பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்பே...உன்னால் மனம் ஃப்ரீஸிங்...
அடடா...காதல் என்றும் அமேஸிங்...
எக்ஸ்க்யூஸ் மி லெட் மி டெல் யு சம்திங்...
நீ சிரித்தால் ஐ-ஃபோன் ட்ரிங் ட்ரிங்...
வீசும் அம்பு என் மேல் பாய...
காதல் வந்து என்னை ஆள..
வருவாயோ என்னை காப்பாற்ற...
வந்தால் மடி சாய்வேன் வாழ...

ஹசிலி,ஃபிசிலி ரசவலி
உன் சிரிப்பிலும்,சிரிப்பிலும் கதக்கலி
என் இளமயும்,இளமயும் பனித்துளி
குதுக்களி.........
எனக்கும்,உனக்குமான இடைவெளி
நீ இரவிலும்,இரவிலும் இமை வசி
என் பகலிலும் ,பகலிலும் நடு நிசி
புது ருசி....
அஞ்சனா....அஞ்சனா....
கொஞ்சினால்...தானே தானா...
என் கனா... ஓ....என் கனா...
என்றுமே...நீ தானா....

இனி தொடங்க வேண்டிய வார்த்தை... ‘கனா...’எனும் வார்த்தை தோழிகளே...

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

க‌னாக் காணும் க‌ண்க‌ள் மெல்ல‌
உற‌ங்காதோ பாட‌ல் சொல்ல‌
நிலாக் கால‌ மேக‌ம் எல்லாம்
உலாப் போகும் நேர‌ம் க‌ண்ணே,
உலாப் போகும் நேர‌ம் க‌ண்ணே

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'க‌ண்ணே/க‌ண்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன்

தொடர வேண்டிய சொல் "நினைத்தே"

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை கான்கிறேன்.
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதுக்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை கான்கிறேன்

அடுத்த வார்த்தை - பெண்ணே

-Archana

Archana Radhakrishnan

பெண்ணே நீயும் பெண்ணா..
பெண்ணாகிய ஓவியம்...
ரெண்டே ரெண்டு கண்ணா..
ஒவ்வொன்றும் காவியம்..
ஒரு மூன்றாம் பிறையைச் சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி..
பனி பூக்கள் தேர்தல் வைத்தால்
அதில் என்றும் உனக்கே வெற்றி..
தொடங்கும் பாடல் முதல் வார்த்தை "வெற்றி"

radharani

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- மழை

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ம‌ழையே ம‌ழையே
நீரின் திரையே
வான‌ம் தெரிக்கும் க‌விதைத் துளியே
மேக‌த்தின் சிரிப்பொலியே
நீல‌ வான‌மே...

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை 'நீல‌ வான‌ம்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நீல வான ஓடையில்....
நீந்து கின்ற வெண்ணிலா....
நான் வரைந்த படல்கள்..
நீலம் பூத்த கண்ணிலா...
வராமல் வந்த என் தேவி....
(நீல வான....)

காளிதாஸன் பாடினால்,மேக தூதமே....
தேவதாஸன் பாடுவான் காதல் கீதமே...
இதழ்களில்...தேன் துளி...
ஏந்திடும் பைங்கிளி...
இதழ்களில்....தேன் துளி...
ஏந்திடும்....பைங்கிளி...
நீ இல்லையே...நான் இல்லையே....
ஊடல் ஏன் கூடும் நேரம்
(நீல வான...)
நானும்,நீயும் நாளை தான்...
மாலை சூடலாம்...
வானம் பூமி யாவுமே...
வாழ்த்து பாடலாம்...
விழியிலே...கோபமோ...
விரகமோ...தாபமோ...
ஸ்ரீ தேவியே....என் ஆவியே...
நீ எங்கே...அங்கே நான்தான்

இனி தொடங்க வேண்டிய வார்த்தை ‘எங்கே’ என்பதாகும்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி
இனி தொடங்க வேண்டிய வார்த்தை "நதி"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ந‌தியா ந‌தியா நைல் ந‌தியா
ந‌திபோல் நெளியும் ந‌டையா
இடைதான் கொடியா கொடிமேல்
க‌னியா, கொண்டாட‌ நான் இல்லையா

அடுத்து 'நான்' என்ற வார்த்தையில் தொடரவும்

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்