ஆன்லைனில் புடவை வாங்குவது சரியானதா???

அன்பான தோழிகளே!
எனக்கு ஒரு சந்தேகம்?? ஆன்லைனில் புடவை வாங்குவது சரியானதா?
என் தோழி ஒருவர் ஆன்லைனில் கிரிடிட் கார்டு மூலம் பட்டுபுடவை எடுக்க ஆசைப்படுகிறார்.
இங்கு கடைகளில் பட்டுப்புடவை விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
யாராவது ஆன்லைனில் புடவை வாங்கியிருக்கிறீர்களா?
வாங்கியிருந்தால் அதனைபற்றிய விபரத்தினை தயவுசெய்து
தெரிவிக்கவும்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

சரியா தவறா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் நானானால் வாங்க மாட்டேன். ;)

சேலை படத்தில் பார்க்க பளபளா என்று அழகாக இருக்கலாம். கையில் தொட்டால் டெக்க்ஷர் எப்படி இருக்கும், சேலை பாரமா இல்லையா, நடுவே டிசைனில் / துணியில் பழுது இருக்கிறதா இல்லையா என்பது எதுவும் படத்தில் தெரியாது என்பது என் எண்ணம். நிச்சயம் சரியான வண்ணம் தெரிந்து கொள்ள முடியாது. ;( கண் ஏமாற்றி விடும். நானே அழகில்லாத பல பொருட்களை அழகாகத் தெரிவது போல் படம் பிடித்திருக்கிறேன். ;)

சேலை - மனதுக்குப் பிடிக்காவிட்டால் வெளியே அணிந்து போக மாட்டேன். வேறு வழி இல்லாமல் அப்படி அணிந்து கொண்டாலும் என் கவனம் முழுக்க சேலையில் தான் இருக்கும். ;) நிகழ்ச்சியில் மனம் ஒட்டாது. ;)
இதற்காக வீட்டில் அணிந்து கொண்டிருக்க முடியுமா, என்ன! ;)
- இது இமா

‍- இமா க்றிஸ்

hi sai geetha, imma sonnathuthan sari nanum appadi edukkamaten,neril senru edukkumpothey silasamayam kadayil nandraga irukkum, pinnal veetil vanthu parthal pidikkadhu so on line saree not goodpa.

life is short make it sweet.

இமா,கீதாஜி!
ஆலோசனைக்கு ரொம்ப நன்றி!
நானும்கூட இதைத்தான் சொன்னேன். இருந்தாலும் அவங்க ரொம்ப ஆசைப்பட்டதால் யாராவது வாங்கியிருந்தால் அவர்களுக்கு சொல்லலான்னு நினைச்சுதான் கேட்டேன்.
Rathi Creations.com, Onlinesarees.com, Pothys, RMKV
இந்த வெப்சைட்டில் எல்லாம் நானும்கூட பார்த்தேன். பார்க்க நல்லா இருக்கு. ஆனா, நீங்க சொன்னாற்போல் அது நேரில் பார்க்க எப்பிடி இருக்குமோ தெரியாது.
சில வெப்சைட்டில் அவங்களே, "கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் கலர் வித்தியாசம் வரலான்னு" போட்டிருக்காங்க.
உடனடியாய் பதில் போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க!

onlinela dress vangurathu nallathu illa because nan oru programla pathen onlinela oru pudavai pathu irukanga money pay panni mudintha piragu veetukku vantha pudavai vara onnu so onlinela pudavai vanga vendam

மேலும் சில பதிவுகள்