மைக்ரோவேவ் பால்கோவா

தேதி: April 20, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

பால்பவுடர் (Full Cream Milk Powder) - 3 கப்
பிரவுன் சுகர்(Raw Sugar) - 1 கப்
Thickened Cream (சுகர் போடாத கெட்டியான பால்க்ரீம் என்று கடைகளில் கிடைக்கும்) - 1 கப்


 

மைக்ரோவேவில் வைத்து சமைக்கக்கூடிய பாத்திரத்தில் மேலே சொன்ன மூன்று பொருட்களையும் போட்டு ஒரு கரண்டியால நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை மைக்ரோவேவில் ஹையில் மூன்று நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு வெளியே எடுத்து கரண்டி கொண்டு நன்றாக கலக்கி மேலும் ஒரு 2 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு வெளியே எடுத்து நன்றாக ஒரு முறை கலக்கி ஆறின பிறகு சாப்பிடலாம். பால்கோவா செய்ய 5 நிமிடங்கள்தான் ஆகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள மைக்ரோவேவ் 900 watts அளவுள்ள மைக்ரோவேவ். நேர அளவினை 30 வினாடிகள் வேண்டுமானால் குறைத்து 1100 watt வரை உபயோகிக்கலாம்.


மேலே சொன்ன அதே அளவு, செய்முறையில் பால்பவுடரை ஒரு கப்பாக குறைத்து, தேங்காய்ப்பூ 2 கப்பும் சேர்த்து செய்தால் தேங்காய் பர்பி கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi deva mam

how r u mam ,ur paalgova is very nice,can i prepare with my baby's lactogen2.sorry for typing in english...

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi deva mam

how r u mam ,ur paalgova is very nice,can i prepare with my baby's lactogen2.sorry for typing in english...

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

What is raw sugar

Bharath

தாமதமான பதிலாக இருந்தாலும் யாருக்காவது பயன்படலாம் என்று எழுதுகிறேன். ரா சுகர் என்பது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ரீஃபைன் செய்யப்படாத ஜீனி. வெள்ளை நிற ஜீனியை விட நல்லது. இதற்கு பதிலாக சாதாரண வெள்ளை நிற ஜீனியையும் பயன்படுத்தலாம்.

தேவா அக்கா, உங்கள் பால்கோவா செய்து பார்த்தேன். சுவை அருமையாக இருந்தது. ஆனால் அதுல பால் பவுடர் வாசனை தூக்கலா தெரிந்தது. அது அப்படி தான் இருக்குமா? அந்த வாசனை வராம இருக்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் என்ன பால்பவுடர் உபயொகப்படுத்தினீர்கள் என்று குறிப்பிடவில்லை. இந்த முறையில் பால்கோவா செய்தால் நிச்சயம் யாராலும் பால்பவுடரில் செய்தது என்று கண்டு பிடிக்க முடியாது. ஆனால் நம்ம ஊரில் கிடைக்கும் அமுல்யா, அமுல் பால் பவுடர்கள் நிச்சயம் பால்பவுடர் ஸ்மெல் கொடுக்கும். இந்த வகை பிராண்டுகளைத் தவிர்த்து நெஸ்லே, நிடோ போன்ற பிராண்டுகளின் ஃபுல் க்ரீம் மில்க் பவுடர் உபயோகியுங்கள். உங்களுக்கு மற்ற பிராண்டுகள் கிடைப்பது கடினம் என்றால் 3 ஏலக்காயை ஜீனியுடன் சேர்த்து மிக்சியில் அடித்து சேர்த்துப் பாருங்கள். பால் பவுடர் ஸ்மெல் இல்லாமல் இருக்கும்.