குறள் விளையாட்டு

குறள் விளையாட்டு
அன்புடையீர்!
குறள் விளையாட்டின்றி அறுசுவையா

நாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.
நம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா?
இனி போட்டிக்கு வருகிறேன்.
நான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.
குறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.
இனி போட்டிக்கான குறள்:-

அகரமுதல எழுதெல்லாம் ஆதி.................

அடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.
அடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.
நன்றி கிளம்புங்கப்பா.

வாழ்த்துக்கள் சத்தியாபாலாஜி
திருமணம் எங்கே நடக்கிரது??

மேலும் சில பதிவுகள்