அரிசி மாவு அடை

தேதி: January 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அரிசி மாவு - ஒரு கப்
முழு உளுந்து - அரை கப்
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி+ஒரு சிட்டிகை


 

இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதே போல கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவு மற்றும் கடலைப்பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். முழு உளுந்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த உளுந்தை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைத்த உளுந்து மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் வதக்கி மாவில் போட்டு கிளறி விடவும்.
அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் அல்லது தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் மாவை ஒன்றரை கரண்டி அளவு ஊற்றி நடுவில் லேசாக அழுத்தி வட்டமாக தேய்க்கவும்.
மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான அரிசிமாவு அடை ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <b> திருமதி. கமர் நிஷா </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

uora vaitha kadala paruppai enna seiya?