இறால் பிரியாணி

தேதி: January 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

பெரிய இறால் - 3/4 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்
வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - அரை தேக்கரண்டி
பட்டை(விரல் அளவு) - 3
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
எலுமிச்சை பழம் - ஒன்று
மல்லி, புதினா தழை - தலா அரை கட்டு
எண்ணெய் - 100 மி.லி
நெய் - 3 தேக்கரண்டி


 

இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இறாலுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சாஸ் போட்டு நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற வாணலியில் 60 மி.லி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு தண்ணீர் சுண்ட வறுத்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளி வதங்கியதும், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், மற்ற மசாலாதூள் வகைகள், தயிர், மல்லி, புதினா தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வதங்க விடவும்.
பிறகு வறுத்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் வைக்கவும். அதன் பிறகு எண்ணெய் மிதந்து வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அரிசியை நன்கு மூன்று முறை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியில் தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு போட்டு அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். எலுமிச்சைச்சாறை ஊற்றவும்.
தண்ணீர் சுண்டும் நேரம் மசாலாவை ஊற்றி அடி சாதத்தை மேலே மேலே போட்டு மீதியுள்ள கரம் மசாலாவை பரவலாக தூவி விரும்பினால் ஆரஞ்சு கலர் சிலதுளிகள் ஓரிடத்தில் போடவும்.
அடுப்பில் தம் போடும் தட்டை வைத்து மூடியில் பேப்பர் போட்டு மூடி மேலே வெயிட் வைத்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் பிரியாணி ரெடி. விரும்பினால் அரிந்த வெங்காயத்தில் ஒரு கைப்பிடியை எடுத்து வறுத்து பரிமாறும் நேரம் பிரியாணியின் மேல் தூவி பரிமாறலாம். இதற்கு ரைத்தா மட்டும் வைத்தாலே மிகவும் சுவையாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. அப்சரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்சரா இறால் பிரியாணி பார்க்கவே சாப்பிட தோணுது :-) ஆனால் வெயிட் ஏறிக்கொண்டே போவதை நினைத்துதான் கொஞ்சம் தயங்க வேண்டியிருக்கிறது :-(. ஆனாலும் ஒருநாள் கண்டிப்பா கொஞ்சமாக செய்து பார்ப்பேன்.
உங்களோட காலிஃப்ளவர் கறி செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அங்கு ஓப்பன் ஆக மாட்டேங்குது. அதான் இங்கேயே சொல்லி விட்டேன்.

அப்புறம் ஒரு விஷயம் சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தம் போடும் போது பேப்பர் வைத்து தட்டு போட்டு மூட சொல்லியிருக்கிறீங்க. பேப்பரில் உள்ள இன்க் உடலுக்கு தீங்கானது. அலுமினியம் ஃபாயிலை பேப்பருக்கு பதிலாக பயன் படுத்தலாமே. சப்பாத்தி இட்டு கூட நியூஸ் பேப்பரில் வைக்க வேண்டாம்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா...எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளாச்சு உங்களிடம் பேசி.வீட்டில் அனைவரும் நலம் தானே.........
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி கவி.காலிஃபிளவர் கறி செய்து பார்த்து சொன்னது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அதே போல் பேப்பர் போடுவதை பற்றி சொன்னதற்க்கும் மிகவும் சந்தோஷம் கவி.சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.
அலுமினிய ஃபாயில் இல்லாத நாள் அன்றுதான் இவ்வாறு செய்வேன்.இனி அதையும் தவிர்த்துக் கொள்கிறேன் கவி.இது போன்ற விஷயங்களை சொல்வதில் தயங்க வேண்டாம்.நல்லதை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் கவிசிவா...எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளாச்சு உங்களிடம் பேசி.வீட்டில் அனைவரும் நலம் தானே.........
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி கவி.காலிஃபிளவர் கறி செய்து பார்த்து சொன்னது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அதே போல் பேப்பர் போடுவதை பற்றி சொன்னதற்க்கும் மிகவும் சந்தோஷம் கவி.சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.
அலுமினிய ஃபாயில் இல்லாத நாள் அன்றுதான் இவ்வாறு செய்வேன்.இனி அதையும் தவிர்த்துக் கொள்கிறேன் கவி.இது போன்ற விஷயங்களை சொல்வதில் தயங்க வேண்டாம்.நல்லதை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா செய்முறை நேர்த்தியாக உள்ளது.சூப்பரோ சூப்பர்.கரம் மசாலா 3ஸ்பூன் அதிகமாக இருக்காதா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா மேடம் ......நலமாக இருக்கின்றீர்களா........?
உங்களிடமும் பேசி பல நாட்கள் ஆகின்றது.வீட்டில் பிள்ளைகள் அனைவரும் நலம் தானே.......
தங்களின் பின்னூட்ட்த்திற்க்கு மிகவும் நன்றி.நான்கு டம்ளர் அரிசி போடுவதால் அந்த அளவு சரியாக இருக்கின்றது ஆசியா மேடம்.மறுபடியும் என் நன்றிகள் பல,பல.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹை அப்சரா உங்களேட ப்ரான் பிரியாணீ very tasty.

ஹாய் எரிக்..... எப்படி இருக்கீங்க...?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா
இன்று உங்கள் செய்முறையில் இறால் பிரியாணி செய்தென் மிகவும் நன்றாக வந்தது எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது நன்றி

ஹாய் ராஜி....எப்படி இருக்கீங்க....?
தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து உடனே தெரிவித்ததற்க்கு மிகவும் நன்றிங்க.....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

I tried this recipe.very very tasty.thank u so much.