குறள் விளையாட்டு

குறள் விளையாட்டு
அன்புடையீர்!
குறள் விளையாட்டின்றி அறுசுவையா

நாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.
நம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா?
இனி போட்டிக்கு வருகிறேன்.
நான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.
குறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.
இனி போட்டிக்கான குறள்:-

அகரமுதல எழுதெல்லாம் ஆதி.................

அடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.
அடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.
நன்றி கிளம்புங்கப்பா.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

next kuraL, 1st line
இடுக்கண் வருங்கால் நகுக அதனை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

உடுக்கை இழந்தவன் கைபோல..........

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க...

SaranyaBoopathi

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

Next
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு..

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்..

SaranyaBoopathi

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு.............

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

வழுத்தினாள் ..............

nanre sey;athuvum inre sey.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
அடுத்து தொடங்க வேண்டிய குரல் "ஐந்தவித்தான் ஆற்றல்"

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு
ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.

பொறிவாயில் ஐந்தவித்தான்............

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்