CHIKKAN KUNIYAA

CHIKKAN KUNIYAVUKKU VALI OYIR POOKIRATHU.VALI MEEMGA VAZHI SOLLUNGALEN PLEASEEEEEEEE.

Sow.MohanaRavi
CHIKKAN CUNIYAVAL VALI OYIR POOKIRATHU. VALI NEENGA VAZHI SOLLUNKALEN PLEASEEEEEEEE?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இது ரொம்ப மோசமான வலின்னு கேள்வி பட்டு இருக்கேன்.

ஒரு மாதம் ஆகும் சரியாக என்று ஊரில் எல்லாம் சொன்னார்கள்., என்னால் அதை பற்றி தெரியாததால். உங்களுக்கு பதில் சொல்ல முடியல/

முட்டி வ‌லி அதிக‌மாக‌ இருக்குமாம். ஆண்ட‌வ‌ன் உங்க‌ளுக்கு நற்சுக‌த்தை த‌ர‌ட்டும்/

இருங்க‌ ஆசியா வ‌ந்தா இதுக்கு க‌ண்டிப்பா ப‌தில் சொல்வாங்க‌

Jaleelakamal

சிக்குன் குனியா வந்தால் 2 அல்லது 3 மாதம் வரை கண்டிப்பகாக ஓய்வு வேண்டும். முடிந்தவரை நடக்காமல் இருப்பது நல்லது. இதற்கு வேரு ஒரு மாற்று வழி இல்லை.

நானும் பாதிக்கபட்டு பட்ட பாடும்,வலியும் எனக்கு மட்டுமே தெரியும்,அல்லோபதியில் இரண்டு மாதமாகியும் என்னால் நடக்க முடியாமல் சிததா மருந்து எடுத்தேன்,அதுவும் வேகமாக வேலை செய்யலை,இப்ப வேறு வழியில்லாமல் ஸ்டீராய்டு இஞ்செக்‌ஷன் போட்டு உள்ளேன்,ஒரு வாரம் ஆகிறது,ஒரளவு பரவாயில்லை,நீங்க டாக்டர் அட்வைஸ் படி நடங்க,நடக்க முடியாமல்,மற்றும் முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் எத்தனை நாள் அவதிப்படுவது?டாக்டரின் அட்வைஸ் COMPLETE REST தான்.சுகமாக குறைந்தது 3 மாதம் ஆகலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இது எனது அனுபவம். இது குறித்து முன்பே ஒருமுறை மன்றத்தில் எங்கோ பதிவு கொடுத்து இருக்கின்றேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சிக்கன் குனியா வந்தபோது நான் அனுபவித்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. வலி ஒருவாரத்தில் சரியாகிவிடும். ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்கள். எனக்கு மூன்று மாதமாகியும் வலி இருந்தது. முதல் ஒரு மாதம் கொடுமையான வலி. அடுத்த இரண்டு மாதங்கள் கொஞ்சம் குறைந்திருந்தாலும் கைகளை சாதாரணமாக அசைப்பதுபோல் அசைக்க முடியாது.

இதற்கு ட்ரீட்மெண்ட்டே கிடையாது. வெறும் பெயின் கில்லர்ஸ்தான். அதுவாகவே சரியாகிவிடும் என்றார்கள். எத்தனை பெயின் கில்லர் டேப்லெட்ஸ் போட்டும் எனக்கு வலி குறைந்த பாடில்லை. மற்றவர்களுக்கெல்லாம் ஒரு வாரம், ஒரு மாதத்தில் வலி குறைந்துவிட எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று பயந்துபோய், ஒரு கட்டத்தில் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்டிடம் சென்றேன். அவர் எங்கே வலிக்கிறது, கையை தூக்குங்கள் என்று சொல்லி, நான் தூக்குவதற்குள் அவரே கையைப் பிடித்து மேலே தூக்க, நான் போட்ட கதறலில் அவர் பயந்து போய்விட்டார். இவ்வளவு வலி இருக்கிறதா என்று சொல்லி எனக்கு ஸ்டீராய்டு டேப்லெட் கொடுத்தார். என்ன டோஸ், எத்தனை நாளைக்கு எடுக்க வேண்டும், எந்த அளவு என்பதையெல்லாம் தெளிவாக குறிப்பிட்டு, இதை அதிகம் சாப்பிடக்கூடாது என்பதையும் தெளிவாக வலியுறுத்தி கொடுத்தார். அதற்கு சைடு எபெக்ட்ஸ் வராத பக்க மாத்திரைகளும் கொடுத்தார்.

அவரிடம் காண்பித்த அன்று இரவு, மறுநாள் காலை இரண்டு வேளைகள் மட்டுமே அந்த டேப்லெட்ஸ் எடுத்தேன். மறுநாள் மதியமே எனக்கு அப்படி ஒரு வலி இருந்த சுவடே இல்லாமல் மாயமாய் மறைந்து இருந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. வலி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும் என்று நினைத்தேன். ஒட்டுமொத்தமாய் ஏதோ என்னை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்த ஒன்று சட்டென விடுவித்ததுபோல், சடாரென விலகிவிட்டது. வலி போய்விட்டது என்ற சந்தோசத்தைவிட, இது தெரியாமல் மூன்று மாதமாக வலியை அனுபவித்துவிட்டோமே என்ற மனவருத்தம்தான் எனக்கு அதிகமாக இருந்தது. நான் இரண்டு வேளைக்கு மேல் அந்த மாத்திரை எடுக்கவில்லை. அதற்கு தேவையும் இருக்கவில்லை.

நான் ஸ்டீராய்டு பற்றி இங்கே எழுதியபோது சிலர் "அதை ஏன் சாப்பிட்டீர்கள், எந்த டாக்டர் உங்களுக்கு கொடுத்தது என்றெல்லாம் பதறினார்கள். நான் அதற்கு பதில் கொடுக்க விரும்பவில்லை. ஒரு விசயம், ஸ்டீராய்டு ஒன்றும் உயிர்கொல்லி மருந்தல்ல. அப்படி இருக்குமாயின் அதை மார்க்கெட்டில், மருந்துகடையில் விற்கமாட்டார்கள். அதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் மாட்டார்கள். அதை யாருக்கு கொடுக்க வேண்டும், எந்த அளவிற்கு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு நிச்சயம் தெரியும். அதை அளவாக எடுக்கும்போது அது மருந்துதான்.

உங்களுக்கு வலி உயிர் போகின்றது என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பதால் நான் இதனை எழுதுகின்றேன். வலியை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். என்னுடைய சகோதரியும் சென்ற முறை நான் டேப்லெட்ஸ் எடுத்த போது அதை ஏன் சாப்பிட்டாய் என்று என்னை திட்டினார். இரண்டு மாதத்திற்கு முன்பு அவருக்கு சிக்கன் குனியா வந்தபோது போன் செய்து அது என்ன மாத்திரை என்று கேட்டார்.

இங்கே நான் தங்களுக்கு குறிப்பிட விரும்புவது, நீங்களும் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளுங்கள் என்பது அல்ல. அப்படி ஒரு வழிமுறை இருக்கின்றது, அதனால் நான் பயனுற்று இருக்கின்றேன் என்ற தகவல் மட்டுமே. நீங்கள் உங்கள் டாக்டரிடம் இது குறித்து விசாரித்து அறிந்து, எடுத்துக்கொள்ளலாமா என்பதை நன்கு கேட்டு, அவர் கொடுத்தால் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாக எதுவும் செய்ய வேண்டாம். மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த வருடம்தான் சிக்கன் குனியா அதிகம் பரவியுள்ளது. என்னுடைய அனுபவத்தை கேட்டு சிலர் டாக்டரிடம் ஆலோசித்து, குறைந்த டோஸ் மாத்திரைகள் எடுத்து வலியில் இருந்து விடுதலை பெற்று இருக்கின்றார்கள். சாதாரண பெயின் கில்லர்ஸ், டாக்டர் கொடுக்கும் மற்ற மருந்துகளால் உங்கள் வலி குறையவில்லையென்றால், இந்த முறை பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டுப்பாருங்கள். மருத்துவர்கள் பொதுவாக ஸ்டீராய்டு கண்டெண்ட் டேப்லெட்ஸ்களை பரிந்துரைப்பதில்லை. ஸ்டீராய்டு என்று பொதுவாக நான் குறிப்பிட்டு இருந்தாலும், இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. உங்கள் மருத்துவர் அறிவார். இது பற்றி ஒரு ஆலோசனை கேட்டுப்பாருங்கள்.

இன்னொரு முக்கியமான விசயம், உங்களுக்கு எத்தனை நாட்களாக வலி என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. இப்போதுதான் ஒரு சில நாட்களாக என்றால், இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நிறைய பேருக்கு சில நாட்கள் வலி கடுமையாக இருந்து பிறகு சாதாரண மருந்திலேயே சரியாகிவிடுகின்றது. நீங்கள் அதிக நாட்களாக,மிகக் கடுமையான வலியால் அவதிப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்.

Sow.MohanaRavi
nandri JALEELA BANU

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Sow.MohanaRavi
NANDRI NITHYA!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Sow.MohanaRavi
NANDRI AASIYA!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Sow.MohanaRavi
MIKKA NANDRI
ADMIN!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

R U THERE?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்