தேதி: January 20, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பஃப் பேஸ்ரி ஷீட் - 2
ஸ்பினிச் கீரை - ஒரு கட்டு
டோபு - 8 Oz
அவித்த உருளைக்கிழங்கு - 2
நறுக்கின வெங்காயம் - அரை கப்
நறுக்கின உள்ளி - 2 மேசைக்கரண்டி
பெரிய சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பார்மஜான் / மொற்சரில்லா சீஸ் - சிறிது
ஒலிவ் எண்ணெய் - சிறிது
முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் பாதியளவு வெங்காயம், உள்ளி, பெரிய சீரகம், கடுகு போட்டு வதக்கவும். பின்னர் அதனுள் டோபுவை உதிர்த்து போட்டு கிளறவும்.

டோபு நன்கு வதங்கியதும் (சிறிது பிரவுணாக வரும்) ஸ்பினிச் கீரையை அரைத்து ஊற்றி கிளறவும். பின்னர் அதில் பாதியளவு மிளகாய்த்தூள், மசாலாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சுருள கிளறி இறக்கவும். (இதனை சமோசா, ஸ்பிரிங் ரோல், கறி பண் எல்லாவற்றுக்கும் ஃபில்லிங் ஆக பயன்படுத்தலாம். தனியே சாதம், நாணுடனும் சாப்பிடலாம்.)

ஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த டோபு-ஸ்பினிச் கலவையை சீராக பரப்பவும்.

பின்னர் இதனை ரோல் போல உருட்டி 1 அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.

ஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.

மற்றொரு மைக்ரோ அவன் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனுள் மீதி வெங்காயம், பெரிய சீரகம், கடுகு சேர்த்து 4 நிமிடம் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும்.

பின்னர் இதனுள் உதிர்த்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். மீண்டும் 8 நிமிடங்கள் மைக்ரோ அவனில் வைத்து எடுக்கவும். (இடையில் ஒருமுறை கிளறி வைக்கவும். இதனையும் சமோசா, ஸ்பிரிங்க் ரோல், பற்றீஸ், கறி பண் ஃபில்லிங்காக வைக்கலாம். சாதம் ரொட்டியுடனும் சாப்பிடலாம்)

ஒரு பஃப் பேஸ்ரி ஷீட்டை விரித்து அதன் மேல் இந்த உருளை கறியை சீராக பரப்பவும். பின்னர் இதனை ரோல் போல உருட்டி ஒரு அங்குல துண்டுகளாக வட்டமாக வெட்டவும்.

ஒரு எண்ணெய் பூசிய பேக்கிங் தட்டில் இந்த ரோல்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.

பின்னர் 400 F-ல் முற்சூடுப்படுத்திய அவனில் வைத்து 15 - 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ரோல் இளம் பிரவுண் நிறமானதும் எடுத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும். இது மிகவும் சுவையான மாலை நேர சிற்றுண்டி ஆகும். விருந்துகளில் அப்பிடைஸராகவும் பரிமாறலாம். இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

Comments
சூப்பர் நர்மதா
அருமையான புதுமையான ரெசிப்பி.பார்க்க மிக அழகு.சுவையும் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
I have some doubts in this
I have some doubts in this recipe.. In my oven max is 200 c but u mentioned 400 f.. SO HOW MUCH I SHOULD I SET? What is the difference between celsius and farhenheit? For preheating how minutes should i have to do it?
This is really wonderful recipe.. First time iam going to use the oven thats y iam asking all the doubts..
நர்மதா
சூப்பர் ரெசிப்பி. எனக்கும் ஒரு சந்தேகம். நான் ப்ஃலோ ஷிட்டில் ஸ்பினாச் வைத்து ஒரு ரோல் செய்திருக்கேன். ஆனால் டோபு வைத்து செய்ததில்லை. ப்ரோசன் ஸ்பினாச் வைத்து செய்யலாமா? நல்ல் ஹெல்தி ரெசிப்பி. அவசியம் செய்து பார்க்கிறேன்.
ஹெல்தியான குறிப்பு
நர்மதா ரொம்ப சுவையான ஆரோக்கியமான, ஹெல்தியான குறிப்பு ரொம்ப அருமையாக இருக்கு. முடிந்த போது செய்துபார்க்கிறேன்.
Jaleelakamal
ninjupappu
cook in 200 c. that is equal to 400 f.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா