குறள் விளையாட்டு

குறள் விளையாட்டு
அன்புடையீர்!
குறள் விளையாட்டின்றி அறுசுவையா

நாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.
நம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா?
இனி போட்டிக்கு வருகிறேன்.
நான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.
குறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.
இனி போட்டிக்கான குறள்:-

அகரமுதல எழுதெல்லாம் ஆதி.................

அடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.
அடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.
நன்றி கிளம்புங்கப்பா.

இந்த குறள் முன்னாடியே சொல்லியாச்சு...
//பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்// - ராஜி
வேறு துவக்கம்......

இடிப்பாரை............

nanre sey;athuvum inre sey.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
அடுத்து தொடங்க வேண்டிய எழுத்து"உட்கப் படாஅர்"

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

தாம்வீழ்வார் மென்றோள்................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
அடுத்த குரள்"குன்றேறி யானைப்போர்"
என்ன யோகி மேடம் பட்டிமன்றத்தில் இன்னும் ஆஜர் போடலையா?

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.
அடுத்த குறள் "உரனென்னும் தோட்டியான் "

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

எண்ணித் துணிக கருமம்............

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

கருமம் சிதையாமல் கண்ணோட.................

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் உலகு.
அடுத்து "சொற்கோட்டம் இல்லது"

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி......

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்