தேதி: April 19, 2010
சாட்டின் துணி
ஊசி, நூல்
பஞ்சு
மார்க்கர்
குஷன் செய்வதற்கு சாட்டின் துணியை தேவையான அளவில் சதுரமாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு துணியை உள்பக்கமாக திருப்பி பஞ்சு அடைப்பதற்கு தேவையான அளவு இடைவெளி விட்டு மற்ற நான்கு பக்கங்களை சுற்றிலும் தையல் போடவும்.

ஒரு பக்கத்தில் துணியின் அளவுக்கு ஏற்றபடி அளந்து அதன் நடுவில் ஒன்று போல் இடைவெளி விட்டு 9 புள்ளிகள் வைக்கவும்.

பிறகு ஒவ்வொரு புள்ளியை சுற்றியும் சிறிய வட்டம் வரைந்துக் கொள்ளவும்.

ஊசி நூல் கொண்டு ஏதாவதொரு வட்டத்தின் மேல் சாதாரணமாக நாம் துணியில் போடும் தையல் போல் போட்டு நூலின் முனையை பிடித்து இழுக்கவும். துணி சுருங்கியதும் நன்றாக கட்டி விடவும்.

இதே போல் மற்ற எட்டு வட்டங்களை சுற்றிலும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

பஞ்சு அடைப்பதற்காக விட்ட இடைவெளியின் வழியாக துணியை வெளிப்பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அந்த துளையின் வழியாக பஞ்சை ஒரு சீராக அடைத்து விட்டு, பிறகு அந்த இடைவெளியை தைத்து விடவும். இப்போது அழகான சதுர வடிவ குஷன் தயார்.

இது போல் உங்களுக்கு விருப்பமான வடிவில் விருப்பமான நிறத்தில் குஷன்கள் தயாரித்து உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதாவில்வாரணிமுருகன் அவர்கள், இந்த குஷன் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

Comments
அழகிய குஷன்
வனிதா மேடம் அழகாக குஷன் செய்வது எப்படி என்று செய்து காட்டி சொல்லிகொடுத்திருக்கீர்கள் நன்றாக இருக்கிறது அழகாகவும் ஈசியாகவும் இருக்கிறது.நன்றிகள் பல.................
அன்புடன்
நீமா.
அழகான நீலக்குயிலே
ஹாய் வனிதா மேடம் அழகாக பண்னியிருகீங்க,வாழ்த்துக்களோடு கூடிய நன்றியும்,அத்துடன் சாட்டின் துணி டொட் வைத்த துணியா வாங்கணும் plz
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
ஆல் இன் ஆல் வனிதா சூப்பர் ஆக
ஆல் இன் ஆல் வனிதா சூப்பர் ஆக இருக்கு :)
வனிதா
சூப்பர் வனி. ;)
- இமா க்றிஸ்
நன்றி அட்மின் !!
குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நீமா, அனாமிகா, பிரபானி & இமா...
மிக்க நன்றி நீமா, அனாமிகா.... :) செய்து பார்த்து படம் அனுப்புங்க.
பிரபானி மிக்க நன்றி."அத்துடன் சாட்டின் துணி டொட் வைத்த துணியா வாங்கணும் " - புரியல எனக்கு... :( நான் கொஞ்சம் மக்கு, தெளிவா சொல்லுங்க ப்ளீஸ். ;)
நன்றி இமா... நீங்க தான் "நீங்களும் செய்யலாம்" பகுதிக்கு தவறாம வரீங்க. சந்தோஷமா இருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
kusan
வனிதா முடிச்சு போடுவதுஎப்படின்னு புரியலபா கொஞம் விலக்கமாக சொல்லுரெஙல ப்லீஸ். மிஸின்ல தைக்கனுமா?இல்ல சன்கிலிதையல்மாதிரி போடனுமா எனக்கு இந்த மாதிரி செய்த்து பழக்கமில்ல விளக்கமா சொல்லுரெஙலா .யாழினியும்,குமரனும் நலமா? சமத்த இருக்கனாதம்பி/
all is well
மதி...
மதி... 4வது படத்தில் இருப்பதை தானே கேட்டிருக்கீங்க??? மிஷின் தையல் இல்லை, சாதாரண சங்கிலி தையல் தான். சுத்தி வரைந்திருக்கும் வட்டத்தின் கோடு மேலேயே தையல் வரும்படி போடுங்க. அப்பறம் புள்ளி வைத்த இடத்தை விரலால் பிடித்து கொண்டு நூலின் 2 முனையையும் சேர்த்து இழுத்தா சுருக்கம் வந்துடும். அந்த நூலை அப்படியே டைட்டா முடிச்சு போட்டுட்டு , 2 சுற்று பூ கட்டுவது போல் அந்த சுருக்கத்தை(நீங்க நடுவிலிருக்கும் புள்ளியை பிடிச்சு இருக்கீங்க இல்லையா அந்த பகுதி) கட்டுங்க. அவ்வளவு தான். புரிஞ்சிதா?? சந்தேகம் இருந்தா கேளுங்க.
யாழினி'யும் குமரனும் நலம். அட்டகாசம் தான் தாங்கலை. :) நீங்க நலமா? இதை ஒரு முறை செய்து பாருங்க சுலபமா வந்துடும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குஷன்
ஹாய் வனிதா, இந்த குஷன் செய்முறை ரொம்ப சிம்பிளாவும், ஈஸியாவும் இருக்கு. சாட்டின் துணி வாங்கி இதுப்போல நானும் செஞ்சு பார்க்க போறேன்.
hai vanitha mam ur kusan
hai vanitha mam ur kusan method super i will try it
vinoja
வினோஜா... மிக்க நன்றி. செய்து பார்த்து அறுசுவைக்கும் படம் அனுப்புங்க. பார்க்க நாங்களும் ஆவலா இருக்கோம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
sahla...
சஹ்லா... மிக்க நன்றி தோழி... நிச்சயம் செய்து பார்த்து படம் அனுப்புங்க... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
samayal super
Full taste
குஷனை சமைச்சுட்டீங்களா???!!! :(
Jalila... எப்போ இருந்துங்க குஷன்'அ சமைக்க ஆரம்பிச்சீங்க???!!! ;) வேறு எங்கோ போட வேண்டிய பதிவு.... எந்த குறிப்புக்குன்னு தேடி போட்டுடுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குஷன் சமைக்க!!
;) x 25
- இமா க்றிஸ்
இமா... எப்படி தான் இதெல்லாம்
இமா... எப்படி தான் இதெல்லாம் வெவரமா உங்க கண்ணுல மாட்டுதோ!!!! :(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vanitha
Vanitha, very nice work. How are the kids doing?
vaany
மன்னிசுங்க
ஹாய் வனிதா, நீங்க என்னை மக்கு என்று சொல்லாம சொல்லீட்டீங்க என்று நினைக்கிறேன்,பரவாயில்லை நாங்க எல்லோரும் நண்பிகளும்,தோழிகளும் தானே!
நான் தவறாக வாசித்துவிட்டேன் 9புள்ளிகள் போட சொன்னீங்க,நான் அதை டொட் துணி என்று நினைதேன் பா
மன்னிசுங்க மா
நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்
வனி
வனி, சூப்பர். குஷன் செய்வது இவ்வளவு சுலபம்னு இவ்வளவு நாள் தெரியாது. பார்க்க ஈஸியாத்தான் தெரியுது.
வாணி... மிக்க நன்றி. :)
வாணி... மிக்க நன்றி. :) குழந்தைகள் நலமாக இருக்காங்க. நீங்க நலமா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிரபானி... நிச்சயமா நான்
பிரபானி... நிச்சயமா நான் உங்களை சொல்லவே இல்லை. நம்புங்கப்பா... :) எனக்கு நீங்க இதை கேட்டீங்கன்னே நீங்க சொல்லி தான் புரியுது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வின்னி... மிக்க நன்றி.
வின்னி... மிக்க நன்றி. பார்க்க மட்டும் இல்லை, செய்வதும் சுலபம் தான். நானே இப்ப தான் கத்துகிட்டேன் ;). அப்போ உங்களால் மட்டும் முடியாம போகுமா... கண்டிப்பா இதைவிட நல்லா செய்வீங்க. ட்ரை பண்ணி படம் அனுப்புங்க ப்ளீஸ். :D
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா, நலமா?
வனிதா, நீங்க & பிள்ளைகள் நலமா? உங்க குஷன் ரொம்ப அழகா இருக்குபா, பாராட்டுக்கள்! ஒவ்வொரு புள்ளியின் சுருக்கத்தின் மீதும் அதே துணியால் கவர் பண்ணிய பட்டன் வைப்பார்களே, அது உங்களுக்கு தெரியுமா?அதாவது அந்த பட்டனுக்கு எப்படி அதே துணியால் கவர் பண்ணுவது என்று கேட்கிறேன். தெரிந்தால் சொல்லுங்கள்!
Asma... Asma... Asma...
அஸ்மா... ரொம்ப தாமதமா பதில் போடுறேன்... மன்னிசுடுங்க :(. நான் சில நாட்களா வராத காரணத்தால் இவற்றை காணல. அதே துணியில் பட்டம் வைப்பது சுலபம்... இதுக்குன்னு கடைல பட்டன் கேளுங்க மெடல் பட்டன் குடுப்பாங்க. அதன் மேல் துணியை சுற்றி அடியில் தைத்து விட்டு பயன்படுத்துங்க. இல்லை என்றால் சாதாரண வட்ட பட்டன் வாங்கி கூட துணி சுற்றி தைத்து விடலாம். முடிந்தால் வேறு குஷன் செய்முறை அனுப்பும்போது நீங்க கேட்டிருக்கும் பட்டன் செய்முறையும் சேர்த்து அனுப்புறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
superb
Hi vani this is so nice. enaku oru doubt irundadu adu vera oruthar ketu nenga ans panni irukenga adanala purinthadu. but round than konjam puriyala. nenga video demonstration pannalame or picture innum konjam big sizela podalame pls
Do or die
ஜமுனா
பின்னூடத்துக்கு மிக்க நன்றி தோழி. நம்ம அறுசுவையில் வீடியோ முறை இதுவரை இல்லை. படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாம்... ;( அடுத்த முறை நிச்சயம் நல்ல தெளிவா அனுப்ப என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். தெரியப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
great
thk u vani. nenga enaku gd friendnu nenaikaren. i am very glad to have u
Do or die
ஜமுனா
உங்களை போல் ஒரு நல்ல தோழி கிடைத்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai vanitha madam
Enakku cushion work thriyum . Athula round cushion model one tha thriyum . Neega enakku vera model eppadi varum solli thainga .Box ethannai variyanum .Eppadi box kulla line varaiyanum evalvu gape irrukanum. solluinga pls .Thank you
dont angry
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
sangeethavijay
இதுவே சதுர வடிவ குஷன் தானே. கட்டங்கள் பிரெச்சனை இல்லை, உங்களின் அளவுக்கு ஏற்றபடி நடு பகுதியை சமமாக பிரித்து கட்டங்கள் வரையலாம். மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா