வெண்டைக்காய் பொரியல்

தேதி: January 18, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

வெண்டைக்காய் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெண்டைக்காயை கழுவி நன்கு துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
விருப்பப்பட்டால் நறுக்கின வெண்டைக்காயை ஓவனில் 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து திரும்ப நன்கு வதக்கி எடுக்கவும்.
சுவையான சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி. விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கலாம். இதனை சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்