எல்லாரும் ஓடியாங்கோ.... அரட்டை 102

ஹைய்யா..... பாகம் 101 பதிவு 101 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

ஹஹஹா.... எல்லாரும் நம்மை மாதிரியே யங்'ஆ இருப்பீங்களா..... ;) நான் தான் சின்ன பிள்ளை ஓடி வந்துட்டேன் அரட்டை அடிக்க.... யாருலாம் என்ன மாதிரி சின்ன பசங்க???!!! ஓடி வாங்க இங்க.... மத்தவங்க.... கொஞ்சம் நிதானமா பார்த்து நடந்தாச்சும் வாங்க ப்ளீஸ். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanitha i'm coming along with u.don't u see me?nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

பார்த்தேன் ராதா.... நம்ம கூடவே ஒரு சின்ன சமத்து குட்டி ஓடி வருதே யாருடான்னு.... நீங்க தானா அது!!!! :) நலமா இருக்கீங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அல்லாருக்கும் வணக்கம், வந்தனம், நம்ஸ்கார்!!!!! என்னாலும் இப்போதெல்லாம் அடிக்கடி அரட்டையில் கலந்துக்க முடியல.... இருந்தாலும் என்னை ஞாபகம் வச்சு விசாரிச்ச அனைத்து தோழிகளுக்கும் ஒரு பிக் ஹாய்ய்ய்ய்......

ராதா அக்கா நலமா? நம்ம வூர் சமையல் குறிப்புகள் நிறைய குடுத்து அசத்துங்க...

வனிதா நலமா? நாட்டாமை போஸ்டிங் முடிஞ்சதா? இப்ப 18பட்டியிலும் நீங்க தான் ரொம்ப பிஸியாமே? :)

பிரபா இவ்வளவு நாள் எங்க போயிட்டீங்க? நலம் தானே?

ரத்னா நலமா? ராதாஸ்ரீராம் நலமா? மதி நலமா? சாய் அனிதா எப்படி இருக்கீங்க? சுபத்ரா நலமா?

இமா அம்மா எப்படி இருக்கீங்க, அரட்டை நூறுக்கு அப்புறம் கிரேட் எஸ்கேப்பா?

சாய் மேடம் நலமா? பசங்களுக்கு exam-ஆ? அவர்களுக்கு என் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.....!!!

மகேஸ்வரி நலமா? யோகரானி நலமா? ஜீனோ நலமா? எங்க போய்க்கின நீ? இம்மா நேரமா கண்டுக்காம இருந்துட்டியே?

நானும் அப்பப்ப நேரம் கிடைக்கும்போது வர்றேன்..... நீங்க எல்லாரும் ஜாலியா அரட்டை அடிங்க.....

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.

அனைவரும் நலமா? நான் நல்லா இருக்கேன். எனக்கு கொஞ்சம் வேலை அதான். முடியும் போது கட்டாயம் வரேன்ப்பா....

என்னை விசாரிச்ச அனைவருக்கும் என் அன்பு.

வனிதா நீங்க குழந்தைகள் நலமா? குழந்தை பெயர் என்னப்பா?

மற்ற எல்லருக்கும் ஒரு ஹாய்!!!!!!!!!!!!!!

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வணக்கம்...

ஐயோ.......... ஆன்ட்டி வந்து சேர்ந்திட்டேன் ....பாட்டீஸ் எல்லாம் வருவாங்க....காத்திருப்போம்....

வனிதா சமத்தாகிவிட்டேனா....நன்றி..எப்படி?என்ன விஷயத்தில்?

ராதா இன்று அல்வா முயற்சி?வனிதாவிற்கு கொடுக்க வேண்டுமே...

ஜெயந்தி ஊர் பாசம் பொங்குதே...பிரவீணா நலமா?

ரத்னா ஹ,ஹ,ஹா....பார்த்து கவுண்டமணி வந்து அப்படியே திரும்பி நிற்க சொல்ல போகிறார்...

யோகராணி வாங்க,வாங்க.....வாங்க.

சுபத்ரா எனக்கு மீண்டும் ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போடலாமே...

ராதா நேற்று இங்கு பதிய முடியவில்லை....இன்று இங்கு மட்டுமே....ஓகே.....

ராதாஸ்ரீராம் நலமா?

பிரபா மெயில் பார்த்தேன் ....பிறகு பதிலளிக்கிறேன்....நலமா?

இன்னா ஜெயந்தி யக்கா, ஜீனோ அண்ணாத்தே
வந்துக்கினே கீறாரே..நீங்க எப்பூடி கீறிங்கோ? ஊட்டாண்ட அல்லாரும் படா ஷோக்கா கீறாங்களா??

ஜீனோ நேத்தி ஒரு டவுட்டு கேட்டுது..அதுக்கு இன்னியும் யாருமே டவுட்டு கிளியர் பண்ணாங்காட்டியும், மறுக்கா,மறுக்கா கட் & பேஸ்ட் பண்ணுது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

//என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம். அக்கா எல்லாம் வேண்டாம்.// இந்த டயலாக் ஜீனோ நிறைய முறை கேட்டுடுச்சி..அதனால ஒரு டவுட்டு!! ஒருவேளை ஜீனோ ***அக்கா*** என்பதற்கு பதிலாக ***அன்புத் தங்கை*** என்று சொன்னாலும் அல்லாரும் 'என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம்'- என்றுதான் சொல்வீங்களா சகோஸ்?? :) :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இல்லைங்கோ சுபத்ரா..ஜீனோக்கு நாலு கையுமே நல்லா இருக்குது..நவ் ஜீனோ இஸ் பைன்! புஜ்ஜிதான் ஜீனோவின் இதயத்தையே:) சுக்கு நூறா சிதறடிச்சு, லவ்ஸ் பண்ணி கண்ணாலங் கட்டிகிச்சே, அப்புறம் எதுக்கு காலெல்லாம்?? சப்பை மேட்டரு..அக்காங்!

ராரா அக்கா...வன்க்கம்,வன்க்கம்! எப்போ ஜீனோக்கு அல்வா தாரீங்கோ? ப்ளீஸ், சீக்கிரமா தாங்கோ, ஜீனோ டோரா புஜஜிக்கு அல்வா தரனும்!! :) :D பை த வே,அல்வா புஜஜிக்கு பேவரிட்!!ஹி,ஹி!!

மற்றும் இங்கு அரட்டையடிப்போர் அனைவருக்கும் ஜீனோவின் ஹா........ய்!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் வனிதா!102வது அரட்டை பாகம் அட்டகாசமாக ஆரண்பிதது வைத்துள்ளீர்கள். பார்க்க சந்தோசமாக இருக்கின்றது.குழந்தைகள் எப்படி இருக்கின்றார்கள்? உவ்விடம் குழந்தை பிறந்தால் தாய் எவ்வளவு காலம் லீவில் நிற்கலாம்.இவ்விடம் ஒரு வருஷம் வரை சம்பளத்துடன் விடுப்பு தருவார்கள்.
மற்றும் தோழிகள் எல்லோருக்கும் ஒரு ஹாய்..........எனக்கு இப்போது வேலைகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி அறுசுவை பக்கம் வரமுடிவதில்லை.என்றாலும் மனதில் ஒரு நெருடல் வர முடிய வில்லையே என. முடிந்த மட்டும் வருவேன் உங்களுடன் அரட்டை அடிக்க.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அனைவருக்கும் ஹாய்,

தேன்மொழி குழந்தைகள் நலமா? வேண்டாம்டா சாமி..... உங்களுக்கு ஒரு தடவை ஓஓஓஓஓஓ போட்டே ரொம்ப நாளா காணோமேன்னு தேடிகிட்டிருந்தேன், மறுபடியும் உங்களை இழக்க தயாரா இல்லப்பா..... அப்புறம் அரட்டை போரடிக்கும்....ஹி ஹி ஹி...

ஜெயந்தி நான் நலம்....நீங்கள் நலமா...

ஜீனோ இதோ உங்கள் டவுட்டுக்கு பதில்.....ஹி ஹி D X 100 .
என்ன புஜ்ஜி லவ் பண்ணி கண்ணாலங்கட்டிகிச்சா....... நான் டோரான்னுல நினைச்சேன்.....அச்சச்சோ கணக்கு மிஸ் ஆயிடுச்சே!!!!!!! இட்ஸ் ஓகே

இமா நலமாஆஆஆஆஅ?

வனிதா ஓடி வந்ததுல கால் வலிக்குது எதாவது கூல்டிரிங்ஸ் இல்லையாஆ.....:)))))))

அப்பப்பா அப்புறம் வாரேன்.......அனைவரும் நலம் தானே!!!!!

with love

எனக்கு சமர்த்துகுட்டி பட்டம் கொடுத்து நாட்டாமை வேலையுடன் பட்டமளிப்பு வேலையும் தொடங்கி உள்ள வனிதா அவர்களே,கைகாலு அல்லாம் நொருங்குனாலும் மத்ராஸ்பாசை பேசிக்கினெ அல்லாத்தயும் டவுட் கேட்டுக்கினு இஸ்துகினு வந்த ஜீனொ,வயச மறந்து அல்லாரும் தோஸ்தாயிடலாம்னு பார்த்தா உட மாட்டேங்கறீயே.என் கைல ராங்கு பன்னாத. அக்காங்.
என்னை தங்கள் அரட்டையில் சேர்த்துகொண்டு வந்தாரை வரவேற்கும் தமிழ் பண்பாட்டை காப்பாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை மனதார தெரிவிக்கிறேன்.

ippave kanna kattuthu.arattainalum inime thanglishthan.mathi unakkaka thuuya tamizh.pothuma?
nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

மேலும் சில பதிவுகள்