வல்லாரை துவையல்

தேதி: February 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

வல்லாரைக்கீரை - 2 கட்டு
தேங்காய் துருவல் - ஒரு கப்
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - அரை அங்குல துண்டு
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 3
உப்பு - அரை தேக்கரண்டி


 

கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம் போட்டு 30 நொடி வதக்கவும்.
அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும்.
அதனுடன் புளி, இஞ்சி, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும். சுவையான வல்லாரை துவையல் ரெடி. இந்த குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தி விஸ்வநாதன் </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம்
நான் புதிதாக வந்துள்ளேன் அருசுவை உணவுவகைகளைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள். மோகனம்0672