டி.வி சீரியல்களால் பெண்களுக்கு தீமையா?நன்மையா?இதில் ஆண்களும் பாதிப்படைகிறார்களா?

காலையில் இருந்து மாலை வரை...எக்கா செல்லமே நாடகம் பாத்திங்களா?செல்லம்மாவ ஹோட்டல விட்டு விரட்டிடாங்களா?இதே பேச்சுதான்.சீரியல் பேச்சு....அம்மாடியோவ்....இது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்

நானும் செல்லம்மா சீரியல் பார்ப்பேன்.
ஆமாம் நீங்கள் சொல்வது போல் செல்லம்மாவை ஹோட்டலை விட்டு துரத்தீட்டான்கள்.அதிலும் ஒரு சந்தோசம் செல்லம்மாவும், வடமலையும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேடம் இங்கேயுமா உங்களது சீரியல் பேச்சு.அதால பெண்களும்,ஆண்களும் பாதிப்படைகிறார்களா என்பதுதான் தலைப்பு பா.அய்யோ இறைவா என்னை காப்பாத்து

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

na nimmi,

enna poruthavarai adu pengaluku theengu daan,bcoz naanum parpe,ada parka parka aasai niraya varum innum appdi ye ukkandu parthu kittey irukanum pola thonum,adanal veetil oru velaum nadakadu,na eppaum parka matte but parkura annaiku enga veetil sandai daa nadakum,yaena ada parthu kittu na onnum seidu iruka matte.apprum ada oru jollya partha onnum theriyadu,adaoda namma life compare panna adu yaaraaga irundalum problem.

சீரியல் பொறுத்தவரை நடகங்களா.... நினைத்து பார்த்த தப்பியில்லை.தமது வாழ்கையில் நடக்கும் ஒரு விஷயமா பார்த்தா அதிக தீமையை தான் கொடுக்கும் . இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் சீரியலை விரும்பி பார்கிறார்கள் . இதனால் வீட்டில் சண்டை வருவது ஒரு புறம் இருக்க அதிக பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆள் ஆகிறார்கள் .இது தேவையா? பொழுதுபோக்குக்கு சீரியல் பார்ப்பது தப்பில்லை .பொழுது பூரா சீரியல் பார்ப்பது நிச்சயம் தப்பு . இதனால் சில இடங்களில் சண்டை வருகிறது ஆனால் பல இடங்களில் சண்டையே வருவதில்லை ஏன் தெரியுமா ? ... அதற்க்கு கூட நேரம்மில்லை (சண்டை போடும் நேரத்தில் சீரியல் முடிஞ்சிட கூடத்தில அதான்)

//செல்லம்மாவ ஹோட்டல விட்டு விரட்டிடாங்களா?இதே பேச்சுதான்.// ம். //சீரியல் பேச்சு.// யார் யாரெல்லாம்! ;) சீரியல் பார்க்கிறாங்க என்று இதிலிருந்து தெரியவரப் போகிறது. ;))
~~~~~~~~~~
பெண்களுக்கு நன்மை - பொழுது போக்கு, அப்படியே லேட்டஸ்ட் புடவை டிசைன், சுடி டிசைன்லாம் தெரியவரும்.

பெண்களுக்கு தீமை - யோகராணியை மாதிரி தலைப்பைப் பார்க்காமல் பதிவு போட்டு மூக்குடைபட வைக்கும். (ஷேக், இந்தம்மா உங்களைக் கலாய்க்கிறாங்க! பத்திரம்.) ;)))

ஆண்களும் பாதிப்படைகிறார்கள் - சொல்லுங்க ஷேக், நீங்க இப்ப அடைந்திருக்கிறதுக்குப் பேர் பாதிப்பா இல்லையா!!! ;)) மற்றது புதுசு புதுசா புடவை, சுடி வாங்கிக் கொடுக்கிறது பர்ஸுக்கு பாதிப்பு. ஆகவே, பாதிப்புத்தான் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். _()_

(ஒரு தடவையாச்ச்சும் ஷேக் மொஹிதீனுக்கு இமா சப்போர்ட்டா பேசணும்ல, அதான்) ;))

‍- இமா க்றிஸ்

யோகி..சீரியல் இல்லாமல் நாள் ஓடாதுனு தான் நான் சொல்வேன்.நாணும் 2,3பார்பேன்...இப்போ நாதஷ்வரம் நல்லா போகுதுல்ல,,,நீங்க பார்பீர்கலா...

hi, nanum serials parpen,ennai pole thaniyaga veetil irruppavargal enna seivathu aanal nal fullaga illai,selectivaga parppen. ippodhu nadhasvaram,thirumathi...,urugal thatsall. unmail tv aerials nam nerathai sappidukirathu antha nerathil gust vanthal sariyaga gavanikka mudivathilai,nam velaiyaga cooda veliye poga manathey varadhu,so ithil naladum kettadum sernthu irrukku. pozudhu pokkaga parkkalam athey velaiyaga irrukka coodadhu.

life is short make it sweet.

டிவி சீரியல் பார்ப்பதால் அதிகம் தீமை பெண்களுக்கே என்று சொல்கின்றேன்.
மன அழுத்தங்கள் அதிகப்படும் டி வி தொடர் பார்த்தால். அதனால் வரும் பிரச்சனைகள் வாழ்வை இழக்க வைக்கும். பாவம் பெண்கள்.
எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
இரவில் வரும் சீரியல்களையாவது மன்னித்துவிடலாம்,இந்த மதிய சீரியல்கள் இருக்கிறதே.....மட்டமான அந்த சீரியல்களால் எத்தனை வீடுகளில் பிளவு ஏற்படுகிறது தெரியுமா?கொடுமைக்கார மாமியாருக்கு தண்டனைக்கிடைக்கும்போது பார்த்துக்கொண்டிருக்கும் மருமகள்கள் பக்கத்தில் இருக்கும் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே 'அவளுக்கு அப்படித்தான் வேனும் இந்த ஜென்மங்களெல்லாம் திருந்தவே திருந்தாது'என்று கமெண்ட் அடிப்பார்கள். அவ்வளவுதான் சண்டை ஆரம்பம்.

தொடரில் வரும் விதிகள் (எல்லா தொடருக்கும் பொருந்தும்)

எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.

எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.

எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.

எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.

எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.

எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.

ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.

இதுக்கு என்ன செய்யலாம்??????????????

டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள்.
பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சரியா சொன்னிங்கப்பா யோகரானி.நாலு வார்தை சொன்னாலும் நறுக்குன்னு சொன்னிங்க.எனக்கு எப்போதும் ஆதரவா பேசுறது நீங்க மட்டுந்தான் பா.நன்றி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்னை பொறுத்தவரை இரு தரப்பினருக்கும் சீரியல் தீமைதான். எல்லா சீரியல்லயும் ரெண்டு பொண்டாட்டி கதை தான் இது நாட்டுக்கு தேவையா.சினிமாவில் இந்த மாதிரி பரவியது பத்தாது என்று வீட்டுக்கு வந்து தீமை செய்கிறார்கள். கணவன் வீட்டுக்கு வந்தா மனைவிகள் அவரை கவனிப்பதை விட சீரியலுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அது வெறும் நாடகம் என்பதை மறந்து அதை பற்றியே நாள் முழுக்க பேச்சு. இப்போது சில ஆண்களும் இதை பார்க்கத்துவங்கியதுதான் கொடுமை.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்