இலங்கை தோழிகள்

ஹாய்! எல்லோரும் நலமா? srilanka தோழிகள் இருந்தால் இந்த பகுதிக்கு வாங்க,, பழகலாம்,,,,,i'm waiting for you......

என்பெயர் யோகராணி. நானும் சிறிலங்காதான்.தற்போது (இருபது வருடங்கள்) நோர்வேயில் வசிக்கின்றேன்.எனக்கு மூன்று பிள்ளைகள் (இரண்டு பெண், ஒரு ஆண்) உங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Hello தர்சி.நானும் Srilanka தான்.இங்க வந்து 3 years ஆச்சு.

இலங்கைத் தோழிகள் சங்கம் பாகம் பாகமாகப் போய்க் கொண்டிருந்தது முன்பு. ஒரு பெரிய இடைவேளையின் பின் நீங்கள் மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள் தர்ஷி. சந்தோஷமாகப் பழகுங்கள், வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது நானும் வந்து ஹாய் சொல்கிறேன்.

இங்கு மட்டும் என்று ஒதுங்கி நின்று விடாமல் அரட்டையிலும் ஏனைய இழைகள் எல்லாவற்றிலும் இணைந்து மற்றவர்களோடும் பழகுங்கள்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

hai nanum srilanka than im aseema nan ingu wandu 1 year than ahagudu now im pregnant only 50 days thank you bye

ஹாய் தோழிகள் எல்லோருக்கும் வணக்கம்.இலங்கை தோழிகள் ஒன்றாக இணைந்திருப்பது மிகவும் சந்தோசம்.
ஒவ்வொருத்தரும் உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.நான் தாய் நாட்டில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டனான்.எனது படிப்பெல்லாம் சாவகச்சேரியில்தான். பின் நெசவு உயர்படிப்புக்காக நல்லூர் டீச்சர் ரெயினிங் கொலிச்சில் இரண்டு வருடம் படித்தேன்.யாராவது அங்கு படித்தவர்கள் இருந்தால், இங்கே வந்து பதிவு போடுங்கள்.நான் எல்லோரையும் மிகவும் மீஷ் பண்ணுறேன்.
தோழிகளே கூடிய வரையில் தமிழில் பதிவு செய்தால் நல்லது.அது செய்வது மிகவும் சுலபம்.இங்கேயே அதற்க்கு ஒரு பக்கம் இருக்கின்றது.
நன்றி அன்புடன் ராணி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் தர்சி முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நான் கனடா .நீங்கள் எந்த இடம்.உங்களுடைய புரொபைலில் நீங்கள் கனடா என்று இருந்தது.ஆனால் நீங்கள் தற்போது ஓமானில் இருப்பதாக ஒரு இழையில் பார்த்தேன்.உங்களைப் பற்றி வந்து சொல்லுங்கள்.எனக்கு நேரம் கிடைக்கும்
பொழுது நானும் வந்து கலந்து கொள்கின்ரேன்.
அன்புடன்
காயத்திரி

ஹாய்! ரொம்ப சந்தோசமாய் இருக்கு,
நமது சொந்தங்களை பார்க்கும்போது,யோகராணி அன்ரி நானும் சாவகச்சேரிதான்,என்னைவிட ரொம்பவயது கூட so aunty என்று கூப்பிடலாம் தானே,
நீங்கள் விரும்பினால் உங்க mail id தரலாம்......
நான் இங்கு வந்து 2வருடங்கள்,தற்சமயம் நாங்க இரண்டு பேரும்தான், இப்ப தான் உங்க post பார்த்தனான்,கொஞ்சம் busy அப்புறம் வரட்டுமா..... bye,

எனது சொந்த நாடு இலங்கை . நான் இப்போது ஜேர்மனியில் வசிக்கிறேன் இங்கு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் நீங்கள் நல்லுரிலா
ஆசிரியர் பயிற்சியை முடித்தீர்கள் நான் கொழும்பில் செய்து முடித்தேன்,எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் அறுசுவையில் இலங்கையை சேர்ந்த நண்பிகள் பலர் இருக்கிறார்கள் அத்துடன் இந்திய நண்பர்கள் நண்பிகள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள் ஆகவே நீங்கள் எல்லோரிடமும் பழகலாம்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் தர்சி!நீங்களும் சாவகச்சேரியா,மிகவும் சந்தோசம்.எனது E.மெயில் ID
நீங்கள் தாராளமாக அன்ரி என்று கூப்பிடலாம்.கனடாவில் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்?மெயில் போடவும்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் துசியந்தி! நான் நலம், நலமே நல்குக.உங்களை எல்லாம் இங்கு சந்திப்பது மிகவும் சந்தோசம்.தமிழ் பேசும் எல்லோரும் எம் சொந்தங்கள் தான்.எனவே எல்லோருடனும் பழகலாம்.
நான் குடும்பத்துடன் இங்கு இருக்கின்றேன்.எனது சொந்தங்கள் சிலர் ஊரில் இருக்கின்றார்கள்.உங்கள் நிலை எப்படி??

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்