சர்க்கரை பொங்கல்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - கால் கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 5


 

வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீரில் 2 கப் குறைத்துக் கொண்டு அதற்கு மாற்றாக 2 கப் பாலை ஊற்றிக் கொள்ளலாம்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.
பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும்.
அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும்.
தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
மீதி உள்ள நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவப்பாக வறுத்து பொங்கலில் போடவும்.
ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கொள்ளவும்
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம், தட்டிய மிளகுத்தூள், முந்திரிப்பருப்பு முதலியவைகளைப் போட்டு சிவக்க வறுத்து பொங்கலில் போட்டு நன்கு கிளறி விடவும்.


மேலும் சில குறிப்புகள்