நம்ம வீட்டு குட்டீஸ்ன் லூட்டீஸ்

நம்ம வீட்டு குட்டீஸ்ன் லூட்டீஸ் நாட்டீஸ் இன்னொசென்ஸ் எல்லாத்தையும் இதுல போடலாமே,

பரவாயில்லிங்க வளந்த குட்டீஸுந்தானுங்க..................

என் குட்டியப் பத்தியே மொதல்ல சொல்றேங்க.,

என் பையன் U.A.E ல இருந்ததினாலே அவனுக்கு தீபவளின்னாலே என்னனு தெரியாது. இப்போ அவனுக்கு முன்றரை வயசு இருக்கும்போது தீபாவளிக்கு ஊருக்குப்போனோம். புது துணி வாங்கினால், புது சூ வாங்கினால் இப்பவே போடலாம்பான். அப்பப்ப நான் தீபாவளி அன்னிக்கு போடலாம். தீபாவளி இன்னும் ரெண்டு நாள்ல வரும், முணு நாள்ல வரும்னு சொல்லிட்டே இருப்பேன்.
தீபாவளிக்கு முதல் நாள் எங்கள் வீட்டுமுன்னாடி விளம்பர பேனர் வைச்ச ஆட்டோ வந்து நின்னுச்சு, அப்ப நானும் எங்க பக்கத்துவீட்டு அக்காவும் தீபாவளி வந்துருச்சில்ல அதான்னு பேசிக்கிட்டோம். இதை பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த என் பையன் "பாட்டி தீபாவளி வந்தாச்சு, தீபாவளி வந்தாச்சு" ந்னு சொல்லிட்டே எங்க அம்மாகிட்ட ஓடினான். இதைக் கேட்டு நாங்க விழுந்துவிழுந்து சிரித்தோம். அப்புறம் அவனுக்கு புரியவைக்க ரொம்ப பாடுபட்டு அதுக்குள்ள தீபவளியே வந்தது வேரு கதை.
இப்படி உங்க வீட்டுலேயும் நடந்த பல சுவையான குட்டீஸ் நிகழ்ச்சிகளை இங்கு போடலாமே. நாங்களும் சிரித்து ரசிப்போமுங்க

மேலும் சில பதிவுகள்