அன்பு தோழிகளே,எப்படி இருக்கீங்க?நீண்ண்ண்ட நாளுக்கப்புறம் மீண்டும் அருசுவைக்கு வந்திருக்கேன்.என் பொண்ணுக்கு இப்போ 6 வயதாகுது.ஆனா அவள் தலையை பார்க்க முடியாது.அவ்வளவு பொடுகு.எனக்கு கொஞ்ச நாள் உடம்பு சரி இல்லாததால் அவளை கவனிக்க முடிய வில்லை.விளைவு.பொடுகு.பத்தாததுக்கு தலை முடி வேறு கொட்டுது.எனக்கு எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலெ.ஸ்கூகுக்கு போகும் பொது தலை முழுதும் வெள்ளை வெள்ளையா இருக்கு.அதனால் தலைக்கு காலையில ஆயில் தடவி தான் ஸ்கூலுக்கு அனுப்பறேன்.ரொம்ப கஸ்டமா இருக்கு.6 வயசு தான் ஆகுது.பொடுகு தீரஎனக்கு ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.நன்றி.