பீன்ஸ் கேரட் பொரியல்(மாற்று முறை)

தேதி: January 22, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பீன்ஸ் - கால் கிலோ
கேரட் - ஒன்று
முட்டையின் வெள்ளை கரு மட்டும் - ஒன்றினுடையது
வெங்காயம் - ஒன்று
தக்காளி அரிந்தது - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பீன்ஸ் மற்றும் கேரட்டை நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு மற்றும் காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளியும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நறுக்கின வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை போட்டு வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்த காய்களை போட்டு பிரட்டி சிறிதளவு தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பும் சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி ஒன்று சேர பிரட்டி உதிர் உதிரியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.


இது எல்லோரும் செய்வதில் இருந்து சிறிது மாற்றத்துடன் செய்வதாகும். தேங்காய் சேர்த்து செய்ய வேண்டாம் என்பவர்கள் இது போன்று செய்யலாம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது.
இதை சப்பாத்திக்கு கூட தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்சரா, இன்று உங்களுடைய இந்த பொரியல் செஞ்சேன், சூப்பரா இருந்தது... வித்தியாசமான சுவை, முட்டை சேர்த்ததும் அதன் சுவையே அலாதி.....

நீங்க ஏன் வெள்ளைகரு மட்டும் சேர்த்திருக்கிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? எனக்கு வெள்ளைகரு தனியா வராததால அப்படியே முட்டையை உடைச்சு ஊத்திட்டேன்...... :)

அநேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் ஜெயந்தி....எப்படி இருக்கீங்க....?
செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவித்ததற்க்கு மிகவும் நன்றிங்க....
வெள்ளை கரு மட்டும் தான் சேர்க்கவேண்டும் என்று இல்லை ஜெயந்தி...நான் பெரியவர்களுக்காகவும்,கொலஸ்ட்ரால் டயட்டில் இருப்பவர்கள் இப்படியும் செய்து சாப்பிடலாம் என்பதற்க்காக சொன்னென்.மற்றபடி நீங்கள் செய்த முறையும் சரியே...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.