அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

இமா உங்களுக்கு இப்போ விடுமுறையா?...... செபாஅம்மா,கிறிஸ் அவர்களையும் விசாரித்தாக சொல்லவும்.

சங்கீதாகோபால் நலமா? நானும் கத்தார் தான்ப்பா....மகன் எப்படி இருக்கிறான்?......

மகேஸ்வரி குட்டிபாப்பா என்ன சேட்டை செய்கிறாள்?

தேன் குழந்தைகள் நலமாப்பா? .....நான் கேட்டதற்கு பதிலை காணோம்:-((((

பிரியா எப்படி இருக்குறீங்கப்பா?.......

அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்

with love

வணக்கம்.
சுபத்ரா, குழந்தைகள் நலம்.செனோராவிற்கு அன்பு முத்தங்கள்.
இமா வாழ்த்திற்கு நன்றி. மலர் என்னைவிட இருமடங்கு அறிவாளி என்பதால் ஒரு பொது ஆர்வம் தான்.... சரி நம்ம எப்படி... teamwork புரியலை.... :)
ஆமையார், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள் எல்லாம் நலமா?
ஈஸ்ட்டர் விழாவின் போது மிகவும் தேடினேன்... அப்படி இப்படி இன்டர்நெட்டில் தேடி ஹெப்சிக்கும் ஜோயலுக்கும் ஈஸ்ட்டர் பேஸ்கட் செய்தோம் ...
சோனியா சோனியா எப்படி இருக்கிறீங்க? புதுசா வர்றவங்களை நல்லாவே வரவேற்கிரீங்க... யோசிச்சுப் பார்க்கிறேன்..என்னை வரவேற்றது யாரென்று... அவர் இப்போது வருவதில்லை....
யோகராணி அறுசுவையில் துறுதுறு .... +2,10 ஜோக்கைப் படித்து வாய் விட்டு சிரித்தேன்... திருக்குறள்...பாட்டுக்கு பாட்டுன்னு கலக்குறீங்க.... வாழ்த்துக்கள்...
ஷமிலாசாஜ் மகன் நலமா? மலையாளம் ஒண்ணும் கஷ்டமில்ல, அதனால் அவர்களுடன் பேசுங்கள். புரியும். நீங்கள் தமிழில் பேசினாலும் அவர்களுக்கு புரியும். எனவே தனிமையில் தவிக்காதீர்கள் .
கோகி நீங்கள் எந்தத் துறையில் expert?
கிரிஜா, திவ்யா உங்களிருவருடன் ஒரு அறிமுக ஹாய்.
சங்கீதா நலமா? நானும் நானும்ன்னு அங்கேயே பதிவு போடத் துடித்தது அடக்கு அடக்கு என்று அடங்கினேன்... செல்விக்கா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.... வெற்றி நிச்சயம்...
வனிதா நன்றி. மழலை.... :( .யாழினி பாட்டில் குமரன் தூங்குகிறாரா?
மற்றவை பதில் கண்டு...

thenmozhi....nalla irukingala?appaa yepdi yellarudaiye question nukum ore time le ans pandringa....smart paaaa...apparam unga family yella nalla irukaangalaaa?ungala pathi yenaku theriyadhu...so work pandringalaa homemakera?naa pesi paakure neighboursku puriyaadhunu ninaichee neega sonnadhu ku apparam ippa pesure......ok

ஹல்லோ திரேசா!
நான் நலமே அங்கும் அவ்வண்ணமே ஆகட்டும்.அறுசுவை ஆரம்பித்த பின் இன்றுதான் வருகின்றீர்களா?
புது அறுசுவை நன்றாக இருக்கின்றது.நல்ல பொழுது போக்கும் கூட.நகைச்சுவை பார்த்தீர்களா? பாராட்டுக்கு நன்றி.
நீங்களும் ஏதாவது நகைச்சுவை எழுதலாம் தானே.தொடர்ந்து வாருங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தோழிகளே! என் பெயர் பிரபானி, நான் அறுசுவைக்கு பழசு,ஆனால் அரட்டைக்கு புதிது,உங்கள் எல்லோரையும் தேடினேன் காணவில்லை,நான் போகிறேன் மீண்டும் உங்களை சந்திப்பேன்

அன்புடன்
பிரபா(அது என் சோட் பெயருங்க)

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

என்னப்பா கிரிஜா, எப்பிடி இருக்கீங்க. உன்க குழந்தை நலமா. நீங்க எந்த ஏரியான்னு சொல்லவே இல்லை. ஒரே இடம்(கத்தார்) இருப்பதால் வந்துருவேன்னு பயமா.
சும்மா ஜாலிக்கு தான் சொன்னேன் பா. விருப்பமில்லைன்னா ஏரியா பற்றி சொல்ல வேண்டாம். உன்க குழ்ந்தைக்கு எத்தனை வயது ஆகிறது. ஆணா, பெண்ணா.

priyamudan sangops

என்னையும் உங்களொடு சேர்த்து கொள்ளுங்கள்....

வணக்கம்.
ஷமிலா இந்த ஸ்டைல் நான் இமாவிடம் இருந்து கற்றுக் கொண்டது... பாராட்டும் இமாவைத் தான் சேர வேண்டும்...
மகன் நலமா?
என்னைப் பற்றி:
இரண்டு அன்புக் குழந்தைகள். ஹெப்சியும்(7) ஜோயலும்(4).
இருப்பது: சிங்கப்பூர்.
இமா
நன்றி. உங்க ஊர் கதை அருமை...
உங்கட செல்லங்கள் நலமா?
செபா அம்மா நலமா?
யோகராணி
நான் தினமும் அறுசுவைக்கு வருகிறேன்...
பாட்டில் ஆர்வம் குறைவு...
குறளுக்கு தினமும் வர முயற்சிக்கிறேன்....
சங்கீதா நான் சிங்கப்பூரில் அங் மோ கியோவில் இருக்கிறேன்... நான் உங்களுக்கு பயப்படலியே....
ஐ!!!!!!! பிரபா(னி) ஹாய் ஹாய் ஹாய் ....
கலை ...சேர்த்துட்டேன்.....ஹாய் ஹாய் ஹாய் ....

ஹல்லோ தேனு, ரெம்ப குதிக்காதீங்க. சிங்கப்பூரிலும் எங்க ப்ரண்ட்ஸ் இருக்கான்க. அதனாலே அன்கேயும் வருவேன்.................ஆமா, சொல்லிப்புட்டேன்

priyamudan sangops

சுபத்ரா, கத்தார் லே நீங்க எங்கே இருக்கீங்க. நாங்க இருக்கிர ஏரியா மதின கலிஃபா-லக்தா

priyamudan sangops

மேலும் சில பதிவுகள்