சிம்பிள் பாகற்காய் பொரியல்

தேதி: April 14, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (6 votes)

 

பாகற்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து


 

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணியில் சிறிது உப்புடன் போட்டு கொஞ்ச நேரம் வைத்து விட்டு நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
இந்த கழுவிய பாகற்காயுடன் தேவையான அளவு உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை போட்டு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், பிரட்டி வைத்திருக்கும் பாகற்காயை போட்டு வதக்கவும்.
முக்கால் பாகம் வதங்கியதும் எடுத்து வைத்து விட்டு, அதிலேயே கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஏற்கனவே வதங்கி வைத்திருக்கும் பாகற்காயையும் போட்டு மிதமான தீயில் இரண்டும் ஒன்று சேர வதங்க விடவும்.
பிறகு அடுப்பை விட்டு இறக்கி விடவும்.
இது சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


வறுத்து எடுத்த எண்ணெய் அதிகம் இருப்பது போல் தெரிந்தால் சிறிது எடுத்து விட்டு வெங்காயத்தை வதக்க போடவும்.

மேலும் சில குறிப்புகள்