தேதி: April 23, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சுரைக்காய் - ஒரு கீற்று
பயத்தம் பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 9
கடுகு - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் தேக்கரண்டி
கல் உப்பு - கால் தேக்கரண்டி
சுரைக்காய் சிறு சிறுத் துண்டுகளாக கீறி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சுரைக்காயை போட்டு காய் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

வேறொரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுரைக்காய் வெந்ததும் அதில் 1/2 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து ஏழு நிமிடங்கள் வேக விடவும்.

தேங்காயில் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுரைக்காயுடன் வேக வைத்திருக்கும் பயத்தம்பருப்பை நன்கு மசித்து விட்டு சேர்க்கவும்.

பிறகு ஒரு வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

சுரைக்காய் கூட்டில் மஞ்சள்தூள் மற்றும் கடுகு, வெங்காயம் தாளித்தவைகளை சேர்க்கவும்.

இதனை ஒன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அரைத்த தேங்காய் விழுதை சுரைக்காய் கூட்டில் சேர்த்து கிளறி விடவும்.

மீண்டும் மூன்று நிமிடம் கூட்டை கொதிக்கவிட்டு இறக்கி வைத்து பரிமாறவும்.

சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.

இந்த சுரைக்காய் கூட்டு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் சமைத்த உணவு குறிப்புகள் சிலவற்றை அறுசுவையில் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

Comments
Vanakam senbaga madam, how
Vanakam senbaga madam, how are u? iam new comer in this blog, i just joined in arusuvai.com iam very happy to be a member in arusuvai and thanks for giving this, and please joint me as ur friend and i was searching this type of recipe particularly on bottle gourd i know to add with sambar and i will prepare "surakai payasam" only but now i had anotherone kottu thanks madam and its very easy and good recipe i will definetely try this thank u i introduce myself i my next mail take care.
ஹாய் நித்யா
அறுசுவைக்கு புதிதாய் வந்திருக்கும் நித்யா வருக. அறுசுவையில் அனைவரும் என் தோழி தான். இதை ஏன் கேட்டுகிட்டு இருக்கீங்க வாங்க பழகலாம். சுரைக்காய் கூட்டை செய்து பார்த்துட்டு சொல்லுங்க. சுரைக்காயில் எனக்கு கூட்டு, பொரியல், சாம்பார் தான் செய்ய தெரியும். உங்கள் சுரைக்காய் பாயாசம் குறிப்பினை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவும்.
senbagababu
செண்பகா... செண்பகா... செண்பகா...!!!
செண்பகா... நாளைக்கு இந்த கூட்டு தான் எங்க வீட்டில். செய்துட்டு சொல்றேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
kavitha
இனிய செண்பகா மேடம் ,
நான் உங்களது craft பக்கத்துக்குரசிகை இந்த கூட்டு எங்கள் வீட்டில் மிகவும் பிரபலம் இதில் கொஞ்சம் சீரகம் ,பச்சை மிளகாய் ஆகியவற்றை தேங்காயோடுஅரைத்து சேர்த்தால் வாசனை மிகவும் நன்றாக இருக்கும் தப்பாக நினைக்கவேண்டாம் ஒரு சின்ன விஷயமாக எடுத்து கொள்ளவும்
all the very best
என்றும் அன்புடன்,
கவிதா
செண்பகா
செண்பகா... இன்று உங்க கூட்டு தான்... வந்திருந்த விருந்தினருக்கு ரொம்ப பிடித்தது. நானும் தான் சாப்பிட்டேங்க... சூப்பரா இருந்தது. எப்பவும் அம்மா கடலைபருப்பு தான் சேர்ப்பாங்க. கூடவே தேங்காய் துருவலாகவே சேர்ப்பாங்க. நீங்க சொன்ன மாதிரி அரைத்து சேர்த்ததும், பயத்தம் பருப்பு சேர்த்ததும் வித்தியாசமா நல்லா இருந்தது. விட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது. மிக்க நன்றி செண்பகா நல்ல குறிப்பு குடுத்ததுக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் செண்பகா
சுரைக்காய் கூட்டு நன்றாக இருந்தது. நன்றி.
தேன்மொழி - பெயர் பிடித்திருக்கிறதா? ரொம்ப நன்றி. எனக்கும் பிடிக்கும். பெயர் பெருமை பெயரைத் தெரிவு செய்த என் அப்பாவைத்தான் சேரும்.....
நவீனா மிகவும் அழகாக இருக்கிறாள். என் அன்பு முத்தங்கள்.
கவிதா
இனிய கவிதா,
சாரி உங்க பதிவே பார்க்கல. பின்னுட்டத்துக்கு நன்றி, அது என்ன இனிய செண்பகான்னு கொடுத்து இருக்கீங்க? என் மேல் என்ன ஒரு பாசம் பா:-) நீங்க சொல்லுவது போலவும் செய்யலாம், சிலபேருக்கும் சீரக வாடை பிடிக்காது அதனால் தான் இப்படி செய்தேன். இதில தப்பாக நினைக்க ஒன்றுமே இல்லை
அன்புடன்
செண்பகா பாபு
senbagababu
ஹாய் வனிதா, தேன்மொழி
செய்து பார்த்து பின்னுட்டம் கொடுத்ததுக்கு நன்றி வனிதா. உங்களுக்கு மட்டுமல்லாமல் விருந்தினர்களுக்கும் பிடிச்சிருந்ததை கேட்க ரொம்ப சந்தோஷம் வனிதா.
தேன்மொழி ரொம்ப நன்றி
senbagababu
suraikkai koottu
the suraikkai kotu is very tasty
ஹாய் தமிழ்
உங்க பாராட்டிற்கு நன்றி தமிழ்.
senbagababu
ஹாய் செண்பகா அக்கா
ஹாய் செண்பகா அக்கா நலமா ?நான் சுரக்காய் கூட்டு செய்தேன் என்ன வென்று சொல்லுவதம்மா ஆகா சுப்பர் ரொம்ப ரசித்து சாப்பிட்டேன் விருப்ப
பட்டியலில் சேர்துடன் ரொம்ப ரொம்ப நன்றி
Senba Akka
Hello Senba Akka ,,, neenga the enaku help pannanum ... pls sollunga jelly epadi seiyanum.....
BE HONEST
Gayathri Elango
ஹாய் nasreengani
நான் நலம். நீங்கள்? செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தந்தமைக்கு ரொம்ப நன்றி.
senbagababu
ஹாய் காயத்ரி
சாரி காயத்ரி என்னால் உங்களுக்கு உதவ முடியாது எனக்கு கடல் பாசி செய்ய தெரியாது. அறுசுவையில் குறிப்புகள் இருக்கு அதோட லிங்கை உங்களுக்கு தருகிறேன் பார்த்து செய்து பாருங்க.
http://www.arusuvai.com/tamil/recipes/200
senbagababu
நான் நல்லா இருக்கேன்
நான் நல்லா இருக்கேன் இன்னும் நிறைய குறிப்பு தர வாழ்த்துக்கள் உங்கள் கைவினை பொருள் எல்லாம் ரொம்ப அருமை
சுரைக்காய் கூட்டு
இன்று உங்க சுரைக்காய் கூட்டு செய்தேன்.சுவையாக நன்றாக இருந்தது.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
செண்பகா
இன்று எங்கள் வீட்டில் உங்க சுரைக்காய் கூட்டு. ;) சுவையாக வந்தது. குறிப்புக்கு நன்றி.
- இமா க்றிஸ்
Your receipe came out very
Your receipe came out very tasty.. its very easy to prepare & tasty too.. thank u so much..
Regards,
Raji
Enjoy the life
செண்பகா
செண்பகா,
நேற்று லன்ச்க்கு உங்க சுரைக்காய் கூட்டு செய்தேன். நல்ல சுவையாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் முக்கியமாக என் பசங்களுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நல்லதொரு குறிப்புக்கு நன்றி செண்பகா! :)
அன்புடன்
சுஸ்ரீ
மிக்க சுவை. நன்றி.
உங்கள் குறிப்புகளை படித்து மூன்று ஆண்டுகளாக சுரைக்காய் கூட்டு தயாரித்து சாப்பிடுகிறேன். இன்றுதான் பதிவு இட வேண்டும் என்ற சொரணை வந்தது. அந்த அளவுக்கு உங்கள் சுரைக்காய் கூட்டு மெய்மறக்க செய்திருந்தது. இன்றும் மதியம் அதேதான். நன்றி.