பாட்டுக்கு பாட்டு

புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலே
திங்கள் வந்து காயும்போது
என்ன வண்ணமோ நினைப்பிலே

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கெற்றப்படி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத்தை

அடுத்து 'உள்ளம்' என்று ஆரம்பிக்கவும்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லோன் வகுத்ததடா...கர்ணா,
வருவதை எதிர்கொள்ளடா!

தாய்க்கு நீ மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா..
நானும் உன் பழி ஏற்றேனடா!!

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணன் பணி செய்ய
உன்னடி பணிவானடா
மன்னித்து அருள்வாயடா, கர்ணா!!

செஞ்சோற்று கடன்தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயடா, கர்ணா!!
வஞ்சகன் கண்ணனடா!!

தொடர வேண்டிய சொல்"கண்ணன்"

மதியக்கா, நீங்க பாடிய "பூ பூக்கும் மாசம், தை மாசம்" பாட்டு ஜீனோ ஏற்கனவே பாடிடுச்சி..அதுவுமில்லாம அந்த பாட்டு ஆரம்பிக்கும் சொல் "பூ பூக்கும் மாசம்" இல்லை! ஹி,ஹி!!

பாட்டு பாடுவோர் முன்னால உள்ள பதிவுகளை கொஞ்சம் படித்துப் பார்த்து பதிவு போடுங்கோ..ஓ..ஓ..ஓ!
~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

கண்ணன்ஒரு கைக்குழந்தை
கண்கள்சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்துப்
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

தொடர வேண்டிய சொல் "ஏன்" / "சொல்"

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா...
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல
இனிக்குதடா முருகா...
அழகன் என்றால் முருகன் என்று தமிழ் மொழி கூறும்
தமிழ் என தொடங்கும் பாடல்

radharani

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல்
வாழ்க்கை இல்லை;
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்
வாழ்ந்ததில்லை;
ஓராயிரம்.........

ஒர்/ஒரு/அயிரம்-ல் தொடங்கவும்

nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க......

தொடர வேண்டிய சொல் "உன்" அல்லது "உனை"

-ஜெயந்தி

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

அசைந்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்

அடுத்து தொடர வேண்டிய சொல் " இசை"

பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆகிருசு தப்பா இருந்தால் திருத்தவும்]
ஜீனோ கன்னு சாரி மா.கவனிக்கல.அனி இதோ புடிச்சுகோ
இசை அரசி என்னலும் நானே
எனக்கொரு இனையாகுமா
எல்லோரும் இசைப்பது இசையாகுமா
அடுத்து வருபவர் மா' வில் இருந்து ஆரம்பிக்கவும்

do fast mathi

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ...மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ...மெளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது...

அடுத்து 'பாட்டு ' என்று ஆரம்பிக்கவும்

பாட்டு பாட வா
பாட்டு கேட்க வா
பாடம் சொல்ல வா
பறந்து செல்ல வா
பால் நிலாவை போல
வந்த பாவை அல்லவா
தொடங்கும் பாடலின் முதல் எழுத்து 'வா'

radharani

மேலும் சில பதிவுகள்