பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

sabaash kavisiva

தளிகா:-)

ஹாய் ரூபி எப்படி இருக்கீங்க? குட்டீஸ் ரெண்டு பேரும் நலமா?

எதிரணியினர் எல்லோரும் ஏதோ நாங்களெல்லாம் பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிடும் சுயநலக்காரர்கள் போல் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல தோழிகளே! எங்கள் பெற்றோர் இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். பெற்றோருக்கு அன்பையும் இனிமையான கவனிப்பையும் தேவைப்படும் போது பண உதவியும் செய்ய நாங்கள் மறப்பதில்லை. அப்படி மறப்பவர்களை நாங்கள் பிள்ளைகளாக மதிக்கவும் இல்லை.

சாதாரணமாக தந்தை ரிட்டையர் ஆகி வீட்டில் இருக்கும் போதே ஒரு வித டிப்ரெஷனுக்கு ஆளாகி விடுவார்கள். தன்னை இனி யாரும் மதிக்க மாட்டார்களோ என்ற எண்ணத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொள்வார்கள். வீட்டில் உள்ளவர்கள் இதைப் புரிந்து கொண்டு அவரிடம் இதமாக நடந்து கொண்டால் கூட அவரை அந்த டிப்ரஷனில் இருந்து மீட்டு கொண்டுவர மிக சிரமப்பட வேண்டியிருக்கும். இதில் அவருக்கு இனிமேல் எல்லாவற்றிற்கும் பிள்ளையையே சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். இதனால் கஷ்டப்படுவது எல்லோரும்தான். இதெல்லாம் வேண்டாமே என்றுதான் பிற்காலத்திற்கென்று சேமித்துக்கொள்ளுங்கள். மாதாமாதம் சிறு வருமானம் வரும் அளவுக்கு ஏதேனும் திட்டத்தில் சேர்ந்து எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கிக் கொள்ளுங்கள் என்கிறோம்.

ஏதோ விதிவசத்தால் தங்களை கவனிக்கவேண்டிய பிள்ளை இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த இழப்பு தாங்க முடியாத வேதனை. இந்த வேதனையோடு தங்களுக்கு வருமானமும் இல்லையென்றால் அந்த பெற்றோர்களின் நிலை என்ன?

நாம் பிள்ளைகளாக இருக்கும் போது நம் பெற்றோருக்கு நாம் பணம் கொடுப்பது நமக்குத்தான் சந்தோஷமே தவிர அவர்களுக்கு அது சிறு உறுத்தலாகத்தான் இருக்கும். நாம் என்னதான் எடுத்து சொன்னாலும் அவர்களால் முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாது.இது நிதர்சனமான உண்மை. எதிரணித்தோழி கூட அவரது மாமியாரைப் பற்றி சொன்னார். அவர்கள் பொறுப்பான பிள்ளைகளாக நடந்து கொண்டனர். ஆனால் அவர் மாமியாருக்கு தன் தேவைகளை தான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதுதான் அவருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

வருமானம் இல்லாமல் பெற்றோர் பிள்ளைகளை சார்ந்து இருக்கும் போது பிள்ளைகள் பொறுப்பானவர்களாக பெற்றோரை இன்முகத்தோடு கவனித்துக் கொண்டாலும் பெற்றோர் முழுமையான மகிழ்ச்சியோடு இருப்பார்களா என்றால் அது சந்தேகமே! தங்கள் பிள்ளைகளை நினைத்து சந்தோஷப்படுவார்கள். ஆனால் சிறு சிறு தேவைகளுக்கு கூட பிள்ளைகளை சார்ந்திருப்பதை நினைத்து கண்டிப்பாக வேதனைப்படுவர். அதை நேரடியாக வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அந்த வேதனையை ஒரு நல்ல பிள்ளையால் புரிந்து கொள்ள முடியும். அந்த வேதனை கூட எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது என்றுதான் எதிர்காலத்திற்கு சேமியுங்கள் என்கிறோம்.

பிள்ளைகளே பேரக்குழந்தைகள் கேட்கும் பொருளை வாங்கி பெற்றோரிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லலாமே என்கிறீர்கள். அது பேரப்பிள்ளைக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் தாத்தாவுக்கு மன நெருடலைத்தான் கொடுக்கும்.

அன்பாக கவனித்துக்கொள்ளும் பிள்ளைகளை பெற்ற இரு பெற்றோரை எடுத்துக் கொள்வோம். ஒருவருக்கு தன் தேவைக்கான சிறு வருமானம் இருக்கிறது. மற்றவருக்கு வருமானம் இல்லை என்று வைத்துக் கொண்டால் இருவரில் யார் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்றால் அது வருமானம் உள்ள பெற்றோர்தான். அதில் சந்தேகமே இல்லை.
அதனால்தான் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் முற்றிலுமாக பிள்ளைகளை சார்ந்திருப்பது தவறு என்று சொல்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே முதுமையில் பிள்ளைகளய் சார்ந்து இருக்கும் எத்தனை பெற்றேர்கள் முளுமையான மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்,ஆனால் பிள்ளைகள்ளை சாராமல் வாழும் பெற்றேர்கள் முழுமையான் மகிழ்வுடன் வாழ்கிறர்கள்.இளமையில் தனக்கன சேர்த்து வைக்காததன்ன்ல் இன்று பல பெற்றேர்கள் government_i நம்பி(muthioyr goverament pension)வாழ்ந்து கொன்டிருகிறார்கள்.ஒவ்வொரு மாதமும் பென்சன் தொகை தாமாதம் ஆகிவிட்டால் அவர்கள்படும் வேதனை அப்பப்பா.இந்த நிலமை நாளைய முதியவ்ர்களிர்க்கு வரகூடாது என்பதற்க்குதான் இளமையில் சிறிதளவு சேர்த்து வைக்கவண்டும் என்கிறேம்.முதுமையில் கால்கள்தள்ளாடினலும் மனம் தள்ளாடாமல் வாழ இளமையில் சேர்த்து வைப்பது என்பது புத்திசாலித்தனம்.என்று எனது உரையை முடிக்கிறேன்.நன்றி.

நடுவர் அவர்களே!
உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து என்னுடைய கடைசி கட்ட வாதத்தினை பதிவு செய்கிறேன்.
பட்டிமன்ற தலைப்பினை பார்த்ததுமே நினைத்தேன். பொருளாதாரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்திருப்பது தவறென்ற அணியின் ஆதிக்கம்தான் அதிகமாய் இருக்கும் என்று.

தலைப்பினில் பெற்றோர்கள் என்று பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர்கள் ஆண்களின் பெற்றோர்களா அல்லது பெண்களின் பெற்றோர்களா என்று குறிப்பிடவில்லை என்பதால்தான், நானும் பொதுவாகவே என் கருத்துகளை தெரிவித்தேன்.

நம் நாட்டில் கூட்டுக்குடும்ப முறை என்பதே சிதறிவிட்டது. அப்படியும் தனிக்குடித்தனம் போபவர்கள் எல்லாரும் நிம்மதியாக , சந்தோஷமாய் இருக்கிறார்களா என்றால் அதுவும் குறைவுதான்.

பெரும்பாலான குடும்பத்தில் பிரச்னைகளின் மூலகாரணம், கணவரோ அல்லது வேலைக்கு சென்று கணவருக்கு இணையாக வருமானம் ஈட்டும் மனைவியோ, தங்களுடைய பெற்றோர்களுக்கு பொருளாதார உதவி செய்வதனை அவர்களுடைய வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்ளாமல் போவது.

விவாகரத்துக்கள் என்பது அரிதாக இருந்த நம் தாய்திருநாட்டில் இப்போது குடும்ப நல நீதிமன்றங்களில் வேதனையுடன், வெறுப்புடன் காத்திருக்கும் தம்பதிகளும், தாயா அல்லது தந்தையா என்ற இருதலைக்கொள்ளி எறும்பு தவிப்பாய் காத்திருக்கும் குழந்தைகள் அதிகமாகிவிட்டனர்.

ஆண்கள், " இன்று வந்த உனக்காக இவ்வளவு காலமாக என்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பொருளாதார உதவி செய்வதை நிறுத்தமாட்டேன். இப்படிப்பட்ட நீ எனக்கு தேவையில்லை என்றும்,

வேலைக்கு செல்லும் பெண்கள், " உங்களை எப்படி உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு ஆளாக்கினார்களோ அதேபோல்தானே என் பெற்றோரும் கஷ்டப்பட்டு என்னை படிக்கவைத்து, இன்று சம்பாதிக்கும் அளவிற்கு கொண்டுவந்தார்கள். அவர்களுக்கு பொருளாதார உதவி செய்வதை தடுக்கும் உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்றும்
வாதிட்டு பிரச்னைகளை பெரிதாக்கி நீதிமன்ற வாயிலில் நிற்கும் காட்சிகள் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆண்களை பெற்றவர்களோ அல்லது பெண்களை பெற்றவர்களோ யாராக இருந்தாலும், அவர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் பிள்ளைகளை நம்பியிருக்கும் சூழ்நிலையில், அவர்களுடைய வாழ்க்கைத்துணையின் பெற்றோர்களுக்கு உதவி செய்வதுதான் மனிதாபிமானம்.

எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு பொருளாதாரத தொந்தரவுகளை கொடுக்க
விரும்பமாட்டார்கள்.

அனாலும், அதனையும் மீறி அவர்களுக்கு அப்படி ஒரு நிலை வரும் நிலையில், அவர்களை தங்கள் குழந்தைகளில் ஒருவராக நினைத்து, பொருளாதாரத்தேவைகளினை நிறைவேற்றவேண்டும்.
இப்போதும், இனிவரும் காலங்களிலும் நிறைய பெற்றோர்கள் தங்கள் முதுமைக்கால சேமிப்பினை தொடங்கியிருக்கலாம், அல்லது இனி உஷாராக தொடங்கலாம்.
ஆனால், எத்தனையோ இலட்சக்கணக்கான பெற்றோர்கள் இன்னமும் தங்கள் வருமானத்தை, சேமிப்பினை தங்கள் குழந்தைக்களுக்காக செலவழித்துவிட்டு, தங்கள் முதுமைக்கால சேமிப்பினைக்கூட, தங்கள் குழந்தைகளுக்கு தேவையென்றால் பகிர்ந்து அளித்துவிட்டு ( பிள்ளைகளுக்கு வீடு வாங்க, பேரக்குழந்தைகளின் கல்லூரிப்படிப்பு, இப்படி பல காரணங்கள்). பிள்ளைகளை நம்பி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு குழந்தைகளை பெற்றவர்கள் நிலைகூட ஓரளவிற்கு பரவாயில்லை. ஒன்றுக்கு மேல் பெற்றவர்கள் நிலைமையோ மிக மிக கொடுமை என்று சொல்லும் அளவிற்குதான் இருக்கிறது.

" ஒரு பிள்ளையை பெற்றவர்களுக்கு உறியில் சோறு

நான்கு பிள்ளைகளை பெற்றவர்களுக்கு நடுத்தெருவில் சோறு"

என்பார்கள். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் பெற்றோரை அலைக்கழிக்கும் நிலையினை கேள்விப்பட்டும்/பார்த்தும் இருக்கிறோம்.

இன்றளவும் தங்கள் பெற்றோர்களுக்காக, தங்கள் வாழ்க்கைத்துணையுடன் போராடும் ஆண்களும்/ பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட இந்த அறுசுவை என்னும் அருமையான இணையதளத்தில் வைக்கப்படும் வாதங்களும் தீர்ப்பும் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் ஆகிவிடக்கூடாது, ஏற்கெனவே பெற்றோர்களுக்கு முதுமைக்காலத்தில் பொருளாதார உதவி செய்யப்படுவதால் எரிந்து கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்கு நெய் வார்ப்பதுபோல் அமைந்துவிடக்கூடாது என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.!!

நடுவர் அவர்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்!!!

nanre sey;athuvum inre sey.
i support sai geetha.when we were the kids our parents brought up to our present stage.so it 's our duty to support our parents.whether financially or morally.

nanre sey;athuvum inre sey.

நடுவருக்கும் மற்றும் இரு அணி தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

ஆமாம் சாய்கீதா நீங்கள் சொல்வது உண்மையே.................

"ஆண்கள், " இன்று வந்த உனக்காக இவ்வளவு காலமாக என்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பொருளாதார உதவி செய்வதை நிறுத்தமாட்டேன். இப்படிப்பட்ட நீ எனக்கு தேவையில்லை என்றும்,

வேலைக்கு செல்லும் பெண்கள், " உங்களை எப்படி உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு ஆளாக்கினார்களோ அதேபோல்தானே என் பெற்றோரும் கஷ்டப்பட்டு என்னை படிக்கவைத்து, இன்று சம்பாதிக்கும் அளவிற்கு கொண்டுவந்தார்கள். அவர்களுக்கு பொருளாதார உதவி செய்வதை தடுக்கும் உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்றும்
வாதிட்டு பிரச்னைகளை பெரிதாக்கி நீதிமன்ற வாயிலில் நிற்கும் காட்சிகள் சர்வசாதாரணமாகிவிட்டது."

அதற்காக தான் எங்கள் அணியினர் சொல்கிறோம் பிள்ளைகளை பெற்றோர்கள் பொருளாதாரத்தில் சாரவில்லை என்றால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இதனால் பெற்றவர்களுக்கும் நம்மால் தான் பிரச்சனை என்ற வருத்தமில்லாமல் இருக்க முடியும்.

ஆனால் நீங்கள் கூறிய இந்த கருத்தில், பெண் எப்போது இந்த கேள்வியே கேட்பால், கணவர் தன் பெற்றோருக்கும் மட்டும் பொருளாதார உதவி எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம், மனைவி சம்பாத்தியத்திலிருந்து அவள் பெற்றோருக்கும் சிறிது செய்ய முற்பட்டால் தடை செய்யும் போது அவள் இவ்வாறு கேட்க முற்படுகிறாள். எந்த வீட்டிலும் கணவன் இதை நம்மை போல் தானே அவளும் என்று ஒத்துகொள்வதில்லை, அப்படியே சிறிது ஏற்க முற்படும் மகனை மனமாற்றும் ஆண்களின் பெற்றோர்கள் ஏராளம். மகளின் பொருளாதாரத்தில் பெற்றோர்கள் இருப்பின் அவர்கள்படும் அவமானங்கள் ஏராளம்.......

ஆண் மகனை பெற்றவர்கள் எழுதபடாத சட்டங்களாகவே இதை வைத்துக்கொண்டு மகனின் பொருளாதாரத்தில் தேவைக்கும் அதிகமாக,ஆடம்பர வாழ்க்கை வாழும் பெற்றவர்கள் உண்டு......

ஆகவே தான் சொல்கிறோம் ஆண்,பெண் யாரை பெற்றவர்களானாலும் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சாராமல் வாழும் நிலை உருவானால் அது பெற்றவர்களுக்கு தான் மகிழ்ச்சியே அதிகமாக்கும், அதனால் உருவாகும் பிரச்சனைகள் மறையும். வீடும் நாடும் வளம் பெரும்.

பெற்றோர்கள் நம்மை சார்ந்திருந்தாலும் நாமே அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தாலும், அவர்கள் பொருளாதாரத்தில் நம்மை சாராமல் இருப்பது அவர்களுக்கு தன்னம்பிக்கை, ஊக்கம், மகிழ்ச்சி,கெளரவம் உண்டாகிறது.

பிள்ளைகளை சாராமல் இருக்கவேண்டுமென்றால் அதற்காக அவர்களை பார்த்துக்கொள்ளாமல், அவர்களை கஷ்டபட வைக்கவேண்டும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றாமல் இருக்கவேண்டுமென்று பொருள் அல்ல, அது முறையானதும் அல்ல.அப்படி செய்பவர்கள் மனிதர்களும் அல்ல. எந்த பிள்ளையும் இறுதி வரை தன் பெற்றோரை நல்ல முறையில் தான் பார்த்துக்கொள்வார்கள் வயதான காலத்தில் என்னதான் பிள்ளைகள் பார்த்து கொள்ளவார்கள் என்றாலும் அவர்களுகென்று சிறு சேமிப்புடன் அவர்களை சாராமல் இருப்பதே பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியானது, சரியானது சரியானது.

with love

//நாம் ஏன் நம் தேவைகளை குறைத்துக்கொண்டு, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடாது.???//

பூர்த்தி செய்யலாம் தாராளமாக….ஆனால் அது எந்த அளவுக்கு என்பதில்தான் குழப்பமே…:-)

நமக்கு தெரிந்து வெளிநாட்டில் வாழும் திருமணமான பிள்ளைகள் எத்தனை பேர் தங்கள் மனைவியையும்,பிள்ளைகளையும் தன் பெற்றோரை நம்பி விட்டுவிட்டு இருக்கிறார்கள்….????

எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டில் ஒரு பிள்ளை வெளிநாட்டில் …அவர் தன் தேவைகளை குறைத்து கொண்டு தன் மொத்த வருமானத்தையும் தன் பெற்றோருக்கு அனுப்புகிறார்….

அதனால்
அந்த பெற்றோர்களிடம் பொருளாதரரீதியாக ,சார்ந்திருக்கும் மருமகள் தன் ஒவ்வொரு நியாயமான தேவைக்கும் அவர்களிடம் கையேந்தவேண்டும்….

திருமணத்தால் முழுமையாய் படிப்பை முடிக்க முடியாமல் போனதால்,திருமணத்தின் பிறகு கணவனின் அனுமதியுடன் தொடர நினைத்தபோது அதற்கு ஆகும் செலவை அவள் வீட்டில்தான் கொடுக்கவேண்டுமென இரக்கமின்றி சொன்னார்கள்….

பாவம் அவள் வீட்டில் அவள் ஒரே பெண்பிள்ளை….
அவளுக்கு ஒரு குழந்தை உண்டு….இரண்டாவதாக ஒரு குழந்தை உண்டானபோது ,உன் கணவன் வருமானத்திற்கு ஒரு குழந்தை போதுமென இரண்டாவதை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்…..

தன் தேவைகளை ,குழந்தைகளின் தேவைகளை கூட குறைத்து கொள்ளலாம்.

குழந்தையையே குறைத்து கொள்ள சொல்லும் கொடுமையெப்படி…..இதுதான் உரிமை மீறல்……

இது போன்று கொடுமைகள் பெற்றோர்கள் பொருளதர ரீதியாய் பிள்ளைகளை அதிகப்படியான சார்ந்திருப்பதால்தான்…நடக்கிறது.....

வரதட்சிணை கொடுமைக்கும் இந்த சார்ந்திருப்புதான் வழிவகுக்கிறது என்றால் அது மிகையில்லை..

//எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு பொருளாதாரத தொந்தரவுகளை கொடுக்க
விரும்பமாட்டார்கள்//

சார்ந்திருப்பு சரியென்று நினைக்கும் பெற்றோர்கள்,ஆடம்பரமான பொருளாதர தேவைகளை பூர்த்தி செய்ய நினைப்பதை பிள்ளைக்கு கொடுக்கும் பொருளாதர தொந்தரவாய் நினைப்பதே இல்லை.

இப்படியெல்லாம் சொல்வதால் எதிரணியினர்,எங்களை கொடுமைக்கார மருமகளாய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்……

என்னை பொருத்தவரை கடவுளின் ஆசிர்வாதத்தில்

எல்லாரும் பொருளாதரரீதியாய் எங்களை சார்ந்து
வாழும் கூட்டு குடும்பத்தில் இருந்தாலும்

எங்களுக்கு அதிகப்படியான வருமானமிருப்பதால்

பொருளாதரம் எங்களுக்கு ஒரு பிரச்சனையில்லை
என்பதால்…..அந்த சார்ந்திருப்பை மனபூர்வமாய் ஏற்றுகொண்டு அவர்களை இன்றுவரை முழுமையாய் திருப்திபடுத்திகொண்டிருக்கிறோம்.

என் பெற்றோர்களும் பொருளாதர ரீதியாய் என்னையோ/என் சகோதரர்களையோ நம்பியில்லாமல் கவி சொன்னதுபோல தனக்கென சேமிப்பை வைத்துகொண்டு எங்களுக்காகவும் சேமிக்கிறார்கள்...
அதனால் நிம்மதியாய இருக்கிறார்கள்....

ஆனால் பணம் வரவுக்கும் செலவுக்கும் போதாமலிருக்கும் நடுத்தர வர்க்கத்தில் இந்த சார்ந்திருப்பில் பெற்றோர் மற்றும் மனைவி,பிள்ளைகள் என அனைவரையும் திருப்திபடுத்த

அந்த பிள்ளைகள் இருதலை கொள்ளி எறும்பாய் அவஸ்தைபடுகிறார்கள்.

எதிரணியினர் வயதான பெற்றோர்கள் என்றாலே ஏதோ அன்றாட செலவுக்காய் மட்டும் சார்ந்து வாழும் குடும்பங்களை மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள் போல….

பல பெற்றோர்கள் இந்த சார்ந்திருப்பால்தான் அதிகப்படியான ஆடம்பர செலவுகள் செய்கிறார்கள்…

அதனால் அந்த பிள்ளைகள் ஜீரணிக்கமுடியாத சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்…நான் முதலில் சொன்ன உதாரணம் போல..

நான் எத்தனையோ நடைமுறை உதாரணங்களை பார்த்திருப்பதால்தான் இதை சொல்கிறேன்.

எதிரணியினர் சொல்வதுபோல குடும்பத்தில் பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு மூலகாரணம் இந்த சார்ந்திருப்புதான்…..என்பதால் இது தவறுதான்…….

மேலும்….நம் பெற்றோர்கள் நம்மை கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு வளர்த்தார்கள்..

நாமும் நம் பிள்ளைகளை அப்படித்தான் வளர்க்கிறோம்…

நாளை நம் பிள்ளைகளும் அப்படித்தான்
வளர்க்க போகிறார்கள்..

இது ஒரு தொடர்ச்சியான பாச சங்கிலி …

அவரவர் தன்னால் முடிந்ததை நம் அடுத்த சந்ததிக்கு எதிர்பார்ப்பில்லாமல் செய்யவேண்டும்…

இதில் நான் அப்படி செய்தேன்…ஆக…நீ இப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் கணக்கு பேச இது வியாபரமில்லை……….வாழ்க்கை…….:-)

“என் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளையே….

உன்னை முடிந்தவரை உன் நாளைய

எதிர்காலத்திற்கு தயார்படுத்துவேன்…

முடிந்தவரை உன்னை தூக்கிவிடுவேன்…

நாளைக்கும்….உன் வாழ்க்கை சவாலில்

நீ துவண்டு விடாமல் தோள் கொடுப்பேன்….

என் தேவைகளுக்கெல்லாம் உன்னை சாரமாட்டேன்

தேவைப்பட்டால் மட்டும் சாய்ந்து கொள்வேன்…

ஏனெனில் நான் என்னையே உன்னில் பார்க்கிறேன்…

நான் மறுபடியும் பிறந்திருப்பதாய்………..

ஆக என்னை கஷ்டப்படுத்த எனக்கே விருப்பமில்லை “

என்ற கண்ணோட்டத்தில் ஒவ்வொரு பெற்றோரும்

இருக்கவேண்டும்.

எதிர்பார்ப்பில்லாமல் தெய்வீகமான அன்பு செலுத்த பெற்றோர்களால் மட்டுமே முடியும்…..

இதுவரை நம் சந்ததியினர் பொருளாதர ரீதியாய் அது சரியோ/தவறோ என்ற கேள்விக்கு இடமின்றி சார்ந்து வாழ்கிறார்கள்……….ஒரு சில விதி விலக்குகளை தவிர……..

நாளைய பெற்றோராகப்போகும் நம் பிள்ளைகளுக்காக…..

இன்றைய பெற்றோர்களாகிய நாமாவது மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்து சிந்தித்தால்….உணர்வு பூர்வமாக மட்டுமல்லாமல்

அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட்டால் நாளைய ஒளிமயமான எதிர்காலம்…..

நம் பிள்ளைகளுக்கு உண்டு…நிம்மதியான நாட்கள் நமக்கும் கிடைக்கும்…….

தன்னம்பிக்கையுடன் தன்னால் முடியும்வரை சாராமல் வாழ்வது ஒரு சுகமென்பதை அப்படி வாழும்போதுதான் நம்மாலும் புரிந்து கொள்ளமுடியும் என்பதுதான் எங்களணியின் ஆணித்தரமான கருத்து...

எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்தும்போது....கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்...கிடைக்காவிட்டாலும் அதை ஏற்றுகொள்ள மனம் பழகிவிடும்....

மற்றவர்களை மாற்றுவது கடினம்....
நம் பெற்றோர்கள் சார்தல் சரியென்று எதிர்பார்ப்பில் இன்றுவரை இருந்துவிட்டால் அதை நம்மால் இனி மாற்ற முடியாது.. ஏற்று கொள்வோம்...

ஆனால் நாம் நினைத்தால் நாளைய வாழ்க்கைக்காய் நம்மை சார்தல் சரியென்ற நம் கருத்தை மாற்றி கொள்ளலாமல்லவா?

இதை தயவுசெய்து எதிரணி சுயநலத்தோடு முடிச்சு போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம்...

வாய்ப்பிற்கு நன்றி....
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அடடா.... தளிகா வந்து சபாஷ் போட்டுட்டு போலாமா???!!!!! உங்க பதிவை படிக்க நாங்க எல்லாரும் ஆசையா பார்த்துட்டு இருக்கோம். வாங்க மீண்டும் ப்ளீஸ்.

சாய் கீதா அழைப்பை ஏற்று அன்போடு வந்து பதிவு போட்டிருக்கீங்க.... மிக்க நன்றி.

கவி சிவா விடாம எதிர் அணிக்கு பதில் குடுத்திருக்கீங்க. ;) சூப்பர்.

ஜயந்தி, ராதா, சுபத்ரா, இளவரசி..... கலக்கிட்டு இருக்கீங்க. இன்று இரவு வரை உங்க வாதங்களை பதியுங்க. இளவரசி.... //என் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளையே….// உங்க சொந்த வரிகளா??? ரொம்ப சூப்பர்ங்க. இதான் இளவரசி ஸ்பெஷல். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா.... கலக்கலா சூடா வாதங்கள் போகுது!!! இப்போ எனக்கு தான் பயம் பிடிச்சுகிச்சு. :( தீர்ப்பு சொல்ல ரொம்ப குழப்பமா இருக்கு. இன்னுமே ஒரு முடிவுக்கு வர முடியல. எல்லாருடைய வாதத்திலும் நியாயம் இருக்க மாதிரியே இருக்கு. நான் போய் கொஞ்சம் யோசிச்சுட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி அருமையான வாதம். உங்களுக்கு என் மனப்ப்பூகளால் செய்த பூச்செண்டு இதோ .... பிடியுங்கள். "என் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளையே ..." வரிகள் மிக அருமை.

நடுவர் அவர்களே ரெண்டு அணியினரும் நல்லா வாதாடறாங்க. எல்லா கருத்தும் சரின்னுதான் படுதுன்னு சொல்லி ரெண்டுபக்கமும் தீர்ப்பு சொல்ற டகால்டி வேலையெல்லாம் கூடாது. வந்து தெகிரியமா வந்து தீர்ப்பை சொல்லிப்போடுங்கோ! என்ன தீர்ப்பு எங்க அணிக்கு பாதகமா இருந்தா தளிகா மூலமா ஒரே ஒரு ஆட்டோ மட்டும்தான் அனுப்புவோம். வேற ஒன்னும் செய்ய மாட்டோம் :-)

இதுக்கெல்லாம் நாங்க பயந்துடுவோமா நாங்கள்லாம் யாருன்னு நீங்க சொல்றது காதில் விழுது :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்