பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

நான் ஒரு கனாக் கண்டேன்
என் கனவில் வந்தவள் தேவதையோ
நான் ஒரு கனாக் கண்டேன்
என் கனவில் வந்தவன் ராக்ஷ்சனோ

தொடர வேண்டிய வார்த்தை "கனா"

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்

தொடர வேண்டிய சொல் "பருவம்" (or) "பருவமே" :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு
தொடர வேண்டிய வார்த்தை "தீபங்கள்"

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்தில
பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்தா குத்தமில்ல

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'முல்லை'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே!

வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி பாயக்கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே..மொய்க்கும் வண்டு போலே!

தொடர வேண்டிய சொல் "அலை"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா

தொடர வேண்டிய வார்த்தை "கண்ணா/கண்ணன்"

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ண கிளி வந்து பழம் கொடுக்க.
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் வந்து கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கனக்கிலும் வரவு வைத்தான்

ஒருவரின் குரலுக்கு மயங்க வைதான்
உன்மையய் அதிலே உறங்க வைதான்

அள்ளி அள்ளி தொடுக்கின்ற பூ போலே
கொட்டி கொட்டி அளக்கின்ற பொன் போலே

தொட்டு தொட்டு வளர்ந்தாள் உறவாக
தொட்டில் கட்டி வளர்த்தேன் உயிராக

(கண்ணன் வருவான்)

தொடர வேண்டிய வார்த்தை - உயிர்

அன்புடன்
அர்ச்சனா

Archana Radhakrishnan

உயிரின் உயிரே..உயிரின் உயிரே..
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்!
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கிறேன்.

நகரும் நெருப்பாய்க் கொழுந்து விட்டெரிந்தேன்..
கடந்த பின்பும் கனலின் மேலிருந்தேன்..
காலைப் பனியாக என்னை வாரிக்கொண்டாய்!

நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே..பின்பு ஏனோ சென்றாய்!
உயிரின் உயிரே..உயிரின் உயிரே..
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்!

தொடர வேண்டிய சொல் "காத்து"
காற்று இல்லிங்கோ,காத்து..வெயிட்டிங்:)

இன்னிக்கு அண்ணாத்த புல் பார்ம்ல கீறாரு..பாத்தீங்களா, எத்தினி சாங்க்ஸ் பாடிருக்காரு? கூல் மாமே,கூல்! :D:D:)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அனைச்சா நிம்மதி ஆகுமடி...
தொடங்கும் வார்த்தை நேத்து, நேற்று,

radharani

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் சொன்னது
இது தான் காதல் என்பதா
இதயம் தூங்கி விட்டதா
--------
சொல் மனமே.....

தொடங்கும் வார்த்தை "மனமே"

மேலும் சில பதிவுகள்