பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

மிக்க நன்றி கவிசிவா.... உங்க வாதம் மிக அருமை. பல நடைமுறை பெற்றோர்கள் மனதில் உள்ள கருத்தையே சொல்லி இருக்கிறீர்கள். அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இனி வரும் பட்டிமன்றத்திலும் உங்க ஆதரவு இருக்கனும்'னு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி இளவரசி... என்ன செய்ய நம்ம கண் முன்னாடி பல வயதான மக்கள் பார்த்துக்க பிள்ளைகள் இல்லாம தனியா முதியோர் இல்லங்களில் கஷ்ட பட்றாங்க.... தங்களுக்கென்று ஏதும் இருந்திருந்தா அவங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. உலகில் எல்லா பிள்ளைகளும் நல்லவரில்லை, எல்லா பிள்ளைகளும் பொறுப்பானவர்கள் இல்லை. பிள்ளைகளும் நல்லவரா இருந்து அவர்கள் வாழ்க்கை துணையும் நல்லவரா இருந்தா அந்த பெற்றோர் குடுத்து வெச்சவங்க. உங்க வாதமும் அதில் இருந்த வரிகளும் ரொம்ப அருமைங்க. கலக்கறீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா!
நீங்க சொல்வது எல்லாமே உண்மைதான். ஆனா, நாம என்னதான் 100 பட்டிமன்றம் நடத்தினாலும் பெற்றோர்கள் தங்கள் தியாகத்தினை குறைச்சுக்க முன்வர்றதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை நினைச்சு பெருமைப்பட்டுகிறதா, இல்ல வேதனைப்பட்றதான்னே தெரியலை.
தங்களை மெழுகுவர்த்தியாய் உருக்கிகிட்டாவது தன் பிள்ளைகளுக்கு வெளிச்சம் தரணும்னு விரும்பறாங்க. இதனையெல்லாம் பிள்ளைகள் புரிஞ்சிக்கிட்டா இப்படிப்பட்ட பட்டிமன்றங்களே தேவையில்லை.நாளுக்குநாள் முதியோர் இல்லங்களும் பெருகிகிட்டே போகாது.

இந்த பட்டிமன்றத்தில் சில தோழிகள் அவங்கவங்க குடும்ப சூழ்நிலையை சொன்னாங்க.
இங்கு நானும் ஒன்றினை சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் நடந்தது.

என் அப்பா இறந்து 6 வருடங்கள் ஆகிறது. கடவுள் ஆசீர்வாதத்தால், என் அம்மாவுக்கு பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்கும் நிலை இல்லை. மாறாக எங்கள் அனைவருக்கும் கொடுக்கும் நிலையிலேயே இன்றும் இருக்கிறார்.

திருமணமாகாத என் தம்பி ஒருவர் கத்தாரில் லிஃப்ட் கான்ராக்ட் பிஸினஸ் பண்ணிக்குகொண்டு இருக்கும் அவருக்கு சமீபத்தில் சின்ன பிரச்னை வந்தது.
ஒரு மலையாளி கம்பெனி மூலமாக கான்ராக்ட் எடுத்து நடத்திய அவரிடம் ஒரு மேனேஜர் உள்பட 50 பேர் வேலை பார்த்தார்கள்.
வேலைகள் முடிந்து பணத்தினை செட்டில் பண்ணும் சூழ்நிலையில் அந்த மலையாளி திரும்பவும் அவரிடமே பிஸினஸ் பண்ணனும்னு கண்டிஷன் போட்டு பணத்தினை செட்டில் பண்ண தாமதித்தார்.
என் தம்பியிடம் வேலை பார்த்தவர்கள் அனைவரும் இந்தியர், ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள். அத்தனை பேரையும் நம்பிய குடும்பங்கள்.
அவர்களுக்கு பணத்தினை செட்டில் பண்ண முடியாத சூழ்நிலையில், என் தம்பி இந்தியார் வந்திருந்தார். தேவைப்படும் தொகை மிகப்பெரிது என்பதால் அவசரத்திற்கு யார் யாரையோ கேட்டும் கிடைக்காமல் பரிதவித்துகொண்டிருக்கிறார்.
பொறுத்து பொறுத்து பார்த்த அம்மா, யாரிடமும் சொல்லாமல் தன் முதுமைக்கால சேமிப்பிற்காக போட்டு வைத்திருந்த அத்தனை தொகையையும் எடுத்தும், தன்னுடைய நகைகள் அனைத்தினையும் வங்கியில் அடமானமாய் வைத்தும், என் தம்பியே எதிர்பாராத நிலையில் அவர் கையில் வைத்தார்.

திரும்பவும் அந்த பணத்தினை எல்லாம் தம்பி கொடுத்திட்டார்,. இருந்தாலும் என் தம்பியாலேயே அந்த தொகையினை திருப்பி கொடுக்க முடியாமல் போயிருந்தால், அம்மாவின் நிலை என்ன??
அம்மாவின் பதில் இதுதான்,

அவன் சாப்பிடும் சாப்பாட்டில் எனக்கு ஒரு வாய் தரமாட்டானா? இல்லாட்டி போனாலும் அதனைப்பற்றி கவலைப்படமாட்டேன். அவன் என் கண் எதிரே பணத்திற்காக கஷ்டப்படுவதை பார்த்திட்டு சும்மா இருக்கமுடியாதுன்னு சொன்னாங்க.

என் அம்மா மட்டும் இல்லை. நம் நாட்டில் 99.9% பெற்றோர் இப்பிடித்தான் இருக்காங்க. ஒருவேளை எதிர்காலத்தில் என் அம்மாவின் இடத்தில் இருந்தால் நாமும் அதனைத்தான் செய்வோம் என்பதுதான் உண்மை.

தனக்கு மிஞ்சியதுதான் மற்றவர்களுக்கு என்பது, தான தர்மங்களுக்கு மட்டுமே பொருந்தும், பிள்ளைகள் விஷயத்தில் ஏனோ பொருந்துவதில்லை.

உங்களின் நியாயமான/பொதுநல மனோபாவத்துடன் கூடிய தீர்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்!

வனி, நீங்கள் தீர்ப்பு கூறிய விதம் மிகவும் அருமை. இனி வரும் காலத்திற்கு ஏற்ற சரியான தீர்ப்பு. இரண்டு அணியிலும் திறமையாக வாதாடிய தோழிகளுக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி வின்னி. நான் அழைத்ததும் ஓட்டோடி வந்து பட்டிமன்றத்தில் பதிவு போட்டீங்க. :) அதுக்கு முதல்ல நன்றி சொல்லனும் நான். நீங்க தானே "தவறு தவறு"னு இரண்டு முறை அழுத்தி சொல்லிபதிவு போட்டீங்க... ;) கூடவே வலுவான கட்சின்னும் சொல்லிட்டீங்க.... நான் வேற எதாச்சும் சொல்லி இருந்தா இன்நேரம் கவிசிவா கூட கூட்டு சேர்ந்து அடிக்க ஆள் அனுப்பி இருக்க மாட்டீங்களா.... அதான் குரு பேச்சை கேட்டு உடனே "தவறு"னு சொல்லிட்டென். அடுத்தடுத்து வரும் பட்டிமன்றங்களிலும் நீங்க அவசியம் கலந்துக்கனும். நடுவரா வந்தா நாங்க எல்லாம் அதிகமா சந்தோஷபடுவோம். நீங்க தான் முடிவு பண்ணி சொல்லனும். :D Please....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல விளக்கமான நியாயமான தீர்ப்பு,வாதாடிய அனைவரின் வாதங்களும் அருமை.வனிதா எல்லா பட்டிமன்றத்திற்கும் வந்து விடுவேன் பார்வையாளராய் மட்டும்,எனக்கு ஒரு சீட் ரிசர்வ் செய்து கொள்கிறேன்.பட்டிமன்றம் பார்க்க ரசிக்க மட்டுமே எனக்கு பிடிக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனிதா நீங்கள் கூறிய தீர்ப்பு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

தீர்ப்புக்கு ஐடியா யார் தந்தா? சிவகுமரன் தானே!!!!!

சாய்கீதா உங்கள் வாதங்கள் மிகவும் நன்றாக இருந்தது.

பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சுபத்ரா.

with love

கவிசிவா,
நீங்க ரொம்ப அழகாவும் தெளிவாவும் உங்க கருத்துகளை சொல்றீங்க. வாழ்த்துக்கள்.
வனிதா,
தீர்ப்பு சொல்வது மிக கடினமான வேலை. நீங்க தீர்ப்பு சொன்ன விதம் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஆசியா. :) பார்வையாளர் பதவி போதாதே.... ஒரு முறையாச்சும் நடுவரா வாங்க ப்ளீஸ். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி சுபத்ரா..... ஐடியா சிவா தந்ததில்லை.... உலகம் தந்தது. உலகிலேயே சிறந்த பாடம் அனுபவம் தானே!!! :)

மிக்க நன்றி ரத்னா... கடினமான வேலை இல்லை... சூப்பரான வேலை!!! ஏன்னா நம்ம என்ன நினைக்கிறோமோ அது தானே தீர்ப்பு!!! ;) ஹிஹிஹீ. நம்ம கட்சி தான் ஜெயிக்கும். நீங்க வேணும்'ன ஒரு முறை நடுவரா இருக்கீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்