குறள் விளையாட்டு

குறள் விளையாட்டு
அன்புடையீர்!
குறள் விளையாட்டின்றி அறுசுவையா

நாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.
நம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா?
இனி போட்டிக்கு வருகிறேன்.
நான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.
குறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.
இனி போட்டிக்கான குறள்:-

அகரமுதல எழுதெல்லாம் ஆதி.................

அடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.
அடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.
நன்றி கிளம்புங்கப்பா.

குறள் விளையாட்டு தொடங்கியுள்ளது மிகவும் அருமை ...என்னருமை தமிழ்ப்பெண்ணே யோகராணி....வாழ்த்துக்கள்

2 வது அடி ---பகவன் முதற்றே உலகு......

அடுத்த குறளின் முதல் அடி

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாழ்த்துக்கு நன்றி இளவரசி

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
கருத்து=
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்.....................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யனப் பெய்யும் மழை

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையேத் தொழுதிடும் மனைவி பெய்யென ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கி பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவனாவான்.

யோகராணி, பாட்டுக்கு பாட்டு இழையை விடுத்து இதனை துவங்கியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லை இல்லை.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் ..........

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்.......................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

kadaleponra kaama noyaal varuthamadaintha pothum,madaleramal,than thuyarathai poruthirukum pennaiponra perunthakuthi aanuku illai.

kadaleponnra kaama noyal noyutra pothum,madaleramal,than thuyarai
poruthirukum pennai ponra perunthakuthi anuku illa.

"ezhivarinthu unbankan inbampol nirkum" this is start up for next kural

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்..................?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

"Natpirku veerrirukkai yaathenil kotpinri
ollumvaai uundrum nilai"
Natpu enbathu nilaiyaga thangiirukum idam yathenil,manamaarupadu illamal mudintha idamellam enaithu nindru kaathu penum nilai.
"kaathal avarilar aaganee" thodarungal friends.hi yogarani,how r u?neenga enga irukeenga?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து.......

ஹாலோ gokimohan! எப்படி இருக்கீங்க.நான் நோர்வேயில் இருக்கேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்..............

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்