வட்டிலாப்பம் கஞ்சி

தேதி: February 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாதாம் - 6
முந்திரி - 10
பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி
பசும்பால் - ஒரு டம்ளர்
சீனி - 6 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
ஏலக்காய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
பட்டை - அரை இன்ச்


 

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாதாமை சுடுத்தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். அதைப்போல அரிசியையும் ஊற வைக்கவும்.
அதன் பின்னர் மிக்ஸியில் பாதாம், 6 முந்திரி, அரிசி, ஏலக்காய் இவைகளை போட்டு சிறிது பால் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி ஒன்றாக சேரும்படி ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
அரைத்தவற்றை மீதம் உள்ள பாலுடன் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை போட்டு மீதி உள்ள முந்திரியை சிறியதாக நறுக்கி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி மிதமான தீயிலேயே வைத்திருக்கவும்.
கொதி வரும் போது ஒரு கிளறு கிளறி விட்டு நன்கு திரண்டார் போல் வரும் வரை மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது சீனி, 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். சீனி கரைந்ததும் நன்கு வெந்து உதிரியாக இருக்கும்.
கலவை வெந்து உதிர் உதிராக வந்ததும் இறக்கி வைத்து விடவும். இறக்கியதும் வறுத்த முந்திரியை சேர்த்து பரிமாறவும்.
சுவையான வட்டிலாப்பம் கஞ்சி ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. ஆயூஸ்ரீ புகழேந்தி </b> அவர்கள் திருமதி. அப்சரா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்து பார்த்ததை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆயிஸ்ரீ .....தங்கள் செய்முறை விளக்கத்தோடு மிகவும் அழகாக வந்துள்ளது.இதை வெளியிட்ட அட்மினுக்கும்,செய்து பார்த்து வெளியிட்ட தாங்களுக்கும் எனது நன்றிகள்.மென்மேலும் குறிப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.