ஃபிரெஷ் அலொவ் வேரா (Aloe vera) எப்ப‌டி யூஸ் ப‌ண்ணுவ‌து? ஐடியாஸ் ப்ளீஸ்!

ஹலோ ப்ரண்ட்ஸ்,
என் பெண்ணுக்கு உட‌லில் பூசுவ‌த‌ற்கு (அவளுக்கு தோலில் தேமல் போல இருக்கு) என்று க‌டையில் கிடைக்கும் ஃபிரெஷ் அலோவ் வேரா வாங்கிட்டு வந்தேன். ஆனால் எப்ப‌டி அதை யூஸ் ப‌ண்ணுவ‌து என்று தெரியலை.
யாராவ‌து இதுபோல‌ ஃப்ரெஷ் அலொவ் வேரா ஜூஸ் எடுத்து யூஸ் ப‌ண்ணி இருக்கிறீர்க‌ளா? அனுபவம் இருப்பவர்கள் பதில் சொன்னால் நல்லா இருக்கும். ப்ளீஸ் தெரிஞ்ச‌வ‌ங்க‌ சொல்லுங்க‌ளேன். ந‌ன்றி!

ஹலோ ப்ரண்ட்ஸ்,
ஏதாவது பதில் கிடைச்சிருக்குமென்று வந்தேன். ஒருவேளை யாருமே இதை பார்க்கலைன்னு நினைக்கிறேன்.

தெரிஞ்சவங்க வந்து சொன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலே தடிப்பாக இருக்கும் தோலை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் pulp ஐ எடுத்து மிக்ஸியில் மெதுவாக அரைத்து என் சகோதரி யூஸ் பண்ணுவார். fridge இல் வைத்து 1 வாரம் வரை பாவிக்கலாம்.

எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன்.
வாணி

ஹாய் சுஸ்ரீ!
எனக்கு இது விஷயமாய் எதுவும் தெரியல, அதனால்தான் பதிலும் போடலை.
கொஞ்சம் நாள் முன்னாடி எனக்கும் ஃப்ரெஷ் ஆலோவேரா கிடைத்தது. அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து தடவினால் முடிக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு சொல்லி நானும் செய்தேன்.
ஒரு இரும்பு வாணலியில் நிறைய தேங்காயெண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு, ஆலோவேரா தோல் சீவிட்டு துண்டு, துண்டாய் நறுக்கி போட்டது மட்டும்தான் தெரியும்.
அவ்வளவுதான்,நான் துளியும் எதிர்பாராத விதமாய் எண்ணெய் குபுகுபுன்னு பொங்கி வழிந்து , என்னை அந்த ஏரியாவை விட்டே துரத்திடுச்சு.
எல்லா எண்ணெயும் வழிந்து அடுப்பெல்லாம் அணைந்து, கிச்சனெல்லாம் ஒருவழியாய்டுச்சு.
அத்தோடு சரி நான் ஆலோவேரா பக்கமே தலைவெச்சும் படுக்கிறதில்லை.
என் மாமா ஒருவர் அவங்க வீட்டு தோட்டத்திலேயே வளர்த்தார்.
தினமும் ஆலோவேராவை தோல் சீவிட்டு வெட்டி வாயில் போட்டு முழுங்குவார். கேட்டா தோலுக்கு, தலைமுடிக்கு, ரொம்ப நல்லதுன்னு சொல்வார். உடம்பு குளிர்ச்சியாகுமாம்.
இதுதான் எனக்கு தெரிந்தது.

வாணி, உங்க பதிலுக்கு மிக்க நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

சும்மா அப்பப்ப வந்து பாட்டு மட்டும் பாடிட்டு (நம்ம பாட்டுக்கு பாட்டு த்ரெட்ல) ஓடிட்டுருந்தேன் ;) இன்னைக்கு சமீபத்திய பதிவுகள் செக் பண்ணும்போது இங்க வந்தேன்.

ஆமா, நீங்க‌ சொன்ன‌ மாதிரி, க‌ட் ப‌ண்ணி ஒரு ட‌ப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் வைச்சிருக்கேன். வெட்டும் போதே வந்த ஜூஸ் எடுத்து முக‌த்திற்கு இர‌ண்டு முறை போட்டுப்பார்த்தேன், ரொம்ப‌ ந‌ல்லாவே இருந்த‌‌து. மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சோற்று கற்றாழை பற்றிய பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். நீங்கள் கற்றாழையின் மேல் தோலை சீவி எடுக்காமல் தோலுடனே அதை துண்டு துண்டாக வெட்டி எண்ணெயில் போட்டிருந்தால் எண்ணெய் பொங்கி வழிந்திருக்காது.அடுப்பையும் எண்ணெய் சூடான உடன் சிம்மில் வைக்க வேண்டும்.கற்றாழையில் அதிக நீர் இருப்பதால் சூடான எண்ணெயில் போட்ட உடன் பட,பட, ஓசையை கேட்டு பொங்கி வழிவதை பார்த்து நீங்கள் பயந்து விட்டீர்களா! தோழுடன் துண்டமாக்கி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கற்றாழையில் உள்ள நீரெல்லாம் வற்றி எண்ணெயில் இறங்கிய் உடன் கற்றாழை எண்ணெயில் மிதக்கும். அதன் பிறகு எண்ணெயை உபயோகிக்க வேண்டும்.

radharani

ஹாய் கீதா,

ந‌ல‌மா? பிஸியா இருப்பிங்க‌ன்னு நினைக்கிறேன்.
உங்க‌ளுக்கு, உங்களோட இந்த பதிலுக்கு, 'க‌ண்ணுக்கு க‌ருவ‌ளையம்' த்ரெட்‍ல‌ தேங்ஸ் சொன்னேன்.
ஆனா, இந்த‌‌ கேள்வி ஆலோவ் வேரா ப‌ற்றிய‌தால‌ இங்க‌யே வந்துட்டேன் கேள்வியை கேட்க.
அச்ச‌ச்சோ, உங்க ஆலோவ் வேரா அனுபவத்தை படிச்சதும், திக் என்று ஆகிவிட்டது கீதா எனக்கு. அத்த‌னை எண்ணெயும் பொங்கி வ‌ழிஞ்சா எப்ப‌டி இருந்திருக்கும் இல்லை. எவ்வள‌வு வேலை வேற‌, கிச்சனை ம‌றுப‌டியும் சுத்த‌ம் ப‌ண்ணி வைக்க.

என்னோட‌ கேள்வி/சந்தேக‌ம் என்ன‌ன்னா, ஆலோவ் வேரா பீஸ்சஸ்சை க‌ட் ப‌ண்ணி ஃப்ரிட்ஜ்சில் வைச்சிருக்கேன். அதை அப்ப‌டியே அரைத்து த‌லைக்கு குளிக்க‌லாமா? இல்லை, இது ரொம்ப‌ குளிர்ச்சியா? முடிக்கு ஏதாவ‌து பிர‌ச்ச‌னை வ‌ருமா? உங்க‌ளுக்கு டைம் கிடைக்கும்போது, கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ கீதா. ந‌ன்றி!

பி.கு. நீங்க‌ சொன்ன‌ தேங்காய் எண்ணெய் + ஓம‌ம் ட்ரீட்மெண்ட் போன‌ வீக்கெண்ட்டில் ப‌ண்ண‌முடிய‌வில்லை ‍ ஒரே ஜ‌ல‌தோஷ‌ம், த‌லைவ‌லி அத‌னால். இந்த‌‌ வார‌ம் ட்ரை ப‌ண்ணிட்டு சொல்றேன் எப்ப‌டி இருந்த‌‌துன்னு. Bye, take care.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ராதாராணி,
உங்க‌ளோட‌ இப்ப‌தான் முத‌லில் பேச‌றேன்னு நினைக்கிறேன். ந‌ல‌மா?
ஆலோவ் வேரா ப‌ற்றிய‌ உங்க‌ அனுப‌வ‌த்தை எங்க‌ளோட‌ ப‌கிர்ந்துகொண்ட‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்