ஹாய் கீதாலக்ஷ்மி மேம்

டியர் கீதா மேம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்னுடைய ஸ்கின் கம்பைன்டு ஸ்கின் கடலைமாவையும் தயிரையும் பூசலாமா கருமை போவதற்கு அல்லது கடலை மாவையும் மோரையும் பூசலாமா?

ஹாய் மல்லி!
எப்பிடியிருக்கீங்க?
கடலைமாவுடன் தயிர் கலந்துதான் பூசுவாங்க. மோர் கலந்து பூசுவதனை நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.
தேவா மேடம், உமா(பாப்ஸ்) அவர்களின் பழைய பதிவுகளில் முடிந்தால் தேடிப்பாருங்க. நீங்கள் தேடும் விபரங்களுடன் தேடாததும் கிடைக்கும்!
வாழ்த்துக்கள்!

டியர் கீதா எப்படி இருக்குறீர்கள்?நான் நன்றாக உள்ளேன்.நான் பழைய பதிவுகளை தேடி பார்க்குறேன்.எனக்கு 1 சின்ன உதவி பண்ண முடியுமா?எனக்கு குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளித்ததால் காலில் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து புண்ணாகி கருப்பு கருப்பாக இருக்கிறது அதற்கு என்ன வைத்தியம் செய்வது,மேலும் என்னுடைய கால் விரல்கள் மட்டும் புதுசு புதுசாக செருப்பு போடும்போது புண்ணாகி கருப்பாக இருக்கிறது அதற்கும் வைத்தியம் சொல்ல முடியுமா பிளீஸ்

ஹாய் மல்லி!
நான் நலம். என் குழந்தைகளுக்கு எக்ஸாம்ஸ் நெருங்கி வருவதால் இன்றுடன் அறுசுவைக்கு லீவ் போடலான்னு இருக்கேன்.
உங்க கால் அரிப்புக்கு மட்டுமல்ல, சருமத்தில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு வேப்பிலை மிகச்சிறந்த நிவாரணி.
வேப்பிலையுடன், விரலி மஞ்சள் துண்டோ, சமையல் மஞ்சளோ சேர்த்து அரைத்து தடவினால் சரியாகிடும்.
செருப்பு போட்டதால் ஏற்படும் புண்ணிற்கு வாஸ்லின் அல்லது விளக்கெண்ணையுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து தடவலாம்.

அரிப்பால் சொரிந்து புண்ணானால், அந்த இடத்துக்கு அரிசியை களைந்த தண்ணீரில், கடுக்காயினை உரைத்து தடவினால் அரிப்பு நின்னுபோய்டும்.

கறுப்பு தடம் இருந்தால், மஞ்சள், சந்தனத்தினை தேங்காய் எண்ணெயில் குழைச்சு பூசிட்டு வாங்க.கறுப்பு நிறம் மாறிடும். மஞ்சள், சந்தனம் இரண்டுமே கலந்துக்கனும்

நீங்க, எப்பவும் குளிக்கிறதுக்கு முன்னாடி கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்ச்சு ஊறவெச்சிட்டு குளிக்கலாம்.
சருமப்பிரச்னைகள் வராம தடுக்க இது உதவும்!

முயற்சி செய்து பாருங்க.
மீண்டும் சந்திப்போம்!

ஹாய் கீதா ரொம்ப நன்றி,உங்க குழந்தை எக்ஸாம் நல்லபடியா எழுத என்னுடைய வாழ்த்துக்கள்.இப்ப என்னோட உடம்பில அரிப்பு,புண் எதுவும் இல்லை,கருப்பு தழும்பு மட்டும் தான் இருக்கு,உங்க டிப்ஸ்க்கு ரொம்ப நன்றி,நீங்க இப்ப விடை பெறுவது வருத்தமா இருக்கு,சீக்கிரமா திரும்பி வருவீங்கன்னு நினைக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்