ரைஸ் புட்டிங்

தேதி: February 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

அரிசி மாவு - அரை கப்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்(திக்கான பால்)
சீனி - முக்கால் கப்
முட்டை - 2
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சீனியை போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் அரிசி மாவை போட்டு தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கலந்து விட செய்யவும்.
குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி நெய் சேர்த்து கலந்து விடவும்.
எலக்ட்ரிக் குக்கரிலோ அல்லது ப்ரஷர் குக்கரிலோ இந்த கலவையை வைத்து வேக விடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அந்த கலவையை உள்ளே வைத்து ஒரு முறை நன்கு கலக்கி விட்டு மூடி போட்டு ப்ரஷர் குக்கராக இருந்தால் ஒரு விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மணி நேரம் வேக விடவும்.
எலக்ட்ரிக் குக்கராக இருந்தால் இந்த கலவை வேக ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகலாம்.
அதன் பின்னர் ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தால் எடுத்து விடவும்.
விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும். விரும்பினால் வறுத்த முந்திரிகளை கொண்டு அலங்கரிக்கலாம். மிகவும் சுவையான மாலை நேர சிற்றூண்டி. இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. அப்சரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரைஸ் புட்டிங் புதுமையாக இருக்கே,சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இரண்டு முறை பதிவாகிவிட்டது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் நலமாக இருக்கின்றீர்களா...?
தங்கள் பின்னூட்டத்தை கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி.மிகவும் நன்றி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்ச‌ரா,
உங்க‌ ரைஸ் புட்டிங் பார்க்கும்போதே ரொம்ப‌ அழ‌கா, அப்ப‌டியே எடுத்து சாப்பிட‌லாம்போல‌ இருக்கு!. ப‌ட‌ங்க‌ள் அருமை!
எல்லா பொருட்க‌ளும் வீட்டிலே இருப்ப‌தால், இந்த‌‌ வார‌ இறுதியில் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.(ஒரே ஒரு ட‌வுட்: நான் ‍ தேங்காய்பால் டின்‍ல‌ இருப்ப‌துதான் எப்பவாது புலாவ்/பிரியாணி செய்ய‌ உபயோகிப்பேன். அது ஓகேதானே?! நீங்க‌ இப்ப‌டி ட்ரை ப‌ண்ணியிருக்கிங்க‌ளா? இல்லை, எப்ப‌வும் ஃப்ரெஷ் பால் தானா? கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ அப்ச‌ரா. )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அப்சரா ,நலமா?
புதுவகையா புட்டிங்க் செய்ய ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்தேன்.இதை பார்த்ததும் உடனே செய்யவேண்டும்போல் உள்ளது...

ஸ்டீம் குக்கிங்க் தானேப்பா....வேகும் அளவு தண்ணீர் ஊற்றி என்றதும் ஒரு சந்தேகம் :-
இதை ஓவனில் செய்யமுடியுமா என்று சொல்லுங்களேன்.

நல்ல குறிப்பு...வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அப்சரா ஒரு ரைஸ் புடிங் பார்சல் ப்ளீஸ் :-).
பார்க்கவே சாப்பிட ஆசையா இருக்கு. ப்ரிண்ட் எடுத்து வச்சிருக்கேன். ஊருக்குப் போகும் போது செய்யத்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Hi abshar,ennakku oru santheam oru tamlar thick milk ennral cup alavil sonnal sariyaha evvalavaha irukkum

சுஸ்ரீ எப்படி இருக்கீங்க...?
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிங்க...
நான் டின் பால் உபயோகித்தது இல்லை.அது ஃப்ரஷ்ஷாக எடுத்தது போல் மணக்குமா என்று எனக்கு தெரியாது.
இந்த புட்டிங்க்கு...மணமே இந்த தேங்காய் பால் மணம் தான்.எனவேதான் சொல்கிறேன். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
நன்றி சுஸ்ரீ...

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா...?
பார்க்க மட்டும் இல்லை சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.இது பாட்டி காலத்து மாலை சிற்றூண்டி.செய்து பாருங்கள்.
உங்களுக்காக மைக்ரோவேவில் விரைவில் செய்து பார்த்து விட்டு தெரிவிக்கின்றேன்.
மிகவும் நன்றி இளவரசி.

ஹாய் கவிசிவா...எப்படி இருக்கீங்க...?
உங்களுக்கு இல்லாமலா.....கவி.பக்கத்தில் இருந்தால் ஊட்டியே விட்டிருப்பேன்.(ஹீ....ஹீ....)
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி கவிசிவா.

ஹாய் ஜாஸ்மின்...நலமா..?
ஒரு டம்ளர் என்பது 150 மிலி அளவு அல்லது ஒன்றரை கப் ஆகும்.
உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி ஜாஸ்மின்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

apsara akka idiyappa maavu use panlama...plz sollunga

Anything is good for something

Hi akka itharkku double horse idiyapa mavu use pannalama.idli satiyil avikalama

Super akka, I will try it