குழந்தைகளுக்கான வெரைட்டி உணவுகள்

ஹலோ Dear Arusuvai friends,

குழந்தைகளுக்கான வெரைட்டி உணவுகள் பகுதியில் தங்களுக்கு தெரிந்த வித்யாசமான் உணவு வகைகளை இதில் பகிர்ந்து கொள்ளவும். வயது வாரியாக பிரித்தால் மிகவும் உதவியாக இருக்கும். என் குழந்தைகு வயது 1.5 என்ன மாதிரி வெரைட்டி உணவுகள் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தெரிவிக்கவும். உங்களது அனுபவங்களை பகிந்து கொள்ளவும் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். என்ன மாஅதிரி அசைவ உணவுகள் எந்த முறைப்படி தயாரிப்பது என்பது பற்றி தெரிவிக்கவும். Thanks in Advance.

Help Please !!!

meeru

ஹாய்
அனுபவம் வாய்ந்த தாய்மார்கள் குறிப்பு கொடுத்தால் என் போன்ற புதிய அம்மாக்களுக்கு உதவியாய் இருக்கும் முதலில் இந்த thread open செய்த anugrahaவுக்கு என் நன்றி,நானும் அனைவரின் பதிலுக்கும் காத்திருக்கிறேன்
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

என் மகனுக்கும் 1.5 வயது.அவனுக்கு காலையில் இட்லி, நெய்தோசை,கோதுமை ரவை கஞ்சி,சத்து மாவு கஞ்சி,ஓட்ஸ் கஞ்சி ,noodles with egg,bread with egg,கோதுமை மாவு பூரி &சப்பாத்தி கொடுக்கின்றேன்.
காலை & மதிய உணவுக்கு இடையில் fresh juice கொடுப்பேன்.
மதியம் அரிசி,பாசிப் பருப்பு,சீரகம்,பூடு,மிளகு இவற்றுடன் தினமும் ஒவ்வொரு காய்கறி(கேரட்,பீன்ஸ்,கீரை,உருளைக்கிழங்கு) சேர்த்து குழைய வேக வைத்து கொடுப்பேன்.பொரித்த முட்டை,அவித்த முட்டை,பொரித்த மீன் கொடுப்பேன்.
Evening பாலுடன் பிஸ்கட் or Avacado milk shake கொடுப்பேன்.
Night இட்லி,தோசை,சப்பாத்தி கொடுப்பேன். தூங்குவதற்கு முன்னால் cerelac or milupa கொடுப்பேன்.
மற்றவர்களும் என்ன சொல்லுறான்கனு பார்க்கலாம்

hi Revathy,

என் மகனுக்கு 1.2 மாதம். அவனுக்கு oats கஞ்சி குடுக்கலாமா? எப்படி அதை தயாரிப்பது ? கோதுமை கஞ்சி தயாரிப்பது பற்றியும் சொல்லவும்.first time how can i introduce both the items. At what time (morning/evening) can i give. ? can i give ravaa uppuma for him ? Is it digestiable? shall i give Milupa instead of Cerelac. I am in kuwait, i can get milupa here. how can i introduce it? pls refer some other easily digestable food for 1.2 months baby. Pls if possible answer all questions. May i know ur place?

அனு,இந்த லிங்க் உங்களுக்கு உதவுகிறதா பாருங்க.மனோமேடம் அழகா டிப்ஸ் கொடுத்திருக்காங்க,கீதாச்சல் குறிப்பிலயும் பாருங்க...ஆசியா மேடம் ப்ரெட் புட்டிங்க் கூட ஃபேமஸான குழந்தை ஸ்பெஷல்..என் குறிப்பிலயும் சில லஞ்ச் பாக்ஸ் உணவுகள் இருக்கு
http://www.arusuvai.com/tamil/node/7818

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கிங்க நன்றி ரேவதி.என் பொண்ணுக்கு 10 மாதம் பூரி சப்பாத்தி கொடுக்கலாமா.Night எந்த டைம் இட்லி,தோசை கொடுப்பீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா.avacoda எப்படி select செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.ஏன்னா 2 தடவை வாங்கி நல்லாவே இல்லை.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் geetha நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 1.2 மாதம் என்பது 1 1/4 வயசு தானே.தாரளமாக ஓட்ஸ் கஞ்சி.கோதுமை கஞ்சி கொடுக்கலாம்.
செய்முறை:
தண்ணிரை கொதிக்கவைத்து oats or கோதுமைரவை சேர்க்கவும் பிறகு வெந்தவுடன் பால் சக்கரை சேர்த்துக்கொடுக்கலாம்.முதலில் கொஞ்சமாக செய்யவும்.எந்த புது உணவாக இருந்தாலும் காலையில் கொடுக்கவும்.
ரவை உப்புமா நான் என் பொண்ணுக்கு கடுகு கடலை பருப்புஎதுவும் தாளிக்காமல் கொடுப்பேன் ஏன்னா இப்பதான் அவளுக்கு பல் வருது.milupa digestable food தான் அதனால் தைரியமாக கொடுக்கலாம்.ரேவதி உங்களுக்கு பதிலாக நான் எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் sorry.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்