பாலிசிஸ்டிக் ஓவரீஸ்

நான் பாலிசிஸ்டிக் ஓவரியினால் அவதிபடுகிறேன் குழ்ந்தை பிறந்த பிறகு இந்த பிரச்சனை அதிகமா போயிடுச்சி நிறைய பேருக்கு குழந்தை பேறு இல்லாம்ல் போகிறது ஆண்டவ்ன் என்க்கு குழ்ந்தை பாக்கியததை கொடுத்து இருக்கிறார் உடல் எடை கூடி கொண்டே போகிறது mensuration problem over bleeding ஆகி கொண்டே இருக்கிறது உடல் பலவீனம் அடைந்து கால்கள் நடக்க முடியாம்ல் போகிறது இந்த பிரச்சனைக்கு என்ன் வழி இருக்கிறது யாருக்காவ்து இந்த பிரச்சனை இருந்து நல்லா போயிருக்க்கா என்ன treatment செய்தீர்கள் என்ன செய்தால் இதை முழுவ்துமாக ச்ரியாக்க முடியும் அனுபவமுள்ள தோழிகள் தயவு கூர்ந்து பதில் தாருங்கள்

ஹாய் ஃபர்வின் எனக்கு இப்பிரச்சினை குறித்த ட்ரீட்மெண்ட் விஷயங்கள் அதிகமாக தெரியாது. ஆனால் நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் முட்டை கோழி வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏன்னா அவை ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுவதால் அதை சாப்பிடும் நமக்கும் அதன் தாக்கம் இருக்கும். நாட்டுக் கோழி முட்டை சாப்பிடலாம். ஆனால் அளவோடு. இது எல்லோருக்கும் பொருந்தும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இம்முட்டைகளை கொடுப்பதில் கவனம் தேவை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் பாலிசிஸ்டிக் இருந்தது,1998ல் என்னுடைய ஓவரி ட்யுபில் ஒட்டிக் கொண்டு இருந்த கட்டியை கண்டுபிடித்த என் ஃபேமலி டாக்டர் அறுவை சிகிச்சை மட்டும்தான் இதன் தீர்வு என்று கூறினார்.
கட்டி பெருசானால் வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது,அது உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்.
ஆனா நான் ஊசி என்றாலே நாலாவது தெருவுக்கு ஓடி விடுவேன்,ஏற்கனவே ஃபேமலி பிளானிங் ஆப்ரேஷன் பண்ணும் போது பம்மல் கே சம்பந்தம் கமல் மாதிரி பாதி ஆப்ரேஷனில் புலம்ப ஆரம்பித்து விட்டேனாம்.
அதனால் லேப்ரஸ்கோபில் பண்ணிவிடலாம் என்று பார்த்தால் தேதியும் நேரமும் சரியாக ஒத்து வரவில்லை(சீ...சீ...ஜோசியம் எல்லாம் பார்க்கல,ஸ்கூலுக்கு போகும் மூன்று குட்டிஸ்,பிஸினஸ் பண்ணுகிறேன்னு பேயோடு நள்ளிரவு வீட்டுக்கு வந்து விடியற்க்காலை பிசாசுடன் கிளம்பி விடும் என் கணவர் இவைதான் காரணங்கள் )
இப்படியே தள்ளி கொண்டு போய் 2007ல் பிரச்சனை ஆரம்பித்தது.திடீரேன அதிக ரத்தப் போக்கு ஆரம்பித்து,இடுப்பு வலியும் பயங்கரமாக இருந்தது.
ஆனால் ஏற்கனவே நான் ஒரு டாக்டரிடம் மாஸ்டர் செக்கப் பண்ணிய போது கட்டி கரைந்து விட்டதாக தவறான தகவல் தந்துவிட்டதால் நான் வெறும் தைராய்டுக்கு மட்டுமே ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
ஹீமோகுளோபின் 5.5க்கு குறைந்து மயக்கம் வந்தபோதுதான் டாக்டர் ஸ்கேன் பண்ணிய போது 5cmம் மாக இருந்த என் கட்டி 16cmம் மாக விஸ்வரூபம் எடுத்து இருப்பது தெரிந்தது.
லேப்ரஸ்கோபி பண்ணுவதற்க்கு டைம் பிக்ஸ் டாக்டரிடம் கிள்ம்பிக் கொண்டு இருந்தேன்.திடீரேன இடுப்புவலி அதை தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஆரம்பித்தது.வலி அப்படியே இடது காலுக்கு இறங்க காலையும் ஊண்ற முடியாமல் துடித்தேன்.
அழுது துடித்து ஆஸ்பிடலுக்கு போனால் டாக்டர் கட்டி டுவிஸ் ஆகி விட்டதாகவும் எந்த நொடியிலும் வெடித்துவிடும் வெடித்தால் உங்க மனைவியை பார்க்க முடியாது என்று சொன்னதுடன் உடனடியாக ஆப்ரேஷனும் செய்துவிட்டார்.10 மணிக்கு ஆஸ்பிடலுக்கு போய் 12 மணிக்கெல்லாம் ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. இரண்டுநாட்களுக்குள் கட்டி 21 cm வளர்ந்து விட்டது.
கட்டியை கொண்டு வந்து என் குடும்பத்தினரிடம் காட்டிய டாக்டர் அடித்த கமெண்ட் "நல்லா அஞ்சு மாச குழந்தை மாதிரி வயித்துல வச்சுகிட்டு இருந்து இருக்கா"
கட்டியை எடுத்து விட்டாலும் அதனால் உருவான ரத்த இழப்பால் இன்றும் ஹீமோகுளோபின், ஏறமாட்டுது அலர்ஜி என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கு.
இதையெல்லாம் நான் உங்களை பயமுறுத்த சொல்லல,9 வருஷத்துக்கு முன்னாடியே ஈஸியா பண்ண வேண்டிய ஆப்ரேஷனை வேதனையான சிச்சுவேஷனில் பண்ண வேண்டியதா போச்சு.
பிரச்சனை எல்லம் ஓஞ்சுதான் நாம ஆப்ரேஷன் பண்ணணும்னா அது நடக்காத காரியம்.
இந்த வகை கட்டி எனக்கு தெரிந்த வகையில் மருந்தால் குணமாகாது ஆப்ரேஷன் மட்டும் தான் தீர்வு.பயப்படாமல் டாக்டரின் ஆலோசனையுடன் உடனே லேப்ரஸ்கோப் பண்ணீவிடுங்கள்.

:-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹை பர்வின் இப்பதான் உங்க பதிவு பார்த்தென்.எப்படி இருக்கிங்க ஷிரின் நல்லைர்ருக்களா,இப்பதான் மருத்துவம் நல்லா முன்னேரியிருக்கு அதனால் பயப்படாதிஙக சரியாயிடும்.நான் கடவுளை பிராத்திக்கிறேன்.

நன்றி கவிசிவா முட்டை வ்கைகளை தவிர்த்து கொள்கிறேன் நாட்டு முட்டை எடுத்துகளாம் இல்லையா
நன்றி பானு கனி என்க்கு க்ட்டியா இல்லை சின்ன சின்ன
நீர்குமிழி போல் ஓவ்ரியில் இருக்கு சொன்னாங்க அதனால் எடை கூடிகொண்டே போகுது அதனால்தான் பிளீடிங ஜாஸ்தியா போகுது அதுக்கு ஹார்மோன் பிரச்சனைனு சொன்னாங்க இப்ப உங்க உடம்பு நல்லா இருக்கா பில்ளைகள் நலமா இருக்காங்களா

மேலும் சில பதிவுகள்