ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (3 டோர்ஸ் டைப்) பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.
எங்கள் வீட்டில் வேற ஃபிரிட்ஜ் வாங்கலாமென்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போதைய லேட்டஸ்ட் மாடலான ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் பார்க்க நன்றாக இருக்கிறது. பொதுவா அதைப்பற்றிய ரெவுயூஸ்ம் (இன்டர்நெட்டில்) நன்றாகவே இருக்கிறது. யாராவது அது தற்சமயம் வைத்திருப்பவர் அதைப்பற்றி சொல்லும் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது. என்னவென்றாலும் எங்கோ யாரோ எழுதி இருப்பதைக்காட்டிலும், ஒருவரின் சொந்த அனுபவம் வாய்ந்த கருத்துக்கள் மிக சரியாக இருக்குமல்லவா?!
சோ, இன்னும் என்ன யோசனை, ஃப்ரண்ட்ஸ், வாங்க வந்து உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்திட்டு போங்க. தேங்ஸ்!.
சுஸ்ரீ
சுஸ்ரீ நலமா? எப்படி இருக்கீங்க? என்னிடம் அது போல் ஃப்ரிட்ஜ் இல்லை. ஆனால் அது ஃப்ரீஸரில் அதிக இடமும், பொருள்களை வைத்து எடுக்க மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் வாங்குவது நிச்சயம் நல்ல ஐடியாதான்.
ஹாய் வின்னி,
ஹாய் வின்னி,
நான் நலம் - அப்பப்ப வந்து போகும் ஜலதோஷம், தலைவலி தவிர நல்லா இருக்கேன். (எல்லாம் இந்த அன்ஸ்டேபிள் வின்டர் பண்ணும் வேலை :( )
நீங்க எப்படி இருக்கிங்க? உங்க பொண்ணு நலமா? அங்க குளிர் எல்லாம் குறைந்திருக்கா?
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்க கருத்தை சொன்னதற்கு ரொம்ப நன்றி வின்னி. ஆமாம் வின்னி, முக்கியமா எனக்கு ஃப்ரீஸரில் நிறைய இடம் இருந்தால் நல்லா இருக்கும். இப்ப இருப்பதில் போதவில்லை. :) எப்படியும் இந்த வீக்கென்ட் ஆர்டர் பண்ணிடுவோமுன்னு நினைக்கிறேன், பார்க்கலாம்!. நன்றி, மீண்டும் பிறகு பேசலாம்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
ஹாய் சுஸ்ரீ, நான், பொண்ணு எல்லோரும் நன்றாக இருக்கோம். இங்கும் குளிர் அப்படியேதான் இருக்கு:-( ஃப்ரிட்ஜ் வாங்கி உபயோகித்ததும் இங்கு வந்து அப்டேட் குடுங்க, எப்படி இருக்குன்னு. வேறு யாருக்காவது உபயோகமாக இருக்கும்.
ஷ்யூர் வின்னி!
ஹாய் வின்னி,
உங்க பதிவு இன்னைக்குதான் பார்த்தேன். ஷ்யூரா நானும் அதையேதான் செய்ய நினைத்திருந்தேன் வின்னி. அப்புறம் போன வீக்கென்ட், ஃப்ரிட்ஜ் வாங்கலை. அன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு போனதும், எனக்கு ஒரே குளிர் ஜுரம்போல வந்து படுத்துட்டேன். சனிக்கிழமை கூட ஒரே டயர்ட். இதுக்கு நடுவுல, தீடீரென்று எங்க வாஷர் (க்ளோத்ஸ் வாஷர்) வேற மக்கர் பண்ணவும், டக்குன்னு வாஷர் ஆர்டர் பண்ணிட்டோம். பிரிட்ஜ் இன்னும் கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாமென்று தள்ளிவைத்தாயிற்று, இப்ப இருப்பது ஓடும்வரை ஓடட்டுமே என்று! :) மீண்டும் பிறகு பேசலாம் வின்னி.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ