குழந்தைக்கு தேமல் தயவு செய்து உதவி செய்யுங்கள்

எனது மகனுக்கு இப்பொது 6 மாதம் அவனது உடலில் அங்கங்கே தேமல் வர ஆரம்பித்துள்ளது இதனை நான் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் தயவு செய்து உதவி செய்யுங்கள் , நான் இப்போது மஞ்சள் மட்டுமே போடுகின்ரேன்

ஹய் ரோஜா!
குழந்தைகளுக்கு இதுபோல் ஏற்படும் தேமலை " பால்தேமல்' நு சொல்வாங்க.
இது தானாகவே சரியாய்டும். ஏதாவது போட்டு மேலும் வேறு பிரச்னைகள் வந்திடப்போகுது.
குழந்தைகள் டாக்டரிடம் அழைச்சிட்டு போய் காண்பிங்க.
அவங்களுக்குதான் தெரியும். குழந்தையின் சருமத்திற்கு தகுந்த ட்ரீட்மென்ட் தருவாங்க. நீங்களாகவே வீட்டு வைத்தியம் எதுவும் முயற்சி செய்ய வேண்டாம்.

வணக்கம்.
நீங்கள் கனடாவில் இருப்பதால், இது ஒருவகையான dryness ஆக கூட இருக்கலாம்.doctor இடம் கேட்டு நல்ல lotionவாங்கி போடுங்கள்.சரியாகிவிடும்.ஒருநாளைக்கு இரண்டு முறை கூட lotion போடலாம்..மஞ்சள் எல்லம் போட்டு அதிகப்படுத்தாதீர்கள்.

.

நன்றி நீங்கள் கூறியபடியே செய்கிறேன்

மேலும் சில பதிவுகள்