சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ??!!

வந்துட்டேன் வந்துட்டேன்.... புது தளத்துக்கு புது தலைப்போடு வந்துட்டேன்!!! :) வாங்க வாங்க எல்லாரும் வாங்க.... புது தளத்தில் பல புது முகங்கள். பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.

என்ன தலைப்பு இதுன்னு சொல்லிடறேன்.....

நீங்க இப்போ வெளி நாட்டில் இருக்கலாம்....
பெண்கள் புகுந்த ஊர்'ல இருக்கலாம்....
ஆண்களோ பெண்களோ.... வேறு ஊருக்கு குடி போயிருக்கலாம்....

ஆனா எல்லாருக்கும் அவங்க சொந்த ஊர்னு ஒன்னு இருக்கும். அந்த சொந்த ஊர் பிடிக்காதுன்னு சொல்லும் மனிதர்கள்... ம்ஹூம்... வாய்ப்பே இல்லை!!! அப்படி உங்களுக்கும் மனசுல சொந்த ஊர் பற்றிய நினைவுகள் இருக்கும். கூடவே நம்ம இருக்கிறது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் ஆச்சே.... அப்படின்னா கூடவே உங்க ஊருக்குன்னு ஒரு தமிழும் நிச்சயமிருக்கும். அப்படி உங்க ஊர் நினைவுகளை உங்க ஊர் தமிழ்'ல அழகா சொல்லிட்டு போங்க. இலங்கை இலக்கிய தமிழ், மதுரையின் மனம் வீசும் தமிழ், திருநெல்வேலி தெவிட்டாத தமிழ், சென்னை செல்ல தமிழ்'னு அசத்தணும்....

சொல்ல வேண்டிய விஷயம் இது தான்...

" உங்க ஊர் சிறப்பு!!! உங்க ஊரில் உங்க மனசுக்கு பிடிச்சது!!! "

பட்டுன்னு வந்து நச்சுன்னு சொல்லுங்க!!!

வாங்க எல்லாரும்.... வந்து உங்க ஊரை பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க.... மற்ற ஊர் தமிழில் அவங்க ஊரை பற்றியும் தெரிஞ்சுக்கங்க. கிராமங்கள் பல பற்றி தெரியப்படுத்த, தெரிந்து கொள்ள இது தான் ஏற்ற இடம். வழக்கம் போல் உங்க பதிவுகளை போட சீக்கிரம் வாங்க.

என் ஊர பத்தி சொல்ல தோ வந்துனேகீறேன் !!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enunga vanitha,eppadi irukkeengo? unra veetla allarum sugama? ennaiya napagam iukkulla? enra ooru namakkallungo.muttaikkum,kozhi pannaikkum famousngo.enra oru jananga hardworkersnga.ippa enra ooru educationlayum muthalla vanthuttu irukkungo.enra orula anjaneyarum,namagiri thayarum arul palikkirango.enra orula kozhi pannaikku aduththatha lorry body buildingum mukkiyamana thozhilungo.enra oru NH7 la irukkungo.adanala kashmirlerunthu,kanyakumari vara alla vandiyum enra ora cross panniththan avanungo.enra oru pombalangakitta aravathu valattuna,thola urichchu poduvongo.(read the last line with nattamai-sarath kumar style)

nanre sey;athuvum inre sey.

வனிதா ரொம்ப நல்ல தலைப்பு பா,எங்க ஊரில் சிறப்பான தமிழ் என்னன்னு எனக்கு சரியா தெரியலை திருச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் சிறப்பா சொல்லும்படி ஒண்ணும் இல்லை என்றாலும் ப்ளைட்டிலிருந்து இறங்கும்போதெ பாரதிராஜா படத்தில் வரும் (நம்தந,நம்தந music தான்)ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஒட்டிக்கொள்ளும்....
அம்மா,மாமியாரின் கைமணங்கள், இலையில் சாப்பிடும் பிரியாணி தங்கச்சிகளுடன் அரட்டை அடிப்பது ஆஹா இப்படி ஊர் ஆசையை கிளப்பிவிட்டுடிங்களே.சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா :)

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் வனிதா அக்கா எப்படி இருகிங்க, உங்க குழந்தைகள் நலமா. உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சி. ஆஹா சூப்பர் தலைப்பு ஆனால் என்ன எங்க ஊர் நேம் மட்டும் விட்டு விட்டிங்களே. எங்க ஊர் தமிழ் மாதிரி அழகான கொஞ்சும் தமிழ் யார் பேசுவாங்க, லேசா மலையாளமும் தமிழும் சேர்ந்து பேசும் கொஞ்சும் தமிழ் எங்களால தான் பேச முடியும், ஹா ஹ ஹா. நானும் வெளிநாட்டில இருக்கிரேன். எனக்கும் ரொம்ப கக்ஷ்டமா இருக்கு, எப்பம் எங்க ஊர் போவேன் என்று. ஆனால் அந்த ஆசை இப்பம் நிறைவேரிச்சி.ஆனால் தற்க்காலியமாகதான். ஒரு மாதம் மட்டும் அந்த அழகு பூங்காவில், கொஞ்சும் தமிழிலை கேட்டு, அம்மாவின் கை வண்ணத்தில் சாப்டு. ஆஹா சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த ஒரு மாதம் மட்டும் சந்தோசமாக இருந்தேன். அதனால் தான் அருசுவை பக்கம் வர முடியல. வந்து பார்த்து யாரையும் கானும். அப்புரம் தான் விபரம் தெரிந்து. நான் போகும் போது எங்க ஊர் இருந்ததைவிட இப்பம் இன்னும் அதிகமாக முன்னேறி உள்ளது. நிறைய கடைகள் புதுசாக திறந்துள்ளது. இன்னும் அதிக மாரும் என்று கூறபடுகிரது. என்னடா பேசிடே போரா ஊர் பெயர் சொல்லவில்லை என்று பார்க்குரிங்களா. அதான் அருசுவைக்கே தெரியும்மே. நாகர்கோவில். ஒரு மாதம் மட்டும் இருந்ததால் என்னால் அதிக இடம் போக முடிய வில்லை. அங்கே இருக்கும் தோழீகள் இன்னும் அதிகம் சொல்லுவாங்க என்று எதிர்பார்க்கிரேன். ஹாய் நாகர்கோவில் தோழீஸ் வந்து அள்ளிவிடுங்க நம்ம ஊரை பற்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என் சொந்த ஊர் மடம் கிராமம். எங்க ஊர சுத்தி நிறைய மடம்'னு பேரு உள்ள கிராமம் இருக்கு. ஏந்தல் மடம்'னு சொன்னா எங்க ஊரை சரியா கண்டு பிடிச்சுடலாம்.

எங்க ஊருல எனக்கு புடிச்ச விஷயம்'னு சொன்னா நிறைய இருக்கு. இன்னுமே கிராமத்தோட தன்மை மாறாம இருக்குறதும் எங்க ஊருல எனக்கு புடிக்கும். சுத்தி பசுமை. ஊருக்கு நடுவுல ராஜ கோபுரம். ஊரோட ஒரு முடிவுல அழகான குளம். அந்த கொளம் தான் எங்க ஊருக்கு இத்தனை வருஷமா குடி தண்ணீ. தெனமும் காலைலயும் சாந்திர நேரத்துலயும் வயசு பொண்ணுங்க, பொட்டு பொடுசுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து கதை பேசிகிட்டு ஆளுக்கு ஒரு தவலய தூக்கிட்டு தண்ணி கொண்டு வர போவாங்க. இன்னைக்கும் அக்கம் பக்கம் யாருக்காது உடம்பு சரி இல்லைன்னா கேட்டு அவங்களுக்கும் சேர்த்து ஒரு கொடம் தண்ணி கொண்டு வந்து குடுக்கும் மனசு அங்க போகல. அது மட்டும் இல்லங்க... உடம்பு சரி இல்லாதவங்க அந்த வீட்டம்மா'வா இருந்தா சமையல் கூட செய்து கொண்டு வந்து குடுப்பாங்க எத்தன நாள் வேணும்'னாலும். பசுமையும், பம்ப்பு செட்டும், கொளமும், கோவிலும் எனக்கு எங்க ஊருல புடிச்ச விஷயம். ஊருக்கு போகும்போதெல்லாம் எல்லாரோடையும் சேர்ந்து நானும் கொளத்துக்கு போவேன், மத்தவங்க மாதிரி எனக்கு பெரிய கொடம் வைக்க தெரியாதுன்னு சின்னதா ஒரு பாத்திரம் தருவாங்க.... அதுலயே பாதி தண்ணிய கீழ ஊத்திட்டு வீடு வந்து சேருவேன். பம்ப்பு செட்டும் போகாம இருக்க மாட்டேன்.... நீச்சல் தெரியாது, போய் அங்க இருக்க தொட்டியில ஆட்டம் போட்டுட்டு, மத்தவங்க மேல இருந்து கெணத்துல குதிக்கிறது ஆ'னு பாத்துட்டு வீட்டுக்கு வருவேன்.

எங்க ஊரு சிறப்புன்னு சொல்ல நெறய இருக்கு. மொதல்ல எங்க ஊருக்கு மடம்'னு பேரு வந்த கதை. நான் படிக்கர காலத்துல மடம்'னு இங்க்லீஷ்'ல எழுதினா மேடம்'னு படிப்பாங்க. அப்போ என்னடா ஊரு பேருன்னு எனக்கே வருத்தமா இருக்கும். அப்போ வீட்டுல பேரு வந்த கதை சொன்னாங்க.... எங்க ஊருக்கு பெருசா ஒரு பேரு இருந்துதாம். திருவண்ணாமலை'கு யாத்திரை போறவங்க எங்க ஊருல தங்கி ரெஸ்ட் எடுக்க ஒரு மடம் கட்டிருக்காங்க. காலப்போக்குல மடம் ஊர் பேராவே போச்சாம்.

முதலாம் குலோத்துங்க சோழன் எங்க ஊருல மக்களுக்கு தண்ணி வேணும்'னு அந்த கொளத்த வெட்டினாராம். அவர் வெட்டினப்போ அங்க ஒரு லிங்கம் கிடைச்சுதாம். உடனே பிரம்மாண்டமா ஒரு சிவன் கோயிலை கட்டி அந்த சிவனை அங்க பிரதிஷ்ட பண்ணாராம். இப்படி தண்ணிக்காக கொளம் வெட்டும் போது கிடைச்சதால அவருக்கு ஸ்ரீ தடாகபுரீஸ்வரர்'னு பேரு. அழகான 7 அடுக்கு ராஜ கோபுரம், 88 தூணுங்க இருக்க வசந்த மண்டபம் (1000 கால் மண்டபம்'னு எங்க ஊர்ல சொல்லுவாங்க)... 100 வருஷத்துக்கு மேல கும்பாபிஷேகம் நடக்காம ரொம்ப பாழடஞ்சு போன கோபுரம், கோவில் எல்லாம் இப்போ அரசாங்கம் செலவு செய்து சரி செய்யுது.

இப்படி எங்க ஊருல மட்டும் இல்லைங்க.... எங்க ஊர சுத்தி இன்னும் பல கிராமங்கல்ல வரலாற்று சிறப்பு உள்ள பல வெளிய தெரியாம இருக்கு. தென்னாங்கூர் கோயில், செஞ்சி கோட்ட, ஆரணி பட்டு... இப்படி எங்க ஊருக்கு பக்கத்துல பேசபடக்கூடிய விஷயம் நெறய இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ராதா... நாங்க நலம். நீங்க எப்படி இருக்கீங்க??? உங்க ஊருக்கு நானும் வந்திருக்கேன். :) அந்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு ஒரு முறை. மனசுல இன்னும் இருக்கு அந்த அழகு. உங்க பதிவை பார்த்ததும் அது தான் நினைவுக்கு வந்தது. மிக்க நன்றி ராதா.. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சொஹாரா.... உங்க ஊரு திருச்சியா??? அழகான ஊர். நாங்க திருநெல்வேலியில் இருந்து என் சொந்த கிராமத்துக்கு காரில் வந்தால் இரவு தங்குவது உங்க ஊரில் தான். பல விஷயங்கள் நினைவுக்கு வருது... அறுசுவையில் ஏற்கனவே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மீண்டும் அந்த பதிவை போடறேன். மிக்க நன்றி. உண்மை தான் உறவுகள் இருக்கும் இடம் சொர்கம் தான்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Enathu sontha oor kumbakonam.ingu thirumbiya pakkam ellam kovil than. naanum en kanavarum ingulla kovilil muthalil paarthu thaan pinnar pazhakinom. ezhu varudangal love panni pinnar thirumanam.athvum kovilil than.enakku oru pen kuzhandai ullathu.en kanavar business man.

அன்பு சோனியா... நாகர்கோவிலா நீங்க??? நல்ல ஊர்'னு கேட்டிருக்கேன். நான் அந்த பக்கம் போனதில்லை அன்னா திருநெல்வேலியில் பல நாகர்கோவில் மக்கள் நட்பு உண்டு. உங்க தமிழ் நல்லா இருக்கும், நினைவு இருக்கு. ஆனா நிச்சயம் உங்க கொஞ்சும் தமிழ் எல்லா நகர்கோவில் மக்களுக்கும் வராதுங்க. அத்தனை மழலை தமிழ் உங்களுடையது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ராதா... கும்பகோனம்... இதுவரை வந்தது இல்லை. ஆனால் பார்க்க ஆசை. நிச்சயம் ஒரு முறை வருவேன். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்