் தாத்தா தான், அதிகம் உணவு பொருட்கள் வாங்கி தந்திருக்கிறார்கள். அவர்கள் பேரக்குழந்தைகள் அனைவருக்கும் வேண்டியவற்றை எல்லாம் வாங்கி கொடுக்கிறார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் அதிகம் பணம் படைத்தவர்கள் அல்ல, ஒரு சின்ன சிற்றுண்டி வைத்து தான் இன்னமும் நடத்துகிறார்கள். என் அம்மா, மாமா அனைவரும் அவர்களுடன் இருக்க வற்புறுத்தி அழைத்த போதும் போக மறுக்கிறார்கள், என் தாத்தாவிடம் நான் கேட்டால் என்னைக்கும் சொந்த காலில் இருப்பது தான் கெளரவம் என்பார்.என் குழந்தைக்கும் பிறந்தது முதல் இன்னமும் விஷேசம் என்றால் அவரால் முடிந்ததை மறுத்தும் செய்வார். அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக வயிற்றில் ஒரு ஆப்ரேசன் செய்தார்கள் அப்போது அம்மாவும்,மாமாவும்,சித்தியும் தான் பொருளாதார ரீதியாக பார்த்து கொண்டார்கள். அப்பப்ப வேண்டியதை மகன் மகள்களும், நானும்(என்னை எவ்வளவு பாசமாக பார்த்தார்கள்)செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னமும் அவர் சொந்தகாலில் நிற்பதையே விரும்புகிறார், டாக்டர் அட்வைஸ் படி கேட்டுகொண்டு மீண்டும் தன் தொழிலை தொடங்கி விட்டார். நான் இந்த முறை இந்தியா சென்ற போது கூட அவரிடம் எவ்வளவோ வற்புறுத்தி கேட்டேன், எங்களால் முடியாத போது வருகிறோம் என்றார்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சாராமல் இருப்பது அவர்கள் கெளரவத்தையும்,மகிழ்ச்சியேயும் கொடுக்கும். அதே நேரத்தில் எதிரணியினர் கூறுவது போல் என்றுமே எந்த மனசாட்சி உள்ள பிள்ளையும் தான் சுயநலமாய் முதுமையிலும் அவர்களிடம் பணம்பறிக்க நினைக்கமாட்டோம். அவர்கள் அன்பை வெளிபடுத்த அவர்களால் முடிந்தை செய்கிறார்கள். நாம் நம் பெற்றொருக்கும் செய்ய நினைப்பதை,செய்ய வேண்டியதை செய்கிறோம்.

இதே பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்தால் எம்மணி தோழிகள் சொல்வது போல் பெற்றொருக்கு திருப்தியின்மையும், பிரச்சனையும் வருத்தமுமே மிஞ்சும்.

ஆனாலும் எவ்வளவோ ஆண்மகன் செய்தாலும் திருப்திஅடையாத பெற்றொர்கள் அதிகம் இருக்க தான் செய்கிறார்கள். அம்மணி தோழி இளவரசி கூறியது போல் ஒன்றுக்கு மேல் ஆண்பிள்ளை இருந்தாலும் ஒருவரிடமே சுமைகளை அளிக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

ஆகவே நாம் கஷ்டப்பட்டு வளர்த்தோம், முதுமையில் நீ அதை செய்யவேண்டும் இதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கும் பெற்றொரை விட , தன்னால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்று சேர்ந்திருந்தாலும், பொருளாதார ரீதியாக பிள்ளைகளை சாராமல் இருக்கும் பெற்றோரின் மனமே மகிழ்ச்சியாகவும், எண்ணங்கள் விரிவடைந்தும் இருக்கும், அதுவே சரியாது என்று கூறி என்வாதத்தை முடிக்கிறேன்.

with love

பொருளாதார ரீதியாக பிள்ளைகளைச் சார்ந்து இல்லாதவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி இருக்கும் என்பது சரியில்லை.
எங்கள் உறவினர் (அவர் ஒரு பைசா கூட தன் பிள்ளைகளிடம் எதிர்பார்க்காதவர் மகனின் திருமணம், சீமந்தம் எல்லாவற்றிற்கும் முழுக்க முழுக்க அவரே செலவு செய்தார்) என் கணவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டது "என்மகன் சம்பாதித்து என்னிடம் எதுவும் கொடுததில்லை" என்று.
எனவே இதற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை.

பேரன், பேத்திக்கு செய்ய தாத்தா, பாட்டியிடம் பணம் இல்லாவிட்டால் என்ன? பரிசுப்பொருளை நீங்கள் வாங்கி தாத்தா, பாட்டியிடம் கொடுது பிள்ளைகளிடம் கொடுக்கச் சொல்லலாமே.

பிள்ளைகளைச் சார்ந்து இருப்பது தவறு என்று சொல்கிறீர்கள். நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தக்காலத்தில் ஒவ்வொருவரும் தனக்காக அனாவசியமாக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று. ஆனால் பெற்றோருக்கு நியாயமான செலவு செய்ய மனம் இருப்பதில்லை.
அன்புடன்
ஜே மாமி

நடுவர் அவர்களே எங அணீயை சர்ந்தவர்கல் பெற்றோர்கள் பாரம் அவர்களை கவனிக்க மாட்டொம் என்றூசொல்லவில்லை.ஆனால் அவர்கல் இளம் வயதில் சமிது கொண்டால் அவர்களிற்கும் அது தன்னம்பிக்கயை தரும் என்பதுதன் எங்கள் கருத்து.சரி இப்ப அவங்களொட ஒண்ணு நாங்க பெரன்.,பெத்திக்கு சர்து வைக்க சொல்லவில்லை.இப்ப பெரன்.ஊர்ல இருந்து விடுமுறைக்கு வருகிரன் அப்ப உங்ககிட்ட ஏதாவது வாங்கி கிட்கிரான்.அப்ப உங்கககிட்ட பணம் இருந்தால் சந்தொசமா உங்களால் வாங்கி தரமுடியிம்.சரி இதவிடுவொம்.மகள் ஊர்ல இருந்து வந்துடு திரும்ப பொகும்பொது உங்களிற்கு எதாவது வாங்கி தரதொன்றும்.அதற்க்கு உங்களால் முடியாமல் பொனால் வருத்தமாக இருக்கதா.நாம் யாரிடமும் எதிர்பார்த்து இல்லாமல் இருப்பது முக்கியமாக முதிர் வயதில் இருப்பது என்பது நல்ல மனமகிழ்ச்சியிம் தரும்.இத்ற்க்குதன் இள்ம்வயதில் சிரிதளவவது சமிது வைக்கவன்டும் என்டு வாதம்பன்னுகிறொம்.எனவெ நடுவர் அவர்கள் இளம் வயதில் சமிது வைப்பத சிற்ந்தது என்டு முடிக்கிரன்.நன்றீ.

ஹை நான் ஜயந்தி.எரிக் என் மகனொட.எப்படி இருக்கிங்க.உங்க குழந்தைகள் நலம் என்டு நினைக்கிரன்.உங்கலொட நட்பு கிடைத்ததில் ரும்ப மகிழ்ச்சி.இன்னும் பேஅசுவேவோம்.

///கீதா உங்களைத் தான் சேமிக்க சொல்கிறோம்...நமது முந்தைய தலை முறையினரை நமக்கு நல்மனம் இருக்கும் பட்சத்தில் கவனித்துக் கொள்ளலாம்...நாம் நமது அடுத்த சந்ததியை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது தவறே///

ஹாய் தேன்மொழி!
உங்க அக்கறைக்கும்,அறிவுரைக்கும் மிக்க நன்றி!
கடவுளின் ஆசீர்வாதத்தால் நாங்கள் ஓரளவிற்கு சேமித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனாலும், எங்களுடைய சேமிப்பில் இன்னும் எங்களுக்கு அது, இது குழந்தைகளுக்கென்று பேதம் பார்க்கவில்லை.
எல்லாமே பொதுவில் இருக்கும் நிலையிலோ/ எங்கள் முதுமைக்கால சேமிப்பாக இருந்தாலும் அது குழந்தைகளின் அவசரத்தேவை/அத்தியாவசியத்தேவை என்று வந்துவிட்டால்
நம் முதுமைக்காலம் எல்லாம் நினைவில் இருந்து அழிந்துவிடும்.

பட்டிமன்றத்தின் தலைப்பு பொருளாதார ரீதியில் பிள்ளைகளை சார்ந்து வாழ்வது சரியா? தவறா? என்பதுதான்,
ஒட்டுமொத்தமாக எதிரணியினர் பெற்றோரை தங்களுக்காகவோ/பிள்ளைகளுக்காகவோ/பேரப்பிள்ளைகளுக்காகவோ /வீடு வந்து திரும்பி செல்லும் மகளுக்காகவோவாவது சுயநலமாய் இருந்து சேமிக்க சொல்றாங்க.
இதற்கு சில அழகான விளக்கங்கள் வேறு தருகிறார்கள். தங்கள் தன்னம்பிக்கைக்காக/பாசத்தினைகாட்ட, இப்படிப்பட்ட விளக்கங்கள்.

நம் பெற்றோர்கள் மட்டுமல்ல நாமும் சுயநலமாய் இருக்க ஆரம்பித்தால் இந்த உறவுமுறைகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

பல கஷ்டங்கள் இருந்தாலும், வருமானம் வாய்க்கும், வயிற்றுக்கும் இருந்தாலும் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்குகிறார்களே, அவர்களுக்காக நாம் ஏன் நம் தேவைகளை குறைத்துக்கொண்டு, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடாது.???

" மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" இதுவும் எதிரணியினர் சொன்னதுதான்.
எதிரணியினர் சொல்வதுபோல், பெற்றோர்கள் எப்படி தங்கள் வருமானத்திலேயே குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கிகொண்டே, தங்கள் முதுமைக்கால சேமிப்பினையும் பண்ணனும்னு சொல்கிறீர்களோ,
அதேபோல், பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தினரை கவனித்துக்கொண்டே பெற்றவர்களுக்கும் தேவையானதை செய்யலாம்.
அதனால் நம் சொத்துக்கள் அழிந்துவிடாது. ஆனால் அது தவறு என்று வரும்போது

சொந்தங்கள்தான் அழிந்துவிடுகிறது/அறுந்துவிடுகிறது!!!/

நாமெல்லாம் சுயம்பு வடிவம் கிடையாது. பெற்றோர்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம். அவர்களால் உருவாக்கப்பட்ட/உயர்வான இடத்தினில் அமரவைக்கப்பட்ட நம்மை அவர்கள் சார்ந்திருப்பது தவறு என்று பிள்ளைகள் சொல்வதுதான் "தவறிலும் மிகப்பெரிய தவறு"!!!!

பிள்ளைகள் ஈட்டும் ஒவ்வொரு நயாபைசாவிற்கும் அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்கள் பெற்றோர்கள்தான்.
நம் வாழ்வு அவர்களால் அளிக்கப்பட்ட வரமாகும். வரம் கொடுத்த தெய்வங்களுக்கு அள்ளிக்கொடுக்காவிட்டாலும், கிள்ளிக்கொடுக்கலாம்.

நானோ என் கணவரோ எங்கள் எதிர்கால வாழ்வை நினைத்து என்றும் சேமிப்பினை செய்யவில்லை.
.
ஜெயந்தி மாமி சொல்வதுபோல்,
பணம் இருந்துவிட்டால் மட்டும் பெற்றோர்களுக்கு மனநிறைவு வந்துவிடாது.
அவர்கள் பொருளாதார தேவைகளை நாம் நிறைவேற்றுவது நம்முடைய பாக்கியமாக நினைப்பதனை அவர்களுக்கு புரியவைத்தால் போதும். எல்லா குடும்பமும் இனிய குடும்பம்தான்!!!

நடுவர் அவர்களே!
நாளையும், நாளை மறுதினமும் குழந்தைகளுக்கு பள்ளிவிடுமுறை என்பதால், இத்துடன் எனது வாதங்களை முடித்துக்கொள்கிறேன்! எமது அணி, எதிரணித்தோழிகளுக்கு வாழ்த்துக்கள்!
வாய்ப்புக்கு மிக்க நன்றி!!

ஆஹா.... சூடான வாதங்கள், எதிர் வாதங்கள்!!!! சூப்பரான கருத்துகள். நாளை ஒரு நாள் தான் இருக்கு!!! :(( இப்படி எல்லாரும் நியாயமாவே பேசினா நான் யாருக்கு சாதகமா தீர்ப்பு சொல்ல!!! அனைவரும் தொடருங்க. ஒரு கடைசி சுற்று வாதத்தை பதியுங்கள். அதையும் சேர்த்து படிச்சுட்டு, நான் என் தலையை உருட்டி ஒரு தீர்ப்பை சொல்ல பார்க்கிறேன்.

வாங்க இளவரசி, சுபத்ரா, பிரியா.... வந்ததும் பட்டைய கிளப்பறீங்க. வாழ்த்துக்கள். தொடருங்க. :) மிக்க நன்றி.

சாய் கீதா... மிக்க நன்றி.முடிஞ்சா உங்க அணி'கு ஒரு இறுதி சுற்று வாதம் பதிவு செய்ய வாங்க. விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்க. :) மிக்க நன்றி.

தேன்மொழி, கவிசிவா, மாமி, எரிக் (ஜயந்தி), மதி... எல்லாரும் சுப்பரான கருத்துகளை சொல்லி இருக்கீங்க. என்னை தான் ரொம்ப முழிக்க வெச்சுட்டீங்க!!! எப்படி தீர்ப்பு சொல்ல போறேனோ.....!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்