நம்ம வீட்டு கல்யாணம்

அன்பு தோழிகளுக்கு வணக்கம் தோழிகளின் கல்யாண அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிரேன்

சொல்லலாமே.... சந்தோஷமான காலத்தை மீண்டும் ஓட்டி பார்க்கலாம் கண் முன்னே..... ;) எனக்கு நிச்சயமாகி 1 மாதத்தில் திருமணம். என்னவர் பாஸ்போர்ட் விஷயமாக பேச வேண்டும் என்று ஏமாற்றி என்னிடம் பேச ஆரம்பித்தார். :D 1 மாதம் திருமணத்துக்கு முன் தொலைபேசியில் பேசியது தான் எங்கள் நட்பு.

திருமணத்துக்கு முன் நாள் நான் மண்டபம் போகும் வரை மாப்பிள்ளை வீட்டர் வரவில்லை. நான் என் ரூமில் இருந்த போது "வந்துட்டார் மாமா" என்று என் தங்கையின் தோழி ஓடி வந்தார்.... அப்போ அரம்பிச்சது ஒதரல்..... சும்மா உங்க வீட்டு பயம் எங்க வீட்டு பயமில்ல.... அவரும் எனக்கு SMS அனுப்பி இருக்கிறார்.... மேடையில் mobile எல்லாம் கூடாது என்று நான் உள்ளே வைத்து விட்டேன். அலங்காரம்.... நான் பொதுவா பவுடர் கூட பயன்படுத்த மாட்டேன்..... அப்படி தான் அன்றும் சாதாரனமாக தலை சீவி பூ வைத்து பட்டு உடுத்தி நின்றேன்.... மாப்பிள்ளை அக்கா என்னை பார்த்து இப்படியா வந்து நிக்க போர???? உன்ன விட நாங்களே அலங்காரம் அதிகமா செய்திருக்கோம்'னு சொல்லும் அளவில் தான் இருந்தது என் மேகப். மேடைக்கு போன நேரத்தில் இருந்து ஒரு முறை கூட அவர் என்னை பார்த்து சிரிக்கவோ, பேசவோ இல்லை.... பயம் இன்னும் அதிகமா போச்சு!!!! ஒரு வழியா பயந்துகிட்டே அந்த reception முடிந்தது.

மறு நாள் கல்யாணம்.... அன்றும் இவர் பேசவில்லை.... பயம் பயம் அப்படி பயம் எனக்கு. தலைவர் கையில் கங்கன கயிறு 3 முடி போட சொல்லி ஐய்யர் சொன்னா, 4 முடி போட்டார்..... சிரிப்பு வந்துட்டுது எனக்கு. தாளியாது 3 முடி போடுவாரா, இல்லை அதுவும் ஸ்ட்ராங்கா 4 போடுவாரானு யோசிச்சேன். மனுஷன் 3 தான் போட்டார் (காரணம் ஐய்யர் கூடவே இருந்து எண்ணிட்டார் ;)). கல்யாணமும் முடிஞ்சுது.... சாப்பாடு கூட உள்ள போகல.... வாழ்க்கைல வனிதா ரொம்ப பயந்த நாள் அந்த 2 நாள் தான். ம்ம்ம்.... ஒரு வழியா ப்ளாஷ் பேக் முடிஞ்சிதுப்பா.

கல்யாணத்தன்று ஏன் என்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசல, சிரிக்கலன்னு கேட்டா 2 நாள் கழித்து சொல்றார்... நான் reached mandabam'nu SMSஅனுப்பினேன், நீ பதில் அனுப்பலன்னு எனக்கு கோவம்'னு. அன்னைக்கு ஆரம்பிச்ச டிஷூம் டிஷூம்.... இன்னைக்கும் தொடருது... ;) அதே சின்ன பிள்ளை தனத்தோட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா உங்களது திருமண அனுபவங்களை பகிர்ந்துகொண்டதர்க்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எங்களுடைய திருமணம் arrange marriage என்றே சொல்லலாம்.நான் college final year படிக்கும் போது முதல்ல பார்க்க வந்த வரனே எனக்கு முடிந்து விட்டது(அது ஒரு சுவராஸ்யாமான விஷயம்.)examக்கு படித்து கொண்டிருக்கும் போது பெண் பார்க்க வந்தார்கள் என்னவரின் பெற்றோர்,அக்கா.என் வீட்டில் என் அப்பாவின்friend என்று சொல்லிதான் அழைத்து சென்றார்கள்.இரண்டு குடும்பத்திர்க்கும் பிடித்து போய் கல்யானம் பேச ஆரம்பித்தார்கள்.இவ்வளவு விஷயமும் எனக்கு அரசல் புரசலகாவே தெரிந்தது(உண்மையாகவே...)சிதம்பர ரகசியம் போல ரகசியமாகவே வைத்திருந்தார்கள் என் வீட்டில்.எல்லாம் conformஆன பின்பு,என் அப்பா என்னிடம் இவரைபற்றிய விபரம் அனைத்தும் கூறி உனக்கு okனா நான் போய் பேசுகிறேன் என்றார்.நானும் வழக்கம்போல எல்லா பொண்ணு மாதிரி உங்க இஷ்டம் பா என்று சொல்லிவிட்டேன்:).பிறகு engagement தடபுடலாக நடந்தது,அன்று என் மாமியாரிடம் அவர் சில gift குடுத்து விட்டார்.8 மாதம் பிறகு marriage என்று முடிவானது.final year collage lifeஎன்பதால் jollya போச்சு,engagement பிறகு நடக்கும் இனிமையான நிகழ்வுகளும் jollya போச்சு.திருமணம் நெருங்க நெருங்க 2tension ,அதை நான் அப்புறம் பதிவு செய்கிரேன் என் பொண்ணு தூக்கத்திலிரிந்து எழுந்து விட்டாள்.சாரி தடங்களுக்கு மன்னிக்கவும்:).

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஆஹா நல்ல தலைப்புடன் புது தளத்திற்க்கு வந்திருக்கும் shariz தோழியே...
நலமா....?உண்மையிலேயே சுவாரஸ்யமாக போகும் இந்த பகுதி.
அந்த நாளை நினைத்து பார்க்க யாருக்கும் கசக்குமா என்ன..?
உங்க கல்யாண சுவாரஸ்யத்தை சஸ்பென்சோட விட்டுட்டீங்களே shariz...
மீண்டும் வந்து மிச்சத்தையும் சொல்லுங்க சரியா....

ஹாய் வனிதா........,
எப்படி இருக்கீங்க..?குழந்தைகள் நலம்தானே..?
நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நல்ல தலைப்பு மூலம் பேச போகின்றோம் இல்லையா வனி...
உங்கள் சுவாரஸ்யமான கல்யாண அனுபவத்தை அழகா சொல்லிட்டீங்க.
கண்ணுக்கு நேரா பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங் வந்துடுச்சு.
அந்த பயந்து போன வனி முகம் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சு பார்த்து சிரிக்கிறேன்.(ஹீ....ஹீ....ஹீ...திட்டாதீங்க...)
எங்கே மற்ற தோழிகளை காணும்.வந்து சொல்லுங்கப்பா....
நானும் பிறகு வந்து பகிர்ந்து கொள்கிறேன் சரியா....
அய்யோ....இப்ப எனக்கு நினைச்சா வெக்க வெக்கமா வருது....
அப்புறம் வாரேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் சோஹாரா(க்ரெட்டா பேர் போட்டு இருக்கேனா) எப்படி இருக்கீங்க?தலைப்புக்குள் வந்ததும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலேவந்ததே என்று பாட தோனுது...

நீங்க திருச்சியா? நானும் திருச்சி தான்.
வசிக்கும் நாடு துபாய் ரெமப் நெருங்கிட்டோம்.நான் அபுதாபி,
(அப்சரா உங்களுக்கு ரெம்ப பக்கமா இருக்காங்க)

கிராப்ட் வொர்க் எல்லாம் அனுப்பி வைங்க,நாங்களும் கத்துக்குவோம்.

எனக்கு நினைத்தாலே சிரிப்பு தான் வருது டைப் பண்ண வரலை.ஞாயிறு கிழமை வந்து சொல்றேன்

வனிதா நீங்க பயந்தீங்களா? நம்பவே முடியல..:)))பயந்த வனியை பார்த்தேன்,ரெம்ப சிரிப்ப அடக்க முடியல..டிஷூம் டிஷூம். கடைசி வரைக்கும் தொடரும் குட்டி குட்டி டிஷூம் டிஷூம் இல்லைன்னா நல்லா இருக்காதே,ஊடல் இல்லாமல் காதலா?இல்லவே இல்லை

அப்சரா நான் ரெம்ப ஆவலா இருக்கேன்,உங்க கதையை படிக்க..அப்சரா வெட்கபட்டு பார்த்ததே இல்லையே:)))அபுதாபி வந்ததால் நல்ல விஷயங்களை
மிஸ் பண்ணிட்டேன்:))உங்க கதை எனக்கு கொஞ்சம் தெரியும் இருந்தாலும் கண் முன்னாடி கொஞ்சம் நிறுத்தங்க, அண்ணனையும் வம்புக்கு இழுக்க சான்ஸ் கிடைக்கும் அல்லவா:))))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் அப்சரா
நல்லா இருக்கிங்களா, உங்களது UAE தோழிகள் சந்திக்கும் பற்றிய plan சூப்பர். அதில் பதிவு போட நினைத்தேன் ஆனால் அதற்குள் அருசுவை தோழி விடுப்பு எடுத்துக்கொண்டாள். நானும் துபாய் தான் இன்ஷா அல்லாஹ் அருசுவை தோழிகளை சந்திக்க நான் ரெடி.தலைப்புக்கு வருவோம்.சாரிபா என் பொண்ணு தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டால் அதனால் தான் தொடர முடியவில்லை.ஓகே தொடருவோம்...........
2 tension என்று சொன்னேன் அல்லவா 1)என்னுடைய final semester exam (exam முடிந்து 2 நாளில் கல்யாணம்)2) நான் யாரிடமும் ரொம்ப பேசமாட்டேன்(ஆனால் பழகிவிட்டால் அவருக்காக என்ன வேன்டுமாணாலும் செய்வேன் அது வேற விஷயம்). நான் என் கணவருடன் கல்யாணத்திற்கு முன்பு பேசியுள்ளேன் இருந்தாலும் பயம்.ஒரு வழியாக exam முடிந்தது. நல்லா சந்தோஷமா போய் கொண்டிருந்தது.ஆனால் கல்யாணத்திற்கு 2 நாள் முன்பு என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை.ரொம்ப சீரியஸ்.வீட்டில் எல்லாம் சோகமயம்.எல்லோரும் அழுதுகொண்டெ தான் இருந்தோம் அப்புறம் என் பெரியம்மா எல்லோரையும் சமாதானம் செய்து மண்டபத்திற்கு அழைத்து சென்றார்.யாருடைய முகத்திலும் சிரிப்பு இல்லை ஆனால் என் முன்னால் மட்டும் சும்மா பேருக்கு சிரிப்பார்கள்.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது.பல தடங்களுக்கு பிறகு திருமணம் நல்ல படியாக முடிந்தது.வனிதா சொன்னதை போன்று நானும் எந்த makeupம் கல்யாணத்தன்று போடவில்லை.அது ஒரு காமெடி கலந்த விஷயம்.engagementஅன்று எனக்கு அலங்காரம் செய்கிறேன் என்ற பெயரில் makeup எல்லாம் overaகி விட்டது அதனால் வீட்டில் marriageஅன்று ban செய்து விட்டார்கள்.திருமணம் முடிந்ததும் எங்கள் வீடுகளில் மணப்பெண்ணை கணவர் தூக்கி கொண்டு carக்கு செல்ல வேண்டும்.என் கணவர் யாரும் எதிர்பாராத வண்ணம் என்னை தூக்கிகொண்டு சென்று விட்டார்.எல்லோருக்கும் ஒரே பயம் எங்கே கீழே போட்டுவிடுவாரோ என்று.but romba safe aa என்னை கூட்டிச்சென்றார்.எல்லோரும் சோகத்தை மறந்து ஒரே சிரிப்பு மழை தான். அன்று அதை என்னால் மறக்கவே முடியாது.இப்போ நினைத்தாலும் சிரிப்பாச்சியா வருது.என்னுடைய அனுபவத்தை கூறிவிட்டேன் அப்சரா உங்களுடைய இனிமையான அனுபவம் எங்கே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hai renuka
என்னுடைய பெயரில் கொஞ்சம் திருத்தங்கள் சொல்லலாமா.....
சொஹரா
அப்புறம் நீங்களும் திருச்சியா கேட்கவே இனிமையாய் இருக்கு நான் holy cross schoolல் படித்தேன் நீங்கள்..........
உங்களுடய abudhabi get together பற்றி படித்து ரசித்து இருக்கிரேன்....ஆனால் அந்த threadல் பதிவு போட முடியவில்லை becoz pregnant,delivery எல்லாம் முடிந்து இப்போதான் அருசுவையில் கொஞ்சம் எட்டி பார்க்கிரேன்.உங்கள் பையன் நல்லா இருக்காரா.தளிகா எப்படி இருக்காங்க.உங்கள் திருமண அனுபவத்தை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் சொஹரா இப்ப கரெட்டா(சாரி முதல்ல கொஞ்சம் சொதபிடுச்சு)உங்க கதை சூப்பர்
அப்பவே கால் வலிக்க நடக்க விடாமல் உங்கள் அவர் தூக்கிவிட்டார்..

வாவ் நானும் ஹோலி கிராஸ் தான் நீங்க எந்த வருடம் நான் 95 லிருந்து 2002 வரைகேட்கவே சந்தோஷமா இருக்கு,ஹோலி கிராஸில் படித்த ஒருவரை இங்க பார்ப்பேன் என்று நினைக்கல..

கெட் டு கெதர் படித்தீங்களா? அது அவசரமா நடந்தது.மறக்க முடியாத அனுபவம்..

தளிகா ஊருக்கு போறதுக்கு முன்னாடி பேசினேன், குட்டி பையன் பேசவே விடலை.அதுக்கு பிறகு பேசமுடியல. நான் என் அனுபவம் இன்னிக்கு நைட் அல்லது ஞாயிறு அன்று போடறேன்

திருச்சியில் நான் உறையூர், நீங்க எங்க?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சாரி எல்லாம் எதற்குபா ....
நீங்க என்னுடைய junior நான் 2001ல் முடித்துவிட்டேன். நான் commerce group நீங்க????????
என் வீடு பெரிய கடை வீதியில்.ஆனால் என் பெரியம்மா சித்தி வீடு எல்லாம் உறையூர்.என் மாமியார் வீடு தென்னூர். நான் jamal mohammed collegeல் படித்தேன்.என்னுடய mail id தரத்துமா

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் தோழீஸ் எனது திருமணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லி கொண்டே போகலாம். சரி உங்களுக்காக சுருக்கமா சொல்ரேன். எனது திருமணம் காதல் திருமணம் தான். திரைபடத்தில வரும் கதை போல தான், முதலில் எதிர்ப்பு அப்புரம் ஓகேனி சொல்லிடாங்க. 4வருடம் காதிலித்தோம். அப்புரம் திருமணம் செய்து கொண்டோம். வழக்கமா சினிமால வரும் சண்டை எல்லாம் இங்கு நடக்கலா. ஆனால் நான் இந்து அவங்க கிறிஸ்டின் அந்த ஒன்னு மட்டும் தான் பிரச்சனை. அப்புரம் என்ன எங்க வீட்டில கொஞ்சம் விட்டு கொடுத்து நான் கிறிஸ்டீன்னாக மாறி எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடியும் வரை எனக்கு நிம்மதியே இல்லை. எப்பம் என்ன பிரச்சனை வரும் என்று நினைத்து கொண்டே இருந்தேன், ஏன் என்றால் எங்க குடும்பத்தில இருந்து நிறைய பேரின் பேச்சி வார்த்து வளர்ந்து கொண்டே இருந்து, அந்த பயம் தான். ஆனால் கடவுள் புன்னியத்தில எங்க வீட்டார் கொஞ்சம் விட்டு கொடுத்து திருமணம் நன்றாக முடிந்தது. என்ன கக்ஷ்டம்னா. ஒரு மாதம் முன்பே தினமும் வகுப்பு நடத்தி கொன்னுடாங்க, அதில வேர பரிச்சை எல்லாம் போடுவாங்க. எல்லாம் பாஸ் பன்னிட்டு, என் திருமணத்தன்று காலை தான் ஞானஸ்தானம், புது நன்மை எடுத்து காலை 10.30க்கு திருமணம் நடந்து முடிந்தது. தாலி என் கழுத்து ஏறிய பிறகு தான் நான் நிம்மதியா பெரு மூச்சி விட்டேன், இதில வேர என் திருமணத்துக்கு 10நாள் முன்னாடி தான் என் கனவர்( காதலன்) ஊருக்கே வந்தார். அதனால் தான் அதிக பயம். அவங்க இருந்தாலாவது எது நடந்தாலும் அங்கு அவங்க பார்த்துபாங்கனி சொல்லலாம். அவங்க இல்லாதது எப்பம் குட்டையா குழப்புவாங்கனியே இருந்து. ஒரு பெரிய யுத்ததில் வெற்றி பெற்றது போல் இருந்து. திருமணம் முடிந்த 10நாள் தான் என் கனவர் என் கூட இருந்தார். உடனே அவர் வெளிநாடு சென்று விட்டார், அவர் வெளிநாடு சென்ற உடன் நான் என் அம்மா வீட்டுக்கு போய்விட்டேன். அதன் பிறகு 3மாதம் முடிந்த பிறகு என் கனவருடன் வந்து சேர்ந்தேன். அப்படா ஒரு பெரிய கதைய சுருக்கமா சொல்லி விட்டேன். எல்லாரும் புரிந்து இருக்கும்னி நினைக்கிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்