பட்டிமன்றம் 15 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

இவ்வார தலைப்பு நமது தோழி திருமதி தாஹிரா பானு அவர்களின் தலைப்பை ஒட்டி, 'இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'

என்னைக் கேட்டால் என்னால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. ஆகவே தோழிகளே உங்கள் முன் இத் தலைப்பை வைத்துள்ளேன் வழக்கம்போல் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாருங்கள் தோழிகளே. உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். என்னால் முடியும்போது இடையில் வருகிறேன். சென்ற பட்டியில் பங்கு பெற்றவர்கள், மறைந்து நின்று படித்தவர்கள்:) அனைவரும் வருக!!

நடுவருக்கு வணக்கம்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவளிப்பது சரியே என்ற அணியில் என் கருத்துகளை சொல்லப் போகிறேன். வாதத்தோடு விரைவில் வருகிரேன். இப்பத்திக்கு அப்பீட்டாயிக்கரேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் பணம் சரியே என்பதே என் வாதம். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா எட்டிப்பிடித்திருக்கும் உயரம் மிகப்பெரிது. பணம் செலவளிக்கக்கூடாது என்று இருந்திருந்தால் இந்த சாதனை கனவாக மட்டுமே இருந்திருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியினால் எந்தெந்த துறைகளெல்லாம் பயன்பெறுகின்றன என்று பார்த்தால் ஏறக்குறைய எல்லா துறைகளுமே என்றுதான் சொல்லவேண்டும்.

முதலில் நம் பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.
நம் நாட்டின் எல்லா பக்கமும் எதிரிகள் சூழ்ந்துள்ளனர். ஒருபுறம் காஷ்மிரில் குழப்பம் விளைவிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். மறுபுறம் அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடிவரும் சீனா. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. பாகிஸ்தான் சுரங்கம் அமைத்து இந்திய எல்லைக்கு அருகில் அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. இந்த எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வெறும் ராணுவம் மட்டும் போதாது. நம் சாட்டிலைட்டுகள் எடுத்தனுப்பும் படங்கள் மூலம் இவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிகிறது. அதைக்கொண்டு ராணுவம் அவர்களை முறியடிக்கிறது.

அடுத்து இந்திய நம் நாட்டின் முதுகெலும்பு... விவசாயம்.
அக்ரோசாட்டிலைட்டுகளும் வெதர் சேட்டிலைட்டுகளும் விவசாயத்திற்கு உதவுகிறது.

Remote sensing and INSAT satellite images are useful for various agricultural purposes, as follows:
-Pre-harvest crop acreage and production estimation: Ministry of Agriculture is supporting this programme which is a remote sensing based nation-wide project to provide crop statistics with reasonable accuracy.
-Analysis of cropping system: Satellites provides valuable inputs for diversification and intensification of crops.
-Watershed development: Satellite imageries are useful for correct planning and mid-course improvement of watershed development projects.
-Mapping and monitoring of wastelands: Mapping and monitoring of wastelands is being carried out for entire country, using remote sensing. This is useful for planning and implementation of various reclamation activities.
-Mapping of sodic and usar soils: Remote sensing satellite data with high resolution can be used for mapping of various saline and Usar soils in the country for reclamation measures .

கடல் பரப்பை ஆராய்வதற்கும் ஒரு சாட்டிலைட். இது அனுப்பும் தகவல் மீனவர்களுக்கு பயன் படுகிறது. எந்த இடத்தில் மீன் அதிகம் இருக்கிறது போன்ற தகவல்களை அனுப்பி மீனவர்களுக்கு உதவுகிறது.

அடுத்து கல்வித்துறை. சேட்டிலைட்டுகள் மூலம் நம் அப்துல்கலாம் அவர்கள் ஓரிடத்தில் இருந்து கொண்டே மற்ற இடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். மானவர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாகவே விளக்கமளிக்கிறார். எவ்வளவு பெரிய முன்னேற்றம்.

அடுத்து தொலைத்தொடர்புத் துறை: இன்று உலகமே நம் கைக்குள் அடங்கும் வித்தைக்கு உதவி புரிவது விண்வெளி ஆராய்ச்சிமையம் அனுப்பிய சேட்டிலைட்டுகள்தான்.

விண்வெளி ஆரய்ச்சிமையம் பிறநாடுகளின் சேட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்புவதன் மூலம் வருமானமும் ஈட்டுகிறது.

ஒவ்வொரு துறையிலும் விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பும் சேட்டிலைட்டுகள் மூலம் அடையும் பயனை முழுவதுமாக விளக்க இன்று ஒரு நாள் மட்டும் போதாது. அதனால்தான் சுருக்கமாக சொல்லியுள்ளேன்.
அதனால் விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவளிக்கப்படும் பணத்தினால் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் பணம் செலவளிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தலைப்போடு வந்திருக்கும் நடுவருக்கு முதல் வணக்கம். நல்ல தலைப்பு கொடுத்த தோழி தாஹீரா'கு நன்றி. கொஞ்சம் குழப்பமான தலைப்பு என்றாலும் நாங்க ஸ்டெடியா இருக்கோம்.... ;) "சரியே சரியே சரியே"னு சண்டை போட வந்திருக்கோமாக்கும். கவிசிவா... நீண்ட நாட்களுக்கு பின் ஒரே அணி.... ஜெயிச்சுடுவோமா???!!! ;) வருகிறேன் பிள்ளைகள் தூங்கியதும் வாதத்தோடு வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளாய் வந்த கவிக்கு நன்றி. உங்கள் வாதங்களும் அருமை. வனி ஆஹா தலைப்பு குழப்பி விட்டுடுச்சா. நம் நாட்டில் அடிப்படை வசதிகள், மக்களின் வாழ்க்கைத் தரம் இதெல்லாம் முன்னேறாத நிலையில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது போன்ற எல்லா விண்வெளி ஆராய்ச்சிகள் தேவையா என்பது குறித்து விவாதிக்கலாம்.

வந்துட்டேன்.... :)

நமக்கு இருக்க நேரத்தில் சொல்ல வந்ததை சொல்லிட்டு ஓடிடறேன்.... ;)

இன்னைக்கு உட்கார்ந்த இடத்தில் எல்லாம் தெரிஞ்சிக்கறோம், படிக்கிறோம், உலகமே நம்ம வீட்டுக்குள் வந்துடுச்சு. நாட்டை எதிரி கிட்ட இருந்து காப்பாற்ற நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் செய்யும் சதி எல்லாம் மாட்டிக்கிதே... நம்ம பாதுகாப்பு முன்பை விட சிறப்ப இருக்கே. எப்படி இவை சாத்தியமானது??? ஆராய்ட்ச்சியால் தானே??? ஒரு நாட்டோட முன்னேற்றம் அதோட மக்கள் முன்னேருவதில் மட்டுமில்லை.... பல துறைகளிலும் அன்நாட்டின் முன்னேர்ரத்தை வைத்தே இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த செலவும், ஆராய்ட்ச்சியும் நமக்கு முக்கியம் தான்.

மகன் அழைக்கிறான்... முதல் சுற்று வாதம்.. (இல்லை... கருத்தை) இதோட முடிக்கறேன்.

தோழிகள் எல்லாம் எங்கே... வாங்க பட்டி பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, தலைப்பு சென்ஸேஷனலா இல்ல போலிருக்கு. ஸாரிப்பா எனக்கு தலைப்பு சரியா செலக்ட் செய்ய தெரியலை. அவரவர்க்கு இருக்கும் வேலையில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவு பண்ணுவதைப் பற்றியா யோசிப்பார்கள்:-)

யாரும் வருவது போல் தெரியவில்லை. அதனால் இந்த இழையை அப்படியே மறந்துடுங்க:-) வேறு எந்த பட்டி நடந்தாலும் நிச்சயம் ஒரு பதிவாவது போடுகிறேன். யாராவது வந்தால் இதை நடத்துகிறேன். இல்லையென்றால் ஸாரி கவி, வனி உங்க டைமை செலவு செய்து பதிவு போட்டதற்கு.

வின்னி பொறுமை பொறுமை. நிச்சயம் தோழிகள் வருவாங்க. இப்போ பொதுவாகவே தோழிகள் பங்களிப்பு குறைவாக இருப்பதால்தான் இங்கும் பதிவுகள் இன்னும் வரவில்லை. கண்டிப்பாக வருவாங்க கவலை வேண்டாம்

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம்.
எவ்வளவு பொறுப்பா தலைப்பு போட்டுருக்கீங்க...நிஜமாகவே சொல்கிறேன்...
யோசிக்க நிறைய நேரம் தேவைப் படுகிறது....
என் மகனின் வயது 4. அவனுக்கு 3 வயதிலேயே எல்லா கோள்களின் பெயர்களையும் மற்றும் அதனை பற்றிய விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தேன்... அவனும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொண்டான் ...
எனக்கும் அதில் ஆர்வம் அதிகமே...
அதனைப் பற்றி சிறுவர்களுக்கான புத்தகங்களை (அதுதாங்க எனக்கும் முடியும்)வாசிக்கும்போது தோன்றியதை வைத்தே அணியை முடிவெடுக்கிறேன்...
விண்வெளியில் ஒற்றைக் கையுறை ஒன்றும் இருக்கிறது...
நாம் (மனிதர்கள்) கண்ணில் படும் இயற்கையான யாவற்றையும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நாசமாக்கி கொண்டே போகிறோம்...
கடலை நிரப்பி நிலமாக்குகிறதும், நிலத்தை தோண்டி பெட்ரோல் எடுப்பதும் ....
இயற்கையை நாம் நோண்ட அது எங்கோ வெடிக்கிறது...
நான் சொல்வதால் ஆராய்ச்சிகள் நிற்கப் போவதில்லை...இருந்தாலும் இந்த irreversible வளர்ச்சியை என்னால் ஆதரிக்க முடியவில்லை...
இதுக்காக எதிர் கட்சியினர் என்னைக் காட்டுக்குப் போய் இருக்கச் சொன்னீங்கன்னா வன விலங்கு அதிகாரிங்க கிட்ட பிடிச்சு கொடுத்து விடுவேன்...

வின்னி... ஏன் ஏன் ஏன் இப்படி??? நம்ம மக்கள் ஆமை மாதிரி.... நிதானமா வந்தாலும் வந்துடுவாங்க. ;) கவலை வேண்டாம். தலைப்பு உண்மையில் நல்ல தேவையான தலைப்பு... ஆனா அதை பற்றி வாதிக்க தான் எல்லாராலையும் முடியுமான்னு தெரியல.... அதனால் கூட வராம இருக்கலாம். பார்ப்போம்.... வேண்டுமானால் தலைப்பை மாற்ற வேண்டுமா'னு கேட்டு பார்க்கலாம்.... ஆம் என்று பலரும் சொன்னால் மாற்றி குடுத்துடுவோம், இல்லைன்னா தொடருவோம். இதில் சாரி சொல்ல ஏதும் இல்லை... ஒவ்வொருவருக்கு ஒரு ரசனை... அதுக்கு ஏற்றார் மாதிரி தான் அவங்க தலைப்பு. உங்களுடையது சமுதாயத்தின் மேலும் நாட்டின் மேலும் அக்கரை கொண்ட தலைப்பு. காத்திருப்போம். பாருங்க இப்பவே தேன்மொழி எங்க கட்சி கூட சண்டை பிடிக்க வந்துட்டாங்க. :)

வாங்க தேன்மொழி வாங்க.... அது எப்படிங்க... எதுவுமே மாறாம நாடு முன்னுக்கு வரும்?? சில விஷயங்களை சரி செய்ய, சில சாதனைகள் செய்ய சின்ன இழப்புகள் இருக்க தான் செய்யும். நீங்க எங்க பிடிச்சு வெச்சாலும் நானும் கவிசிவா'வும் ஆராய்ச்சி வேணும்'னு தான் சொல்வோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்