அதிகம் சுமைதாங்கி ஆண்களா?பெண்களா?

என்னை கேட்டால் ஆண்கள் என்றுதான் சொல்லுவேன்...பெண்களின் சுமை சமையலறையோடு முடிந்து விடுகிறது....ஆண்களின் சுமை அலுவலகம் தொடங்கி ஆசனம் வரையிலும் முடிகிறது..பெண்கள் சுமையை பட்டியலிட்டால்..1.சமையல்..2.குழந்தைகள்.3. அவ்வளவுதான்.ஆண்களுக்கு..1.அலுவலகம்....நிதி பிரச்சினை.3.அம்மா மனைவி பஞ்சாயத்து.4.சொந்தபந்த பிரச்சினை...இப்படி அடுக்கிகொண்டே போகலாம்....

கண்டிப்பாக பெண்கள்தான்... கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் புரியும். இந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம்.
சமயலையும் குழந்தைகளையும் மட்டும் பார்த்துக்கொள்ளும் பெண்களை ஆண்மகன்கள்(மிக சிலரை தவிர) விரும்புவதில்லை. அவர்கள் வேலைக்கும் செல்ல வேண்டும் அத்துடன் வீட்டில் சமயல், குழந்தைகள், சொந்த பிரச்சனைகள், உறவினர்கள், நிதி எல்லாவற்றோடு கணவனின் நலனையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி பல சுமைகளை சுமப்பதாள்தான் பெண்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இது யாரும் மறுக்க முடியாத உண்மை...

பெண்கள்தான் வீட்டின் சுமைதாங்கிகள் என்று சொல்ல வந்துள்ளேன்.
ஆண்கள் வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொடுத்தால், அவர்கள் சுமைதாங்கிகளாகி விடுவார்களா என்ன.
உண்மையில் சுமைதாங்கிக் கொண்டு இருப்பவர்கள் பெண்களே.
வீட்டில் இருவரும் வேலைக்கு போகின்றவர்கள் என்று வைத்துக்கொள்வோம், வேலைக்கு போய் வந்த ஆண் அடுத்த நாள் வேலைக்கு போகும் வரை ஒய்வு எடுத்து கொள்கின்றான்.ஆனால் பெண் அப்படி இருக்க முடியுமா? இருக்கத்தான் விடுவார்களா?வீட்டு சுத்தம், சமையல், பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வது,வரவுக்கேற்ற செலவு இப்படி எவ்வளவோ பொறுப்புக்கள்.
ஒரு பெண் கணவன் இல்லாமல் சமாளித்து விடுவாள்.ஆனால் ஒரு கணவன், மனைவி இல்லாமல் பிள்ளைகளையும் வைத்து கொண்டு ஒருநாள் என்றாலும் சமாளிப்பது மிகவும் கஷ்டம்.நான் சில குடும்பம்களில் இதை பார்த்திருக்கின்றேன்.
எனவே சுமைதாங்கி பெண் பெண் பெண்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

kalajee,yogaranium,ellapointugalaium sollivitargal,yen pengalukku nidhi, sondhabandangal office veetuprachanigal ena ella problangal undu.so pegalthan sumaithangi.

life is short make it sweet.

சகோதரர் மொய்தீன் அவர்களே, எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

பெண்களின் சுமை சமையலறையோடு முடிந்துவிடுகிறதா?

உங்கள் பட்டியலுக்கே வருகிறேன்.
பெண்களுக்கு
1. சமையல் - என்றோ ஒருநாள் சமைத்தாலே ஆண்கள் சொல்வது - “என்னால் ஒருநாளே சமாளிக்க முடியவில்லை. இவள் எப்படித்தான் தினமும் செய்கிறாளோ?”

2. அன்பு சகோதரரே ஒரு ஒரே நாள் முழுக்க குழந்தைகளை சமாளித்துப்பாருங்களேன். அப்பொழுது தெரியும்.

ஆண்களுக்கு
1.அலுவலகம் - நிதி பிரச்னை - இன்று எங்கோ சில வீடுகளில் தான் பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.

அம்மா மனைவி பிரச்னை - சொந்த பந்த பிரச்னை - அடடா, பிரச்னையே இல்லாமல் ஹாயாக இருக்கிறாயா என்று முதலில் உங்கள் மனைவியை கேட்டீர்களா?

புகுந்த வீட்டில் பொறியில் மாட்டிய எலியாக எத்தனை பெண்கள் திண்டாடுகிறார்கள் தெரியுமா?

முக்கியமான சுமையை விட்டுவிட்டீர்களே தோழரே, இதற்கு உங்கள் இனமே உங்களை மன்னிக்காது. அம்மா வயிற்றில் 10 மாதம் குடியிருந்தீர்களே, அதையே மறந்து விட்டீர்களே.

மீண்டும் வருவேன்.
அன்புடன்
ஜேமாமி

Hi,yogi,sheik,jayanthi,& all friends.Enna porutha varaikum men,women rendu perumthaan.anaivarum sollvathu pola men ku irukum sumaigal oruvazhi endraal,women galuku irukum sumaigal oru vazhi.Athanaal men,women eruvarum sumaithaangigal.Ithu my opinion.Yenna sheik yeppadi irukinga?

நலம்தான் கோகி மேடம்.நீங்க எப்படி இருக்கிங்க?ஒறே போர் அடிக்குது வாழ்க்கை...வைரமுத்து சொன்னது போல......
"ஒரே மாதுரி சம்பவங்களால் நான் சலித்து விட்டேன்..
தினுமும் கிழக்கே தோன்றி மேற்க்கே மறைய நான் ஒன்றும் சூரியன் இல்லை"

என்ன வாழ்க்கை போங்க....!!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கோகி,
ஆண் பெண் இருவரும் சுமைதாங்கிகள்தான். இல்லை என்று சொல்லவில்லை.
திரு ஷேக் அவர்கள் கேட்டது இருவரில் யாருக்கு சுமை அதிகம் என்று. நிச்சயமாகப் பெண்ணுக்குத்தான்.

திரு ஷேக் அவர்களே என்ன பதிலைக்காணும்.
அன்புடன்
ஜேமாமி

நிச்சயமாய் ஆண்கள்தான் jayandhi,koki மேடம்...
பத்துமாதம் சுமப்பது கஸ்டம்தான்..ஒகே..
ஆண்மகன் என்பவன் நாட்டாமை மாதிரி....எந்த பிரச்சனை குடும்பத்தில் வந்தாலும் அவன் த்லைதான் உருளும்..அவன்தான் எல்லாவற்றிர்க்கும் முடிவு எடுக்க வெண்டும்.அவனுக்கு பாரம் அதிகம்...பெண்களுக்கு ஆண்களுக்கு ஒரு நல்ல மனைவியாய் இருந்தால் போதும்.ஆனால் ஒரு ஆண் மகனுக்கு மனைவிக்கு ஒரு நல்ல கனவனாய்,பெற்ரோருக்கு ஒரு நல்ல மகனாய்,வேலை பார்க்கும் இடத்தில் ஒரு நல்ல அடிமையாய்,எல்லா பிரச்சனைக்கும் ஒரு நல்ல நாட்டாமையாய்.....எத்தனை சுமை தெரியாதா உங்களுக்கு......

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அதுசரி!
சூப்பரான தலைப்புதான். ஆனா, கலந்துக்கதான் எனக்கு நேரம் இல்லை.
முடிந்தால் நாளை வருகிறேன். ஜெயந்தி மாமி கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்.
ஷேக் சார் ரொம்ப சுலபமாய் சொல்லிட்டார். அதனை ஒருநாள் பெண்கள் இடத்தில் இருந்து சமாளித்து பார்த்தால் தெரியும்.
இன்னைக்கு ஸ்கூல் லீவ். என் பசங்க பண்ற கலாட்டாவில் காலையில் இருந்து பைத்தியம் பிடிக்குது.
காலையில் என் கணவர் பந்தாவாய் ,"பசங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தனித்தனியாய் சமைக்க சொல்லிட்டு கிளம்பிட்டார்.
ஆனா,எனக்கு ஒரு டீ குடிக்க கூட காலையில் இருந்து நேரம் இல்லை.
எல்லா வேலையும் முடிந்து காலை டீ இப்பதான் போட்டுட்டு வந்து உட்கார்றேன்.நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான். ( இதை டைப் பண்றப்ப மணி மதியம் 12)
இந்த கொடுமையில் என் கணவர் அப்பப்ப," வீட்டில் சும்மாதானே இருக்க இதைக்கூட செய்து வைக்க கூடாதான்னு"(ஜாலியாத்தான்) ஏதாவது சொல்றப்ப வரும் பாருங்க கோபம்.
உண்மையாவே நான் வீட்டில் "சும்மா" இருந்தா இந்த வீட்டின் நிலைமை எப்பிடி இருக்கும்னு காமிக்க ஆசையாத்தான் இருக்கு.
கண்டிப்பாய் அதிகம் சுமையை தாங்குவது பெண்களே. சொல்வது சப்பைக்காரணமாய் இருந்தாலும் (அதாவது ஆண்கள் பார்வையில்)
அனுபவிப்பவர்களுக்கு தெரியும்.

இன்னும் சொல்ல நிறைய காரணங்கள் இருக்கு. ஆனா நேரம்தான் இல்லை!.

என்ன எல்லாருமே சமையல் குழந்தைனு மட்டுமே சொல்லுரீங்க அதெல்லாம் யாரும் மருக்கமுடியாத உண்மை ஆனால் அவங்க மன சுமைய think பன்னி பாருங்க அவங்களுக்கு வாழ்க்கை fullஆவே மனசுமையோடதான் இருக்காங்க மத்ததவிட மனசுமை எவ்வளோ கக்ஷ்டமுனு பெண்களுக்கு மட்டும்தான் தெரியும்

மேலும் சில பதிவுகள்