சேலம் மீன் குழம்பு

தேதி: January 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (37 votes)

 

வவ்வா மீன் - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி ‍- ஒரு எலுமிச்சை அள‌வு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி
வதக்கி அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு ‍- அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -‍ 10 + 1 பெரிய‌ வெங்காய‌ம்
பூண்டு - 10 பல்
தக்காளி -‍ 3
தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் -‍ ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - சிறிது (க‌டைசியாக குழம்பின் மேல் தூவ‌)


 

மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் பவுடர், அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்க்கவும்.
மீன் வெந்ததும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து குழம்பில் போட்டு இறக்கவும்.
நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி அடுப்பில் சூடு பண்ணவும். நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்
கொத்தம‌ல்லி த‌ழை தூவி இறக்கவும். மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார். திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்பினை பார்த்து <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் சில மாற்றங்களுடன் இந்த சேலம் மீன் குழம்பினை செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா சேலம் மீன் குழம்பு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி ஜலீலாக்கா நன்றி செல்விம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஜலீலா, உங்கள் மீன் குழம்புச் செய்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது.படத்துடன் பார்த்தலேச் செய்ய வேண்டும் போல் தோன்றுகிற்து. நன்றி திருமதி. செந்தமிழ் செல்வி madam .
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

இப்பதான் உங்கலொட சேலம் மேன் குழம்பு பன்ணினேன் very tasty.எனக்கு ரெம்ப பிடித்திருக்கிறது.என் ஆத்துக்காரருக்குதன் வைட் பன்னிடுஇருக்கிரேன்.

ஹாய் ஜலீலா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா ? இன்று உங்கள் சேலம் மீன் குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது

அன்புடன்
நஸ்ரின் கனி

ஜலீலாகா! உங்க சேலத்து மீன் குழம்பு செய்தேன்.மிகவும் அருமை என்கணவர் இன்றுதான் மீன் குழம்பு நன்றாக செய்திருக்கிறேன் என்று ருசித்து சாப்பிட்டார் மிக்க நன்றி

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

this recipe seems copied from Senthamilzh selvi's recipe. But, photos are very nice.

அதான் அவங்க தெளிவாவே சொல்லியிருக்காங்களே. செந்தமிழ் செல்வியின் குறிப்பை பார்த்து செய்ததுன்னு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
கீழே செந்தில் பிள்ளைக்கு பதில் கொடுத்ததற்கும் மிக்க நன்றி
அதுவும் இல்லாமல் சமீபத்திய பதிவு இல்லாத தால் உடனே பதிலும் போட முடியல.
ரொம்ப நாளா அறுசுவை எனக்கு ஓப்பனாக அதான் இத பார்க்க முடியாம போச்சு
இது நிறைய பேருக்கு செய்ய இத தேர்ந்தெடுத்தேன். அடிக்கடி செய்து பார்த்ததால் உடனே குறிப்பும் போட்டு விட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

இந்திரா பிள்ளை
எரிக்
கிரேஸ் ரவி
நஸ் ரீன் கனி

உங்கள் அனைவரின் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றீ, செல்வி அக்க்காவிற்கும் நன்றி

செந்தில் பிள்ளை
எனக்கு காப்பி அடிக்கனும் என்ற அவசியம் எனக்கில்லை. பதிவ நல்ல படிச்சிட்டு இனிமேல் பதில் கொடுங்க
ஜலீலா

Jaleelakamal

photos are good i will prepare the menu

meen kulambu very nice nanum try panna poren

Meen kulambu receipe very super akka... romba tastea irunthichi .. Thanks for this receipe..