வினாடி வினா

1.ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும்,உயரமானதுமான பாலம் எது?எங்கிருக்கிறது?

2.உலகிலேயே தங்கும் வசதியோடு கட்டப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?

3.இலண்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையை போன்ற அமைப்பில் நம் இந்தியாவிலும் ஒரு அரண்மனை கட்டப்பட்டது.அது யாரால் எங்கு கட்டப்பட்டது?

2. உலகின் முதல் பல்கலைகழகம் "நாளந்தா பல்கலைகழகம்".பல இடங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயின்றார்கள்.
3. Chamaraja Wodeyar பெங்களூரில் கட்டிய Bangalore Palace.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நலமா திவ்யா?

இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்..
முதல் கேள்விக்கும் விடையை யோசியுங்கள் :-
நன்றி நல்ல பதிலுக்கு...:-
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்புடன் இளவரசி! நல்லதொரு திரி தொடக்கி உள்ளீர்கள்,பாராட்டுகின்றேன். எல்லோரும் பங்கு பற்றி பயன் பெற வாழ்த்துக்கள்.
முதலாவது கேள்விக்கு பதில்>
டொன்கி பாலம் (Donghai Bridge) இது சீனாவில் உள்ளது.
நான் அறிந்த மட்டில்.
தவறு என்றால் சரியான பதிலை யாரும் வந்து சொல்லுவார்கள்.நானும் அறிந்து கொள்வேன்.
நன்றி அன்புடன் யோகராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நலமா இருக்கீய்ங்களா?

நல்ல முயற்சி...ஆனால் நீங்கள் சொல்லியுள்ளது கடலுக்கு குறுக்கே கட்டப்பட்டது..நான் சொல்வது ஒரு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது..இது நீளமானது மட்டுமல்ல உயரமானதும் கூட.......

மீண்டும் முயற்சியுங்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி இளவரசி இப்போது நேரமின்மையால் தொடர்ந்து இருக்க முடியலை.பதில் தெரிந்தால் மீண்டும் வருகின்றேன்.

என்பெயர் யோகராணி யுங்கோ

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இளவரசி mam,
Weihe Grand Bridge என்று நினைக்கின்றேன். chinna வில் உள்ளது.

kanyakumari maathhur bridge

majithazubair

இளவரசி! நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் பேசுகிறோம், சந்தோஷம் :) முதல் கேள்விக்கான பதில், மாஜிதா ஜுபைர் சொன்ன அதே பதில்தான்! க‌ன்னியாகுமரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ "மாத்தூர் தொட்டில் பாலம்".

வாழ்த்துக்கள்.....
சரியான பதில் சொல்லியிருக்கிறீர்கள்
மாத்தூர் தொட்டி பாலம் சரியான விடை
மிகவும் அழகான இடம்....
நல்ல பதிலுக்கு நன்றி
அஸ்மா நலமே..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

1.உலகின் வைர தலைநகரம் எது?
2.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
3.ஆஸ்ட்ரிச்,எமு,கிவி இந்த மூன்று பறவைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

வினாக்கள் எல்லாவற்றுக்கும் எதையும் ரெஃபர் செய்யாமல் உங்களால் சொல்ல

முடிந்தால் அதுதான் உங்கள் பொது அறிவுக்கு கிடைத்த வெற்றி...

ரெஃபர் செய்து சொன்னால் ...அது ..உங்களின் பொது அறிவுக்கு இனிமேல் கிடைக்கப்போகும் வெற்றிக்கு அடித்தளம்....:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்