ஆரோக்கிய உணவு (Healthy food)

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்;

1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.

உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.

உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.

உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

Comments

this page is really very good,now i am pregnant,
what type of food is good for me,and what type of foods have folic acid,fibre,proteans ,b12 etc.
now i am in abroad,so if you give this information,its really very helpful to me.

Hi Suba... Garbama irukkumbodhu avasiyam yeduthukka vendiyadhu maadhulai, orange juice, niraya dhaaniyangal. Mukkiyama pachchai payiru molai katti dhinamum 2 table spoon serthukkonga. Idhu ungalukku normal delivery aagha romba udhavum. Kottai vaghaighal yellaamae yeduthukkalaam (Except kollu. Yaenna adhu soodu.) Udambu ushnaththai adhighamakka koodiya yedhuvum serkaadhinga. Chicken serkalaam, but after 3 months. adhuvum alavaa serkanum. Yaenna chicken'la niraya protien irukku, but konjam soodu. Egg serthukkonga dhinamum. Idhudhaan yenakku therinjadhu, yen anubavam.... yenakku 3 months munnadi dhaan kuzhandhai pirandhirukkaa. All the best. Yedhaachum serkalaama venaamaannu sandhegham irundhaa kandippa kelunga, solraen.

Anbudan,
Vanitha

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உபயோகமான நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க முடிஞ்சா தமிழுக்கு மாத்திடுங்க ஏன்னா இந்த பிரக்னன்சி டிப்ஸ் தமிழ் மொழில பாத்து பயனடைறதுக்கின்னே எனக்குத்தெரிஞ்சு நெறயா பேர் வராங்க [என்னப்போல] கோச்சுக்காதீங்கோ நண்பி

Nichayam seighiraen. Satru nerm vendum.... ;) naan indha thalathirku pudhidhu, tamil'la karuthu therivikka innum pazhaghala. Adhaan vazhakkampola namma thanglish... viraivil kaththukittu potudraen. Ungal aalosanaikku manamaarndha nandri.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சுபா & சுரேகா... கர்பமா இருக்கும்போது அவசியம் எடுதுக்க வேண்டியது மாதுளை, ஆரன்ஞு ஜுஸ், நிரைய தானியங்கள். முக்கியமா பச்சை பயிர் மொலை கட்டி தினமும் 2 மேஜை கரன்டி சேர்த்துக்கோங்க. இது உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆக ரொம்ப உதவும். கொட்டை வகைகள் எல்லாமே எடுத்துக்கலாம் (கொள்ளு தவிர). ஏன்னா அது சூடு.) உடம்பு உஷ்னத்தை அதிஹமாக்க கூடிய எதுவும் சேர்க்காதிங்க. சிக்கன் சேர்க்கலாம், ஆனா 3 மாசத்துக்கு பின். அதுவும் அளவா சேர்க்கணும். ஏன்னா சிக்கன்'ல நிரய ப்ரோடின் இருக்கு, ஆனா கொஞ்சம் சூடு. முட்டை சேர்த்துக்கோங்க தினமும். இதுதான் எனக்கு தெரிஞ்சது, என் அனுபவம்.... எள் சேர்காதிங்க. நிறைய பால் சேருங்க. ஊருகாய் ருசியா இருக்கும்... ஆனால் அதிகம் சேர்திடாதிங்க. பி.பி. ஏரிடும். ரத்த விருத்திக்கு தேவையான எல்லா பழங்களும் நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

You mentioned to drink orange juice, Please conform ORANGE or CHATHUKUDI Juice.

Jesus never fails

இரண்டுமே நன்று.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1. Orange juices without seeds
2. Pomegranate
3. Apple
4. green vegetables
5. Milk
6. Can eat Chicken on an average
7. Reduce red meat, it has high fat and colestral.
8. Fish is very very good, take it once in a week.

Take a 10 minutes walk every day

நிட்ஸி சொன்ன எல்லாமே சாப்பிடலாம். எனக்கு அக்கம்பக்கம் என அனைவரும் கூறியது இதுதான்.
1.தினமும் ஆரஞ்சு ஜூஸ்(சர்க்கரை சேர்க்காதீங்க)
2.மாதுளை முத்துக்கள்
3.பெரிய நெல்லி சாப்பிடலாம். முடிந்தால் தினம் ஒன்று. 6ஆப்பிளின் சத்து உள்ளதாம்.
4.கீரை சேருங்கள், வாரம் ஒருமுறையாவது முருங்கை கீரை.
5.தினமும் ஏதோ ஒரு பருப்பு வகை. முளைகட்டிய பயிர் நலம்.
6. 5,7,9 மாதங்களில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளித்து பால்கஞ்சி வைத்து சாப்பிட வேண்டும்.
7.சாரணவேர், சீரகம் சேர்த்து கஷாயம் குடிக்கலாம்.
8.கால் வீங்கினால் பார்லி தண்ணி குடிக்கலாம்.

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

I'm a new user and i'm very happy to meet u all. i read this article and related replies from the users. all r very useful to pregnant people.

and i would like to ask about me, i'm suffering from severe peptic ulcer(stomach ulcerpain) for the past 6 years anybody knows the solution , please tell me the food to follow, i know tamil but i don't have the tamil font ,i mailed in english version .
please give some suggestions.
thank you
Kosheka

Nisha Rohit

Hi Kosheka! I read about ur Stomach Ulcer problem and found a solution for ur food plan.
If u can please visit the following web link for ur problem. They guarantee u a natural way to get rid off ur pain.They have given a simple snack and meal plan.
http://www.greattastenopain.com/painfree/default.asp

Nisha Rohit

அன்பின் அறுசுவை தோழியற்கு,
எனக்குத் தெரிந்த ஒருவர் தன் உடம்பு மெலிவதற்காக தேயிலைத்
தண்ணீருக்குள் தேசிக்காய்ச் சாறு விட்டுக்குடிக்கின்றார். ஒரு நாளைக்கு இரண்டு,மூண்று தடவை குடிகின்றாராம்.
இது உடலுக்கு நல்லதா? தேசிக்காயில் ஒருவித அசிற்றும், தேயிலையில் ஒருவித நச்சுப் பொருளும் உள்ளதாகக் கேள்விப்ப ட்டிருக்கின்றேன்.எனவே இவ்விரண்டு பொருட்களும் ஒன்று சேரும் பொழுது உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாதா?என்று விபரம் தெரிந்தவர்களிடம் விளக்கம் அளிக்கும் வண்ணம் தயவு செய்து கேட்டுக் கொள்ளுகின்றேன்.

karpamaga yenna seiya vendum. yenaku marriage mudinthu 9month mudinthu. but ennum karpa maga vilai date 6,7 nall thali pokuthu yen yentu theriyala . atharku udal rithiya ethavathu problema udal arokiyathukum ethukum yethavathu thodarpu eruka. please sollunga. appadi karpamaga nan yenna seiya vendum. sapadil yethavathu speciala serganumma. thinamum yenna vagaiyana sappadu yeduganum ungaluku therintha sollunga .yentha vithamana food sapdanum.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் எனக்கு இன்னும் குழ்ந்தை இல்லை.டாக்டரிடம் செக் செய்ததில் செமென் அளவு மிக குறுகிய அளவே கனப்ப்டுவதக தெரிவித்தர். எந்த உணவு உன்னுவதனால் இதை சரிப்ப்டுதலாம். நன்றி.

soniya,
nam udal 2 vagaiyaaga pirikalaam, onru ushnam iyalbileye irukum udal aduthadhu kulirchi migundha udal thanmai. Idil neengal endha vagai endru kandariyungal mudalil.eduthukaatirku sila per poo thalaiyil vaithavudane vaadi karugi pogum avargal ukarndha idam romba soodaga irukum appadipattavargl ushnam adigam udalil petra thanmai ullavargal,avargal eppoludhum pazha vagaigal undal konjam naan ushnathai kuraikalaam,neengal ungal dietil keerai,chicken,dates,ellu,sweets,mudhaliyavatrai kuraithu alladhu saapidaamal 1 month paarungal niraiya pazha vagaigal saapidavum ,paal kudikavum ,niraiya nuts saapidavum,mukkiyamaaga wheat ungal dietil serkavendum ,wheat dosai,upma ponru saapidavum .Maida ravai romba serka koodadu,dinam oru orange,apple, ponra kulirchi tharum pazhangal saapidungal, niraiya thanner kudiyungal,eppoluthum makilchiyaaga irungal,Thayiruku badilaaga Moru kudiyungal. idai try panni paarungal piragu seekiram vishesham varum .

Good Sleep.
Eat vegetables and fish
Morning Take atleast one fruit juice
Simple Excercise like walking

Hai vanitha madam , i am astam ennau tamil type sayiya thyreavillai, so plz request,
i am pregnant in 4 months eat food list and calcium foods pls refer. i like your message then other things i eat plz your gaidens i am waiting your results.
WISH YOU ALL SUCCESS
astam jai

WISH YOU ALL SUCCESS
astam jai

அன்பின் சகோதரிகளே வணக்கம்
அன்பின் சகோதரிகளே வணக்கம்
எனது இடது பக்கக் கை கொஞ்ச நாளாக ஒரே நோவாகவும் நடுக்கவுமாக இருந்தது. இரவில் உறங்கவும் முடியாதளவுக்கு வலி டாக்டரிடம் காட்டிய போது இது பக்கவாதத்துக்கு அறிகுறி என்று மருந்து தந்தார்.இப்போ இடது காலின் பாதம் ஒரு விறைப்புத் தன்மைய்யாக இருக்கின்றது. அது மட்டுமல்லாது பாதம் வீங்குவதும் வத்துவதுமாக இருக்கின்றது.சில சமயம் இருந்துவிட்டோ கிடந்துவிட்டோ எழுந்து காலைக்கீழே வைத்தால் பாததின் மேல் பகுதி ஒரே நோவாக இருக்கின்றது. எனக்குப் பயமாகவும் உள்ளது.எனவே இதற்கு என்ன செய்யலாம் என்று ச்கோதரிகளின் அறிவுரைகளை எதிர் நோக்கியுள்ளேன்.

நல்ல கருத்துக்கள் ....தொப்பை குறைக்க என்ன வழி??? கொஞ்சம் விளக்கம் தாருங்கள் .....plzzzzzzzzzzzzzzz

எனது உடல் நிறை வயசுக்கேற்றாற் போல் இல்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்.

I have High blood pressure for last 6 months. May I take Fish in my Diet? Please yaraavadhu padhil sollungalen..!!!!

hello all arusuvai members i am raj

my age is 22
my height is 160
weight is 50

i want to increase my height and weight .how?
any solution. please

please anybody reply me

thanks for registering. Arusuvai webpage is quite interesting. hope will find and give many tips.

am a new user for this page.so nice web page.

--

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

நான் 5 மாதம் கர்ப்பமா இருக்கேன்,எனக்கு அன்னாசி பழம் சாப்பிட ஆசையாக உள்ளது சாப்பிடலாமா? தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் தரவும்,நன்றி...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

ஆசையா இருந்தா கொஞ்சமா சாப்பிடலாம்னு என் டாக்டர் என்னிடம் சொன்னார். ஆனாலும் நான் பயத்தில் சாப்பிடலை. ஏன் விபரீதம். குழந்தை பிறந்ததும் நிறைய சாப்பிட்டுக்கோங்க

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கொஞ்ச நாளைக்கு ஆசைய கட்டு படுத்திட்டு நீங்க சொன்னமாதரி இருக்கிரேன், பயத்தோட சாப்பிட வேண்டாமென்று தோனுது,thenks again.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

hi,
na 167 cms,48kg irruken. yenathu vayathu 22. yevvalavu sapittalum udambu yerave matenguthu,romba lean a irruken,nan hostel la irundhu velaikku porathala intha problem irukuma?..sappida ve pidikka matenguthu, akka ithukku oru valiu sollungalen

--

M.Fathima john
dxn mem id:-141071282
e-mail:-dxnmohamedali@gmail.com
unitedarab emirates dubai (alain)