உன்னொடு வாழ்ந் வாழ்க்கை

உன்னொடு வாழ்ந் வாழ்க்கை

எல்லொரும் பொல நானும் கனவுகலொடுதான் வந்தேன்
தலை குனிந்து மாலை வாங்கி

திருமணதுக்கு முன் நீ
ஆசையாய் பெசியதை விட
வெலைக்கு செல்வதை பற்றி பெசியது தான் அதிகம்
திருமணதுக்கு பின் நீ
காதலை பரிமாரியதை விட
காமத்தையெ விரும்பினாய்
நான் தாயான செய்தியைவிட
எனக்கு வேலை கிடைத்த செய்தியே
உன்னை சந்தொஷபடுதியது
குழந்தையை பிரிந்தும்
வாழ்ந்தென்
என்னவனே என்று உனக்கு புரியும் என் பெண்மை

வாங்க சத்தியா! உங்களை அறுசுவையில் வரவேற்பதில் சந்தோசம் அடைகின்றேன்.
குறிகிய வரிகளில் உணர்வை தொடும் கவிதைவரிகள்.
இது உங்கள் சொந்த கதையோ அல்லது
கவிதைக்காக வடித்த வரிகளோ தெரிய வில்லை.
என்றாலும் என் மனதை பிசைய வைத்தது.
ஒருவருக்கு வலிக்கும்போது, வலியை உணராதாராய் இருந்தால் அது எமக்கு புது வழியை கொடுக்கும்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த கவிதை பிடிதிருகா தொழிகலே, உங்கல் கருத்து பாக்க ஆசை

இந்த கவிதை என் சொந்த கதை .........

இந்த கவிதை என் சொந்த கதை .........thank you very much for comments

கவிதை நன்றாக இருக்கிறது...
ஸ்ரேஷாவைப்(கரெக்ட் தானே) பிரிந்திருக்கும் துக்கமும் வாழ்வின் ஏமாற்றங்களும் புரிகிறது....
எத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க மறந்து விடாதீர்கள்....
மகிழ்ச்சியான சூழல்களை உருவாக்க முயற்சியுங்கள்....
கடவுள் கணவருக்கு எல்லாவற்றையும் உணர்த்துவார்..... கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் கடவுளிடம் முறையிடுங்கள்.... இல்லையென்றால் நம் காந்தி(தேசத் தந்தை) வழி.... அகிம்சை தான்...
கோபங்களை வார்த்தைகளில் வெடித்து விடாமல் இங்கு கவிதைகளாக வடிவு கொடுங்கள்.... தோழிகள் ஆதரவு என்றும் உண்டு.....
எங்களின் இந்த ஆறுதல்கள் தீப்புண்ணில் ஊதும்போது கிடைக்கும் சின்ன வலி நிவாரணம் தான் ...
புண் ஆற உங்கள் முயற்சி அவசியம்....

தேன் ரொம்ப அழகா சரியா சொல்லியிருக்கீங்க. சத்யா கவலை வேண்டாம். எல்லாம் சரியாகும்... இந்த நம்பிகை மிக மிக முக்கியம். தேன் சொல்வது போல் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆலோசனை சொல்வது எளிது. செயல் படுத்துவது கடினம் என்பது புரிகிறது. ஆனால் அதுதான் வாழ்க்கை.

உங்களுக்கு பிடித்தமான ஹாபிஸ் வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து எல்லோரிடமும் பேசுங்கள். மனது லேசாகி விடும். வெளிநாடுகளில் தனிமையில் தவிக்கும் பலரும் இங்கே இருக்கிறோம். இங்கே வந்து பேசும் போது எல்லோரும் நம்மோடு இருக்கும் உணர்வு கிடைக்கும்.

உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சத்யா,

உங்கள் கவிதை ரொம்ப அழகாக இருக்கிறது,பெண்களின் உணர்வு சம்மந்தமானது என்பதால் எங்கள் உங்கள் மனதை புரிந்து கொள்ளமுடிகிறது. எதிர்பார்த்த வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது, அப்படியே அமைந்தாலும் அதிலும் இன்பம்,துன்பம் இரண்டும் இருக்கும்.கடவுள் ஒருவருக்கே துன்பமோ,இன்பமோ தருவதில்லை. நமக்கு கிடைத்த வாழ்க்கை நாம் தான் சந்தோஷமாகவோ, துன்பமாகவோ மாற்றமுடியும். உங்கள் அன்பால் மாற்றமுடையாதது ஒன்றுமே இல்லை, எதற்கும் சோர்ந்து போகவே கூடாது. அனுபவம் தான் வாழ்க்கை இல்லையா?.. ஆவதும் பெண்ணாலே,மனிதன் அழிவதும் பெண்ணாலே.அன்பே கடவுள், அதுவே உங்கள் ஆயுதமாக இருக்கட்டும்.
என்றும் உங்கள் அன்பு தோழிகள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மட்டும் என்ன சந்தோஷம் மட்டுமா இருக்கும்,எல்லாம் அப்படி இப்படி தான். சத்யா முயன்றால் முடியாதது ஒன்று உண்டா? .

with love

உங்கள் கவிதை கண்ணாடிமூலம் உங்கள் உண்ர்வுகளை மென்மையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்

இவ்வளவு அழகாய் எழுத தெரிந்த நீங்கள்

நினைத்தால் இதைவிட இதமாய் உங்கள் கணவருக்கு

உங்கள் உணர்வுகளை உங்களவருக்கு அவர்

உணர்வுகளை காயப்படுத்தாமல் வெளிப்படுத்த

முயற்சி செய்யுங்கள்...உங்களால் முடியும்......வாழ்த்துக்கள்
உங்கள் கவிதைகளை கூட அறுசுவைகவிதை பகுதிக்கு அனுப்பிவையுங்கள்...நன்றாக இருக்கிறது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சத்யா...எப்படி இருக்கீங்க....?
மிகவும் அழகாக கவிதையை எழுதியிருக்கின்றீர்கள்.
இளவரசி சொன்னது மிகவும் சரி .இவ்வளவு குறுகிய வரியில் உங்கள் உணர்வை சொல்லி இருக்கின்றீர்கள்.அப்ப நிச்சயம் உங்கள் கணவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க முயற்ச்சி செய்யலாம் சத்யா...
இருப்பினும் உங்கள் கவலைகள் மனதிர்க்கு கஷ்ட்டமாக தான் இருக்கின்றது.எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே உங்களுக்கும்.
ஆனாலும் இந்நிலையை மாற்ற கூடிய பாக்குவம் நிச்சயம் உங்களிடம் இருக்கும் என்றும் நான் உணர்கிறேன்.இந்த கால கட்டத்தில் நிறைய பேர் புரிந்து கொள்ளல் என்பது இல்லாமல் தான் பிரிந்து போகின்றார்கள்.மின்னல் வேகத்தில் நேரங்கள் போவதால் வேலைக்கு செல்லும் கணவர் மனைவி மனம் விட்டு பேசிக் கொள்ளும் நிலை மிகவும் குறைவே....
இவ்வளவு தூரம் பொருமையாக சமாளித்து வருகின்றீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பொறுமை இருப்பது தெரிகின்றது.இந்த பொறுமைக்கான பலன் கடவுள் நிச்சயம் உங்களுக்கு தருவார்.
எனவே...நம்பிக்கையையும்,முயற்ச்சியையும்,மனதையும் எக்காரணத்தை கொண்டும் தளர விடாதீர்கள்.
இவை நம் வாழ்வில் மிகவும் முக்கியம் அல்லவா.....?
உங்கள் உணர்வுகளை உங்கள் கணவருக்கு புரிய வைக்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.அது போல் உங்கள் கணவர் மனமும் மாற நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் சத்யா...

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என் அன்பு தோழிகலே

எதனை அன்பு உங்கலுக்கு

நன்றி என்ற வார்த்தை
கொண்டு
முடித்துகொள்ள
விரும்பவில்லை

சத்தியா

மேலும் சில பதிவுகள்