அனைவரும் சிரமம் பாராமல் எனக்கு உதவுங்கள் தோழிகளே...

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்..
உங்களிடம் என் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்...அனைவரும் சிரமம் பாராமல் எனக்கு உதவுங்கள் தோழிகளே..என் பிரச்னை என்னவென்றால் சமிபகாலமா எனக்கு முடி ரொம்ப உதிர்கிறது..
இதனால் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..தலை சீவினாலோ தலைக்கு குளித்தாலோ முடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.. அதோடு மட்டுமல்லாமல் என் கழுத்திலும் முகத்திலும் சின்னதா மருக்கள் வருகிறது..இதையும் நீக்க வழி சொல்லுங்கள் தோழிகளே..
உங்கள் பதிலுக்காக காத்துகொண்டிருக்கிறேன்..

ஹலோ பிரேமிதா உங்க தலைமுடி எப்படிபட்டது அதாவது ஆயிலியானதா,வறண்டதன்மையானதா?எதுவும் சொல்லவில்லை,உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?எத்தனை நாட்களாக முடி கொட்டுகிறது?எந்த விபரமும் சொல்லாமல் பதில் கூற இயலாது.நீங்கள் அழகு குறிப்புகள் பகுதியில் தோழிகளின் கவனத்திற்கு பதி1,2,3,4 எல்லவற்றையும் பார்வையிடுங்கள்,அதில் நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.

ஹாய்.. மஞ்சு
எப்படி இருக்கீங்க? உங்கள் பதிலுக்கு மிக்க நன்றிங்க..
என் முடி வறண்ட தன்மையுடையது..சமிப காலமாகத்தான் அதாவது ஒரு 2 மாதமாகத்தான் எனக்கு இந்த பிரச்னை உள்ளது.. என் முடி மிகவும் அடர்த்தியாக இருக்கும்..ஆனால் இப்பொழுது மெலிந்து போய்விட்டது..

நான் நன்றாக இருக்கிறேன்,இப்பொழுது உங்களுக்கு பொடுகு தொல்லை உள்ளதா?தண்ணீர் மாற்றம் அல்லது ஷாம்பு மாற்றம் செய்தீர்களா?புதிதாக எதாவது மாத்திரை சாப்பிடுகிறீர்களா?தலைக்கு ஏதாவது புதிதாக எண்ணெய் தேய்க்கிறீர்களா?திடீரென முடி தானாக கொட்டாது?காரணம் என்ன என்று முதலில் அறிந்த பிறகு தான் பதிலளிக்க இயலும்

எனக்கு பொடுகு தொல்லை இல்லை.. ஷாம்பூ மட்டும் மாற்றம் செய்தேன்..அண்டிட்ரன்றுப் (antidrandruf) ஷாம்பூ தினமும் பயன்படுத்தக்கூடாது என்று அறுசுவை அழகு குறிப்பு ஒன்றில் படித்தேன்..ஆனால் நான் ஷாம்பூ மாற்றம் செய்து 2 வாரம் மட்டுமே ஆகிறது.. தலைக்கு (VVD GOLD ) தேங்காய் எண்ணையை பயன்படுத்துகிறேன்..

மேலும் சில பதிவுகள்