பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

வனிதா
நடுவரா? ஐயோ, எனக்கு அந்த அளவுக்கு எழுத வராது. சாரி பா. நீங்களும் கவிசிவாவும் ரொம்ப அழகா சொல்லநினைபதை தெளிவா சொல்றீங்க. அதனால நீங்களே நடுவரா இருங்க.

ரத்னா... ஒன்னும் பயம் இல்லை... முயற்சி செய்து பாருங்க. :) வரும் வாரம் முடியலன்னாலும் அடுத்த வாரம் வர முயற்சி செய்யுங்க. நல்லா வாதிடுறீங்க, நிச்சயம் நல்லா தீர்ப்பு சொல்வீங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, நடுவரை ஓடி ஓடி பிடிக்கிறீங்க போல இருக்கு:)எனக்கும் வேலை சற்று இருப்பதால் இங்கு வருவது கடினமாக உள்ளது. இருந்தாலும் பட்டிமன்ற ஆர்வலர்களுக்காகவும், உங்களுக்காகவும் நான் இந்த முறை நடுவராக இருக்க முடிவு செய்துள்ளேன். புது தலைப்பை பதிவு செய்கிறேன். அங்கு வந்து தோழிகள் வழக்கம்போல் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வின்னி... இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு இல்லை. :) ரொம்ப நன்றி... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொடருங்க, தினமும் வந்து பதிவு போட முடியலனாலும் பரவாயில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாங்க. மீண்டும் நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்